ரக்சனின் புதிய காதலி.. தீபாவை களங்கப்படுத்த பின்னப்பட்ட சதி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக் ஆனந்தை கூப்பிட்டு அடிக்கடி நீ ஒரு பொண்ணு கூட வெளியில் சுத்துவதை நானே பலமுறை பார்த்திருக்கேன் என்று சொல்ல. உடனே ஆனந்த் அது என்னுடைய காலேஜ் ஃப்ரெண்ட் என்று கூறுகிறான். ரெஸ்டாரன்ட் உள்ள பொண்ணா வச்சு பார்த்ததும் உனக்கு போன் பண்ண போது நீ பெங்களூர்ல இருக்கேன்னு பொய் சொல்லிட்ட மீனாட்சி அண்ணி உன்னையே நம்பி இந்த வீட்டுக்கு வந்து இருக்காங்க, அவர்களுக்கு துரோகம் பண்ணாத என்று அட்வைஸ் கொடுக்கிறான்.

இதையடுத்து, அருண் ரெசார்ட்டை அடித்து உடைத்த ரவுடி குறித்து தனது நண்பனிடம் விசாரிக்க அவன் உன் பேரை மட்டும் தான் சொல்லிட்டு இருக்கான் சொல்ல பிறகு கார்த்திக் சொன்ன ஐடியாவை வைத்து முயற்சி செய்ய ரவுடி சிக்கிக்கொள்கிறான். அவனிடம் யார் இப்படி பண்ண சொன்னது என்று கேட்கும் போது, மாயா தான் என்று உண்மையை சொல்கிறான். உடனே கார்த்திக் மாயா வீட்டிற்கு வந்து அவளை எச்சரிக்கை செய்கிறான். ஆமா நான் தான் பண்ணேன் அதுக்கு உன்கிட்ட என்ன ஆதாரம் இருக்கு? உன்னால ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்ல பின்னாடியே அருண் என்ட்ரி கொடுக்கிறான். அருணுக்கு கார்த்திக் செய்யவில்லை என்ற உண்மை தெரிய வருகிறது. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial March 4th Episode

கார்த்திகை தீபம் சீரியல்: இதையடுத்து, கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், தீபாவை மியூசிக் டைரக்டர் ரக்ஷன் டிராப் செய்ய தீபா அவரை வீட்டிற்கு அழைக்க ரக்சன் வேலையிருப்பதாக சொல்லி கிளம்புகிறார். இவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த ராஜேஷ்வரி போட்டோ எடுத்து கொள்கிறாள். உடனே ஐஸ்வர்யாவிடம் சென்று போட்டோவை காட்டி தீபாவை அசிங்கப்படுத்த முடிவெடுத்து தீபாவுக்கும் ரக்சனுக்கும் தொடர்பு என மீடியாவில் செய்தியை பரப்ப வைக்கின்றனர். மறுபக்கம் வீட்டுக்கு வந்த தீபா, ரக்சன் தன்னை ட்ராப் செய்த விஷயத்தை சொல்வதோடு அருண் விஷயம் என்னாச்சு எனவும் விசாரிக்கிறாள்.

zee tamil television Karthigai Deepam serial March 4th Episode

கண்கலங்கும் தீபா: மறுநாள் எல்லாரும் அபிராமிக்கு போன் போட்டு இது பற்றி விசாரிக்க பேப்பரை பார்த்து அவளும் அதிர்ச்சி அடைகிறாள். இதுக்குத்தான் தீபா பாடக்கூடாது என்று சொன்னேன் என்று கார்த்தியிடம் சத்தம்போடுகிறாள். உடனே கார்த்திக் இது தப்பான நியூஸ் என நடந்தவற்றை சொல்ல அபிராமி அதை ஏற்காமல் கோபத்தில் ஏதோ சொல்ல வருகிறாள். அப்போது சாமியார் சொன்ன விஷயம் நினைவுக்கு வர அமைதியாகி விடுகிறாள்.

zee tamil television Karthigai Deepam serial March 4th Episode

பெண்களுக்கு பெண்கள் தான் எதிரி: பேப்பரில் வந்த செய்தியைப்பார்த்து தீபா கண்ணீருடன் ரூமுக்குள் சென்று அழுதுக்கொண்டு இருக்கிறாள். அப்போது அங்கு வரும் கார்த்தியிடம் பாட்டு,பெயர் புகழ் எதுவுமே வேண்டாம் என்று தீபா கதறி அழ, முதலில் அழுவதை நிறுத்துக்க என்று சொல்லி ஒரு பெண் ஜெயிக்கிறாள் என்றாள் அதற்கு நிறைய தடைகள் வரத்தான் செய்யும், இங்கு பெண்களுக்கு பெண்களே எதிரியா இருக்கிறார்கள் என்று கார்த்திக் தீபாவிற்கு ஆறுதல் சொல்கிறான்.

zee tamil television Karthigai Deepam serial March 4th Episode

அபிராமி அமைதியா சென்றதைப் பார்த்து, எது பண்ணாலும் அபிராமி இப்படி அமைதியா இருக்க என்ன காரணம் என ஐஸ்வர்யா கன்பியூஸ் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X