திருமணமாகாமல் குழந்தைக்கு தாயான ரேவதி.. திருமணம் நடக்குமா..கார்த்திகை தீபம் சண்டே ஸ்பெஷல் எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இப்போது, கார்த்திக் மற்றும் ரேவதிக்கு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீரியலின் சண்டே ஸ்பெஷல் எபிசோட் வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி, மகேஷின் மோசமான குணத்தை தெரிந்து கொண்டதால், இவனை என் மகளுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது என்று முடிவு செய்கிறாள். இதையடுத்து, மகேசை ரௌடிகளை வைத்து கடத்திவிட்டு, மாப்பிள்ளை வரமாட்டான். ஆனால், கல்யாணம் நிற்கக்கூடாது என்று, ரேவதியிடம் டிரைவர் ராஜாவை திருமணம் செய்து கொள்ளும்படி சொல்ல, அவள் முடியாது என்று சொல்கிறாள். இதனால், சாமுண்டீஸ்வரி, துப்பாக்கியை காட்டி, நான் சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுகிறாள். இதனால், ரேவதி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறாள்.

திருமணத்திற்கு சம்மதித்த கார்த்திக்: கார்த்திக் முதலில் முடியாது என்று சொல்ல,ராஜராஜன் காலில் விழுந்து கெஞ்சியதை அடுத்து, கார்த்திக்கும் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்கிறான். ஆனால், நான் ரேவதியிடம் சில விஷயத்தை பேச வேண்டும் என்று சொல்கிறான்.பின் கார்த்திக், ரேவதியிடம் எனக்கு ஏற்கனவே திருமணமாகி தீபா என்கிற மனைவி இருந்தாள். ஆனால், அவள் இறந்துவிட்டால், அவளைத்தவிர வேறு யாரும் வேண்டாம் என்று இருந்தேன். ஆனால், இப்போ குடும்ப மானத்திற்காக இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கிறேன் என்று சொல்ல, கார்த்திக் பேசியதை ரேவதி காது கொடுத்து கேட்காமல் இருக்கிறாள்.
அடுத்தடுத்து நடக்கும் கடத்தல்: பின் கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் மேடை ஏறுகின்றனர். ஆனால், இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என மாயா, சிவனாண்டி, சந்திரகலா ஆகியோர் திட்டம் போடுகின்றனர். அப்போது தான் ஆசிரமத்தில் வளரும் ரேவதியின் குழந்தை தீபாவை பற்றி தெரியவர, அந்த குழந்தையை கடத்தினால், இந்த கல்யாணம் நடக்காது என்று பிளான் போடுகின்றனர். இந்த திட்டத்தை தொடர்ந்து சந்திரகலாவும், டிரைவர் கார்த்திக்கு அபிராமி என்ற அம்மா இருக்காங்க அவங்களையும் கடத்திடலாம் என்று திட்டமிடுகின்றனர். ,இந்த திட்டத்தின் படி குழந்தை தீபாவையும் அபிராமியையும் கடத்துகின்றனர். இந்த விஷயம் மணமேடையில் இருக்கும் கார்த்திக்கு தெரிய வருகிறது.

குழந்தையால் வந்த குழப்பம்: இது எல்லாம் நிச்சயம் மாயா மற்றும் சிவனான்டியின் வேலையாகத்தான் இருக்கும் என தெரிந்து கொண்ட கார்த்திக், ரவுடிகளிடன் சிக்கிய அம்மா அபிராமி மற்றும் ரேவதியின் குழந்தை என இருவரையும் சண்டை போட்டு காப்பாற்றுகிறான். அடுத்து கல்யாண மண்டபத்தில் குழந்தை தீபாவை அழைத்து வர, அந்த குழந்தை ரேவதியை அம்மா கூப்பிட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன? அந்த குழந்தையால் குழப்பம் ஏற்படுமா? திருமணத்தில் திருப்பம் உண்டாகுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த திருப்பங்களுடன் நாளை சண்டே ஸ்பெஷல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே கார்த்திகை தீபம் சண்டே ஸ்பெஷல் எபிசோடை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications