அபிராமியை கொல்ல திட்டம் போட்ட ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், அபிராமி காணாமல் போன நிலையில், ஐஸ்வர்யா, ராஜலட்சுமி இருவரும் ரியாவை சந்தித்து நீ எங்க கூட வந்துடு, அபிராமி எங்கே இருப்பாங்கனு எனக்கு நல்லாத் தெரியும். அவங்க மனசு கஷ்டமா இருந்தா ஒரு கோவிலுக்கு போவாங்க, இப்பவும் அவங்க அங்கே தான் இருப்பாங்க.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவங்கள அங்கேயே வச்சு தீர்த்து கட்டிவிட்டால் பிரச்சனை முடிஞ்சிடும். அப்புறம், மீனாட்சியை ஈசியா வீட்டை விட்டு வெளியே துரத்தி இந்த வீட்டை நம்ம கண்ட்ரோல்ல கொண்டு வந்து விடலாம் என்று சொல்ல ரியா, ஐஸ்வர்யா பேச்சை கேட்டு பயந்து நடுங்குகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்: இதையடுத்து கார்த்திகை தீபம் சீரியலில் இன்று, தீபாவின் குடும்பத்தை பற்றி தப்பு தப்பாக பேசியதால் மைதிலியும் தீபாவும் அவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் மீனாட்சி, ஐஸ்வர்யாவின் அம்மா ராஜேஸ்வரியின் முகத்தை போர்வையால் மூடி, அடி வெளுத்தெடுத்து அனுப்ப அவர் ஐஸ்வர்யாவிடம் சென்று நடந்த விஷயத்தை சொல்லி தீபாவும் மைதிலியும் இப்படி பண்ணி இருக்க வாய்ப்பிருக்கு என்று சொல்ல ஐஸ்வர்யா அவங்க ஏன் அப்படி பண்ணனும் என்று சொல்கிறாள்.
ரியாவை வெளுத்த மீனாட்சி: மீனாட்சிக்கு இன்னும் கோபம் அடங்காமல் இருக்க ரியா தனியாக சிக்க அவளையும் போட்டு வெளுத்தெடுக்க இதை பார்க்கும் தீபா, மீனாட்சியை அழைத்து சென்று சமாதானப்படுத்தி விடுகிறாள், மறுபக்கம் அபிராமி கோவிலை சுத்தம் செய்து கொண்டிருக்க அதை பார்த்து பூசாரி உங்களுக்கு என்னமா பிரச்சனை சொல்லுங்க தீர்த்து வைக்க முயற்சி செய்றேன் என்று சொல்கிறார். ஆனால் அபிராமி நீங்க தங்க இடம் கொடுத்ததே போதும் என்று சொல்கிறார்.

ஐஸ்வர்யா போடும் பிளான்: பிறகு ஐஸ்வர்யாவும் ரியாவும் ரவுடி ஒருவனுக்கு பணத்தை கொடுத்து நாங்க சொல்லும் போது அபிராமி கதையை முடிச்சிடு என்று சொல்கின்றனர். எதுக்கு வெய்ட் பண்ணனும் கோவிலில் வைத்தே கொன்னுடுறேன் என்று ரவுடி சொல்ல ஐஸ்வர்யா கோவிலில் வைத்து பண்ணா பெரிய பிரச்சனையாகும் என்று சொல்லி விடுகிறாள்.
கோவிலில் தீபா: இதனையடுத்து தீபா அபிராமிக்காக வேண்டுதலை நிறைவேற்ற கோவிலுக்கு செல்வதாக கார்த்தியிடம் சொல்ல அவன் அம்மா மனசு வருத்தத்தில் இருந்தா ஒரு கோவிலுக்கு போவாங்க அந்த கோவில் தெரியுமா என்று கேக்க தீபா தெரியாமல் முழிக்க மீனாட்சியிடம் கேட்க அவளும் தெரியாமல் முழிக்கிறாள். பிறகு தீபா, மீனாட்சி மைதிலி ஆகியோர் கோவிலுக்கு கிளம்பி வருகின்றனர். தீபா அங்கப்பிரதட்சணம் செய்து கொண்டிருக்கிறாள்.

அடுத்து நடக்கப்போவது என்ன: அபிராமியை கோவிலில் பார்க்கும் துப்புரவு பணியாளர் ராணிக்கு தகவல் கொடுக்க ராணி, கார்த்திக்கிற்கு தகவல் கொடுக்க அவன் உடனடியாக கோவிலுக்கு கிளம்பி செல்கிறான், அதே போல் கோவிலில் மீனாட்சியை பார்த்த உறவுக்கார பெண் ஒருவரும் அபிராமியை காஞ்சிபுரம் கோவிலில் பார்த்ததாக சொல்ல இவர்களும் காஞ்சிபுரத்துக்கு கிளம்புகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











