அடுத்தடுத்து குடும்பத்தில் விழும் பேரடி.. விபரீத முடிவெடுத்த அபிராமி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், போலீஸ் கைது செய்து அழைத்து சென்ற ஆனந்தை தனது கைக்குள் போட்டுக்கொள்ள ராஜேஸ்வரியும், ஐஸ்வர்யாவும் திட்டம் போட்டு ஆனந்தை ஜாமீனில் எடுக்கிறார்கள். மேலும், உன்னை பெயிலில் வெளியே எடுத்தேன் என்ற விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது. அப்படி தெரிஞ்சா பெரிய பஞ்சாயத்து ஆகிடும் என்று சொல்ல ஆனந்தம் இப்போதைக்கு வெளியில் வந்தால் போதும் என்பதால் இதற்கு ஒப்புக்கொண்டு இவர்களுடன் கைகோர்க்கிறான்.
போலீஸ் ஸ்டேசனில் இருந்து நேரடியாக வீட்டுக்கு வந்த ஆனந்த், இனிமே எதுவும் சரிப்பட்டு வராது ஸ்டேஷன் வரைக்கும் அனுப்பி என்னை ரொம்ப அவமானப்படுத்திட்டீங்க, சொத்த பிரிங்க என்று கேட்க அபிராமி உடைந்து போகிறார். உடனே கார்த்திக் இந்த குடும்பம் உடையக்கூடாது என்பது தான் அம்மாவோட ஆசை இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் கொஞ்சம் அமைதியா இரு, என்று ஆனந்தை அமைதிப்படுத்துகிறான்.

இன்றைய எபிசோட்: ஆனந்தின் இந்த செயலால், அபிராமி உடைந்து போயிருக்க அவளுக்கும் அண்ணாமலை ஆறுதல் சொல்கிறான். இப்படி குடும்பத்தோடு பெயரை ஆனந்த் கெடுத்துவிட்டானே. வாழ்க்கை இழந்து இருக்கும் மீனாட்சிக்கு நான் என்ன சொல்லுவது என்று இரவு முழுக்க தூங்காமல் அபிராமி புலம்பிக்கொண்டு இருக்க. அண்ணாமலை, இதையே யோசித்து உன் உடம்பை கெடுத்துக்கொள்ளாதே அமைதியா தூங்கு என்று ஆறுதல் சொல்லி தூங்கவைக்கிறான்.
காணாமல் போன அபிராமி: மறுநாள் காலையில் வீடு முழுவதும் தேடியும் அபிராமி இல்லாததால், பயந்துபோன அண்ணாமலை கார்த்திக் மற்றும் தீபாவிடம் விஷயத்தை சொல்ல, கார்த்திக் அம்மாவின் போனுக் கால் செய்ய அது வீட்டில் இருப்பதால், அம்மா ஏதாவது கோவிலுக்கு போய் இருப்பாங்க, பயப்படாதீங்க அப்பா என்று அவரை தேற்றுகிறான். நீண்ட நேரமாகியும் அபிராமி வராததால், வீட்டில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்கிறான்.
பதற்றத்தில் கார்த்திக்: அபிராமி வீட்டை விட்டுப்போய் வெகுநேரமாகியும் வராததால், பதற்றம் அடையும் கார்த்திக், அம்மாவை தேடிக்கொண்டு கோவில் கோவிலாக செல்கிறார். அபிராமி வழக்கமாக செல்லும் அனைத்து கோவிலில் தேடியும் அபிராமி கிடைக்காததால் கார்த்திக் என்ன செய்வது என்று தெரியாமல் பதறுகிறான். இப்படியான நிலையில் கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து நடக்கப்போகவது என்ன என்பதை தெரிந்து கொள்ள கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள்.


Click it and Unblock the Notifications











