அபிராமியை தீர்த்து கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்திக் பயங்கர பதற்றத்துடன் டெட் பாடியை பார்க்க அது அபிராமி இல்லை என்று தெரிந்து நிம்மதி அடைகிறான், உடனே தீபாவிற்கு போன் செய்து அதுஅம்மா,இல்ல அம்மா எங்கையோ நிம்மதியா இருக்காங்க என்று சொல்கிறார். உடனே தீபா நான் வேண்டிய கடவுள் என்னை கைவிடவில்லை ரொம்ப சந்தோஷம் என்கிறாள். இந்த விஷயத்தை தீபா வீட்டில் சொல்ல, ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் கடுப்பாகின்றனர்.
இதனையடுத்து கார்த்திக் மீண்டும் அபிராமியை தேடி அலைகிறான் எங்கு தேடியும் கிடைக்காததால் அம்மாவுடன் சிறுவயதில் இருந்த நினைவுகளை அசைபோடுகிறான்.அடுத்து கோவிலுக்கு வரும் கார்த்திக் கடவுளிடம் அபிராமி கிடைக்க வேண்டும் என கண் கலங்கி வேண்டிக்கொள்கிறான். இதை அடுத்து இன்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், அபிராமி ஒலு கோவிலில், கோவிலுக்கு வந்து படுத்துக்கொள்கிறாள். ஐயர் கோவிலை மூட போகும் சமயத்தில் அபிராமியை பார்த்து யாரு நீங்க? கோவிலை மூடனும் என்று சொல்ல அபிராமி வீட்டில் ஒரு பிரச்சனை அதனால் இன்னைக்கு மட்டும் இங்க தங்கிக்கிறேன் என்று அனுமதி கேட்க ஐயரும் சம்மதம் சொல்கிறார்.
அபிராமியை கொல்ல போடும் திட்டம்: மறுபக்கம் ஐஸ்வர்யா, ரியாவை சந்தித்து நீ எங்க கூட வந்துடு, அபிராமி எங்கே இருப்பாங்கனு எனக்கு நல்லாத் தெரியும். அவங்க மனசு கஷ்டமா இருந்தா ஒரு கோவிலுக்கு போவாங்க, இப்பவும் அவங்க அங்கே இருக்க தான் அதிக வாய்ப்பு இருக்கு.இதனால், அங்கேயே வச்சு அவங்கள தீர்த்து கட்டிவிட்டால் பிரச்சனை முடிஞ்சிடும். அப்புறம், மீனாட்சியை ஈசியா வீட்டை விட்டு வெளியே துரத்தி இந்த வீட்டை நம்ம கண்ட்ரோல்ல கொண்டு வந்து விடலாம் என்று சொல்ல ரியா, ஐஸ்வர்யா பேச்சை கேட்டு பயந்து நடுங்குகிறாள்.
கார்த்தி மீது சந்தேகப்படும் ஆனந்த்: மறுபக்கம் ஆனந்த் நீ தான் அம்மாவை எங்கயோ மறைச்சு வச்சிட்டு காணவில்லை என்று நாடகம் ஆடுகிற, எனக்கு நல்லாவே தெரியும் என கார்த்தியிடம் சண்டையிடுகிறான். அபிராமி கோவிலில் திருப்பணி செய்து மன நிம்மதியை தேடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











