கணவர் செய்யும் துரோகம்..உண்மை தெரியவருமா மீனாட்சிக்கு.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், கார்த்திக் தீபா கழுத்தில் புது தாலியை காட்டுகிறான், பிறகு அபிராமி, அருணாச்சலம், ஜானகி என அனைவருமே இருவரையும் ஆசிர்வாதம் செய்கின்றனர். இதனை தொடர்ந்து மீனாட்சி மெட்டி எடுத்து கொடுத்து தீபா காலில் போட்டு விட சொல்ல கார்த்திக்கும் போட்டு விடுகிறான்.

அப்படியே மறுபக்கம் ரியா ஆனந்துக்காக கோவிலில் காத்துக் கொண்டிருக்கிறாள். ஆனந்து வர தாமதமானதால், அய்யர் லேட் ஆகுது, எனக்கு வேறொரு கல்யாணம் இருக்கு என்று கிளம்பி செல்ல ரியா ஏமாற்றமடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial March 2nd Episode

யாருக்கும் தெரியவேண்டாம்: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், தர்மலிங்கம் ஒருவரை சந்தித்து தீபாவுக்கு சீர் செய்ய பணம் வேண்டும் அதனால் வீட்டு பத்திரத்தை வைத்துக் கொண்டு பணத்தை தருமாறு கேட்கிறார். என் மூத்த பையன் துபாயில இருக்கான் அவன் அனுப்புற பணத்தை வைத்து குடும்பத்தை சமாளித்துக் கொள்வோம் என்று சொல்கிறார். மேலும் இந்த விஷயம் தன்னுடைய குடும்பத்திற்கு தெரிய வேண்டாம் என சொல்கிறார்.

அட்வைஸ் பண்ணும் கார்த்தி: அடுத்ததாக கார்த்திக் ஆனந்தை கூப்பிட்டு என்னடா இப்பல்லாம் பெங்களூரிலிருந்து வீட்டுக்கு வர மாட்ற என்று கேட்க வேலை அதிகமா இருக்கு என்று சொல்லி சமாளிக்கிறான். அடிக்கடி நீ ஒரு பொண்ணு கூட சுத்துறதா என் பிரண்டு ஒருத்தன் சொன்னான் என்ன விஷயம் என்று கேட்க அப்படியெல்லாம் இல்லையே யார் சொன்னது சொல்லு நானே அவங்கிட்ட கேட்கிறேன் என்று சொல்கிறான். உடனே கார்த்திக் அது நான் தான் நீ ஒரு பொண்ணு கூட வெளியில் சுத்துவதை நானே பலமுறை பார்த்திருக்கேன் என்று சொல்ல. உடனே ஆனந்த் அது என்னுடைய காலேஜ் ஃப்ரெண்ட் என்று கூறுகிறான். ரெஸ்டாரன்ட் உள்ள உன்னை ஒரு பொண்ணோட வச்சு பார்த்ததும் உனக்கு போன் பண்ண போது நீ பெங்களூர்ல இருக்கேன்னு பொய் சொல்லிட்ட மீனாட்சி அண்ணி உன்னையே நம்பி இந்த வீட்டுக்கு வந்து இருக்காங்க, அவர்களுக்கு துரோகம் பண்ணாத என்று அட்வைஸ் சொல்ல இந்த நேரம் பார்த்து மீனாட்சி உள்ளே வந்து விடுகிறாள்.

புருஷன் சரியில்லை: முழுசா எதையும் கேட்காத மீனாட்சி நல்லா சொல்லு கார்த்திக் எப்ப பார்த்தாலும் வேலையே கதினு இருக்காரு என்று சொல்ல கார்த்திக் அதுதான் சொல்லிக்கிட்டு இருந்தேன் அண்ணி என்று சமாளிக்கிறான். மீனாட்சி போனதும். நானும் அந்த பொண்ணும் காலேஜ் படிக்கும்போது லவ் பண்ணோம் அம்மாவுக்கு பயந்து நான் என்னுடைய காதலை சொல்லல மீனாட்சியை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அவளும் வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டா. ஆனால் அவளுடைய புதுசன் சரியில்லை விவாகரத்து வாங்கிட்டா என்று சொல்கிறான். சரி அவங்களுக்கு வாழ்க்கைல பிரச்சனை ஒரு வேலை வாங்கி கொடு இந்த பணத்தை கொடுத்து உதவி பண்ணு நீ அவங்களோட இருக்கணும்னு அவசியம் இல்லையே என்று கார்த்திக் அட்வைஸ் செய்ய ஆனந்த் சரிடா இனிமே சரியா இருக்கேன் என கூறுகிறான்.

மாயா செய்த வேலை: அருண் ரெசாட்டை அடித்து உடைத்த ரவுடி குறித்து தனது நண்பனிடம் விசாரிக்க அவன் உன் பேரை மட்டும் தான் சொல்லிட்டு இருக்கான் என்று சொன்ன பிறகு கார்த்திக் சொன்ன ஐடியாவை வைத்து முயற்சி செய்ய ரவுடி சிக்கிக்கொள்ள யார் இப்படி பண்ண சொன்னது என்று கேட்கும் போது, மாயா தான் என்று உண்மையை சொல்கிறான். உடனே கார்த்திக் மாயா வீட்டிற்கு வந்து அவளை எச்சரிக்கை செய்கிறான். ஆமா நான் தான் பண்ணேன் அதுக்கு உன்கிட்ட என்ன ஆதாரம் இருக்கு? உன்னால ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்ல பின்னாடியே அருண் என்ட்ரி கொடுக்கிறான். அருணுக்கு கார்த்திக் செய்யவில்லை என்ற உண்மை தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது அறிய கார்த்திகை தீபம் சீரியலை பாருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X