ரேவதி கழுத்தில் தாலி ஏறுமா? மாப்பிள்ளையை கடத்தியது யார்?கார்த்திகை தீபம் சீரியல்!

சென்னை: பரமேஸ்வரி சாமுண்டீஸ்வரியிடம், அன்னைக்கு நாங்க பண்ணது தப்புத்தான் எங்களை மன்னித்துவிடு, என் பேரனுக்கு ரேவதியை கல்யாணம் பண்ணி கொடு, நான் உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்லி பாட்டி காலில் விழப்போக அனைவரும் தடுக்கின்றனர். அப்போதும் மனம் இறங்காத, சாமுண்டீஸ்வரி என்ன, கல்யாணத்தில் வந்து நாடகமாடுறீங்களா.. ஓரமா போய் கல்யாணத்தை பாருங்க என்று சொல்லிவிடுகிறாள்.

அடுத்ததாக மகேஷ் குடோனில் அடைத்து வைக்கப்பட்டு இருக்க, ரவுடிகள் சாமுண்டேஸ்வரிக்கு போன் செய்து மேடம் நீங்க சொன்ன மாதிரியே அவனை கடத்திட்டோம் என்று சொல்கின்றனர். இங்கே மாயா மகேஷை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கிறாள் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் மகேசை காணவில்லை என சாமுண்டீஸ்வரி போலீசில் புகார் அளித்த நிலையில், போலீஸ் மண்டபத்திற்கு வந்து விசாரிக்க ரேவதி எனக்கு டிரைவர் ராஜா மேலே தான் சந்தேகமா இருக்கு, ஆரம்பத்தில் இருந்து இந்த கல்யாணம் நடப்பது அவருக்கு பிடிக்கவில்லை என்று சொல்கிறாள். அதே போல, மாயாவும், போலீசிடம், இந்த டிரைவர் ராஜா, ரேவதியை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறான். கல்யாணத்தை நிறுத்த பல வகையில் பிளான் போட்டோன். கடைசியில் இப்போது மாப்பிள்ளையை கடத்தி விட்டான் என்று சொல்கிறாள். இதையடுத்து, போலீசார் கார்த்திக்கை கைது செய்கின்றனர். உடனே அருண் 3 பெரிய லாயர்களுக்கு போன் செய்து கார்த்தியை வெளியே எடுக்க ஏற்பாடு செய்ய சொல்கிறான்.

எல்லாம் சாமுண்டீஸ்வரியின் பிளான்: இதைப்பார்த்த ராஜராஜன் சாமுண்டீஸ்வரி என்ன செய்கிறாள் என்பது புரியாமல் இருக்க, நான் ராஜாவுக்கு சப்போர்ட் பண்றது தெரிந்தா ரேவதிக்கு என் மேல சந்தேகம் வரும். அதனால் தான், அப்படி சொன்னதாகவும் ராஜாவை வெளியே எடுக்க லாயர்களை அனுப்பி இருப்பதாகவும் சொல்கிறாள். இந்த விஷயம் டி.ஐ.ஜி-க்கு தெரிந்து அவர் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து கார்த்தியை வெளியே விட சொல்கிறார். இதனால் போலீஸ் மீண்டும் கார்த்தியை மண்டபத்திற்கு அழைத்து வந்துவிட்டு, அவரை விசாரணை செய்தாச்சு.. அவருக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கிறார்கள்.

zee tamil Karthigai Deepam

டிரைவர் தான் மாப்பிள்ளை: உடனே சாமுண்டீஸ்வரி, மகேஷ் எங்க போனானு தெரியல, யார் கிட்டடையும் சொல்லாம எங்கேயோ போய்ட்டான். இனி மேலும் மகேஷ் வருவன் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. தன்னன்கூட காப்பாத்திக்க தெரியாத ஒருத்தன் எப்படி உன்னை வெச்சி வாழ்வான் என்று எனக்கு தெரியவில்லைங ஒரு பெண் திருமண கோலத்தில் மணமேடை வரை வந்துவிட்டு கல்யாணம் நடக்க வில்லை என்றால், அந்த பெண்ணுக்கு மீண்டும் கல்யாணமே நடக்காதுனு சொல்லுவாங்க, இதனால், எக்காரணத்தை கொண்டும் கல்யாணம் நிற்கக்கூடாது. இப்போ நான் ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன். டிரைவர் ராஜாவுக்கும் ரேவதிக்கும் கல்யாணம் செய்து விடலாம் என்று சொல்ல ரேவதி அதிர்ச்சி அடைகிறாள். டிரைவர் ராஜா ரொம்ப நல்லவன், நம்ப குடும்பத்திற்கான அவன் நிறைய விஷயத்தை செய்து இருக்கிறான் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X