கார்த்திக்கின் காலில் விழுந்த ராஜராஜன்.. கார்த்திக் போடும் கண்டிஷன்.. கார்த்திகை தீபம்!
சென்னை: நேற்றைய எபிசோடில், ரேவதி டிரைவர் ராஜா திருமணம் செய்து கொள்ளவே பிடிக்க வில்லை என்று தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறாள். அப்போது, சாமுண்டீஸ்வரி, நீ இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லவில்லை என்றால் அவ்வளவு தான் என்று, துப்பாக்கியை எடுத்து நீட்ட ரேவதியோ, என்ன கொன்னுடுவீங்களா? சுடுங்க என்று சொல்ல சாமுண்டீஸ்வரி உன்னை சுட மாட்டேன். என்னையே சுட்டுக்குவேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறாள்.
ரேவதி இதெல்லாம் ரொம்ப தப்பு, மகேசைத்தான் நான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனா, இப்போது டிரைவரை கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்று சொன்னா எப்படி. அந்த டிரைவர் ராஜா நல்லவன் போல நடிச்சு உங்களை எமாத்திக்கிட்டு இருக்கான் என்று சொல்கிறாள். ஆனாலும் சாமுண்டீஸ்வரி தனது முடிவில் உறுதியாக இருக்க ரேவதி வேறு வழியின்றி திருமணத்திற்கு சம்மதம் சொல்கிறாள். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: மறுபக்கம், பரமேஸ்வரி பாட்டி கார்த்திக்கிடம் திருமணத்திற்கு சம்மதம் சொல்லும்படி கேட்க, கார்த்திக் என்னால், தீபாவைத் தவிர வேறு ஒரு பெண்ணை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அவள் மட்டும் தான் என் மனைவி என்ற முடிவில் உறுதியாக இருக்கிறான். இதையடுத்து, கார்த்திக்கிடம் பேசிய ராஜராஜன், இந்த குடும்பம் ஒன்று சேர்வது உன் கையில் தான் இருக்கு, கல்யாணம் ஆகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு, கார்த்திக்கின் காலில் விழப்போக, தடுத்து நிறுத்திய கார்த்திக் என்ன மாமா நீங்க என் கால்ல விழுறீங்க என்று வருதப்படுகிறான்.

கண்டிசன் போட்ட கார்த்திக்: என் மகளோட வாழ்க்கைக்காக நான் என்ன வேணாலும் செய்வேன் மாப்பிள தயவு செய்து, என் மகளை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லுங்க என்று ராஜராஜன் கெஞ்ச வேறு, வழியே இல்லாமல் நான் திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் அதுக்கு முன்னாடி நான் ரேவதியை சந்தித்து, சில உண்மைகளை சொல்ல வேண்டும். எனக்கும் தீபாக்கும் கல்யாணம் நடந்த விஷயத்தை நான் சொல்லனும், நான் யார் என்பதை சொல்ல வேண்டும் அப்போ தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று சொல்கிறான் என கண்டிஷன் போடுகிறான். அவ்வளவு தானே, நான் அதுக்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்கிறான் ராஜராஜன்.

தப்பான முடிவு எடுத்த ரேவதி: பின், ரேவதியை சந்திக்கும் கார்த்திக், எனக்கு ஏற்கனவே திருமணமாகி தீபா என்கிற மகள் இருந்தால், ஆனால், அவள் திடீரென இறந்துவிட்டாள். அந்த சோகத்தை மறப்பதற்காகத்தான் நான் எங்கே வந்தேன் என்று சொல்கிறான். மேலும், முழு மனசோடு இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை எனவும் சொல்கிறான். ஆனால், ரேவதி கார்த்திக் மீது இருந்த கோபத்தில், அவன் பேசுவதை கண்டு கொள்ளாமல் இருக்கிறாள். இதையடுத்து, ரேவதி தனது தோழிகளிடம் டிரைவர் ராஜா, தன்னை ஏமாற்றி விட்டதாக சொல்லி மணமேடை ஏறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











