ஜெயிலுக்கு போன ஆனந்த்.. ஐஸ்வர்யா செய்த உதவி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், மீனாட்சி ஜானகி பிடித்து கதறி அழுதுக்கொண்டு இருக்க, தீபா கீழே கிடக்கும் தாலியை எடுத்து பூஜை செய்து மீனாட்சி அக்கா வாழ்க்கைல எந்த பிரச்சினையும் வரக்கூடாது அவங்க பழையபடி ஒன்று சேர்ந்து வாழணும் என பிரார்த்தனை செய்கிறாள். அபிராமி, ஆனந்த் செய்ததை நினைத்து வருத்தத்தில் இருக்க அண்ணாமலை அபிராமியை தேற்ற முயற்சி செய்கிறார்.
இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வரும் போலீஸ், இங்க ஆனந்த் யாரு என கேட்கின்றனர். கட்டின பொண்டாட்டி இருக்கும்போது விவாகரத்து கூட வாங்காமல் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு வரியா? மீனாட்சி தான் உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க என்று கைது செய்ய வந்திருப்பதாக சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கைது செய்த போலீஸ்: இதையடுத்து கார்த்திகை தீபம் சீரியலில் இன்று, ஆனந்த் செய்தது மிகப்பெரிய தப்பு. அதனால அவன் கொஞ்ச நாளைக்கு ஜெயிலில் இருப்பதுதான் சரியாக இருக்கும் என்று அபிராமி சொல்லியதை அடுத்து, போலீஸ் ஆனந்தை செய்து செய்துவிடுகின்றனர். இதையடுத்து ஐஸ்வர்யா மற்றும் ராஜேஸ்வரி இருவரும் கூட்டு சேர்ந்து கொண்டு ஆனந்தை தங்களது கைக்குள் கொண்டு வர திட்டம் போட்டு, ஸ்டேஷனுக்கு வருகின்றனர்.

ஐஸ்வர்யா செய்த உதவி: அப்போது, ஆனந்திடம் பேசும் ராஜேஸ்வரி, நீ செய்தது பெரிய தப்புதான் இருந்தாலும் நான் உன்ன பெயிலில் எடுக்கிறேன். உன்னை நம்பி வந்த ரியாவுக்கும் என் சப்போர்ட் இருக்கு என்கிறாள். அதுமட்டுமின்றி நான் தான் உன்னை பெயிலில் வெளியே எடுத்தேன் என்ற விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது. அப்படி தெரிஞ்சா பெரிய பஞ்சாயத்து ஆகிடும் என்று சொல்ல ஆனந்தம் இப்போதைக்கு வெளியில் வந்தால் போதும் என்பதால் இதற்கு ஒப்புக்கொண்டு இவர்களுடன் கைகோர்க்கிறான்.

சொத்தை பிரிங்க: வெளியே வந்த ஆனந்த் கோபத்துடன் வீட்டுக்கு வந்து இனிமே எதுவும் சரிப்பட்டு வராது ஸ்டேஷன் வரைக்கும் அனுப்பி என்னை ரொம்ப அவமானப்படுத்திட்டீங்க, சொத்த பிரிங்க என்று கேட்க அபிராமி உடைந்து போக கார்த்திக் இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் கொஞ்சம் அமைதியா இரு, பார்த்துக்கலாம் என்று ஆனந்தை அமைதிப்படுத்துகிறான். அபிராமி உடைந்து போயிருக்க அவளுக்கும் ஆறுதல் சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள கார்த்திகை தீபம் சீரியலை பாருங்கள்.


Click it and Unblock the Notifications











