அபிராமிக்கு என்னாச்சு.. நிலைகுலைந்து போன குடும்பம்..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ஆனந்தின் செயலால், அபிராமி உடைந்து போயிருக்க அவளுக்கும் அண்ணாமலை ஆறுதல் சொல்லி படுக்கவைக்கிறான். மறுநாள் காலையில் வீடு முழுவதும் தேடியும் அபிராமி இல்லாதால், பயந்துபோன அண்ணாமலை கார்த்திக் மற்றும் தீபாவிடம் விஷயத்தை சொல்ல, கார்த்திக் அம்மாவின் போனுக்கு கால் செய்ய அது வீட்டில் இருப்பதால், அம்மா ஏதாவது கோவிலுக்கு போய் இருப்பாங்க வந்துடுவாங்க என வீட்டில் அனைவரும் காத்திருக்கின்றனர்.

அபிராமி வீட்டை விட்டுப்போய் வெகுநேரமாகியும் வராததால், பதற்றம் அடையும் கார்த்திக், அம்மாவை தேடிக்கொண்டு கோவில் கோவிலாக செல்கிறார். அபிராமி வழக்கமாக செல்லும் அனைத்து கோவிலில் தேடியும் அபிராமி கிடைக்காததால் கார்த்திக் கவலை அடைகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial March 27th Episode

அபிராமிக்கு என்னாச்சு: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில் அபிராமி காணாமல் போன விஷயத்தை கார்த்திக் போலீசுக்கு தகவல் கொடுத்து வெளியில் விஷயம் தெரியாதபடி தேட சொல்கிறான். கார்த்திக் ஒரு பக்கம் தேடிக்கொண்டு இருக்க போலீஸ் அபிராமியை ஒரு பக்கம் தேடிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது,ரயில்வே ட்ராக் அருகே அடிபட்டு டெட் பாடி ஒன்று கிடக்க அங்கே இருக்கும் மக்கள் பணக்கார வீட்டு பொம்பளையா தெரியுது,பாவம் என்ன கஷ்டம்னு தெரியல இப்படி சூசைட் பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

நிலைகுலைந்து போன குடும்பம்: இந்த நேரத்தில் அங்கு வரும் ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டர் மிஸ்ஸிங் கேஸ் ஏதாச்சு இருக்கா என்று கேட்க இருக்கு சார், ஆனா அது நம்ம ஏரியா இல்ல என்று அபிராமி காணாமல் போன விஷயத்தை சொல்கிறார். மேலும், அந்த இடத்தில், சால்வை இருந்ததால், அதையெடுத்துக்கொண்டு போலீசார் அபிராமி வீட்டுக்கு வந்து தகவலை சொல்கின்றனர். சால்வையை பார்த்ததும் அண்ணாமலை கதறி அழுகிறார். பிறகு போலீஸ் கார்த்திக்கை தனியாக அழைத்துச் சென்று ரயில்வே ட்ராக் அருகில் டெட் பாடி இருக்கும் விஷயத்தை சொல்ல கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான்.

அதிர்ச்சியில் குடும்பம்: பிறகு எல்லோரும் என்னாச்சு என்று கேட்க அமைதியாக இருக்கிறான். பிறகு எதுக்கு போலீஸ் தனியா கூட்டிட்டு போய் பேசுறாரு விஷயத்தை சொல்லு என்று ஆனந்த் சத்தம் போட்டு கேட்க, கார்த்திக் நான் கொஞ்சம் வெளியே போறேன் போயிட்டு வந்து சொல்வதாக என்று, சொல்ல ஆனந்த் இப்பவே சொல்லு என்று சண்டை போடுகிறான். அப்போது கார்த்திக், போலீஸ் சொன்ன டெட் பாடி விஷயத்தை சொல்ல வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். டெட் பாடியை அடையாளம் காட்டத்தான் போலீஸ் அழைத்ததாக கார்த்திக் சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

கதறி அழும் கார்த்திக்: இதை கேள்விப்பட்ட ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் சந்தோஷப்பட்டு ரூமுக்கு சென்று அபிராமி கதை முடிந்தது, சொத்துக்கள நம்ம பேருக்கு மாத்துர வேலைய பாக்கணும் என்று ப்ளான் போடுகின்றனர். டெட் பாடியை பார்க்க வந்த கார்த்திக் கண்ணீருடன் காரில் இருந்து கீழே இறங்கி சம்பவ இடத்தை நோக்கி செல்கிறான் இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்க கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X