எத்தனை நாளைக்கு தான் இந்த கொடுமை.. ஜவ்வுபோல இழுக்கும் கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டுஇருக்க, மாயா மகேசை காணவில்லை என தேடி அலைகிறாள்.இந்த விஷயம் சாமுண்டீஸ்வரிக்கு தெரியவர,அவள் என்ன செய்வது என்று பதற்றப்படுகிறாள். அப்போது, பாட்டி, என்ன மாப்பிள்ளை ஓடிட்டானா, இப்போது கூட ஒன்னும் பிரச்சனை இல்ல, ஒரே ஒரு போன் பண்ணா போதும், என் பேரன் வந்து நிற்பான்.ரேவதியை கல்யாணம் பண்ணிப்பான் நீ ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லு என் பேரனை நான் கூப்பிடுகிறேன் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி கடுப்பாகிறாள்.
பாட்டி பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக், ராஜராஜன் மற்றும் மயில்வாகனத்திடம் எனக்கு ரேவதியை கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்கிற ஆசையெல்லாம் இல்ல. இந்த கல்யாணத்தை நிறுத்தி ரேவதி வாழ்க்கையை காப்பாற்றணும் அவ்வளவு தான் என்று சொல்லிவிட்டு வெளியே செல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில், மகேஷ் மணமேடைக்கு வராததால், அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்க அப்போது, ராஜராஜன், என்ன சாமுண்டீஸ்வரி, மாப்பிள்ளைய காணும், அவனை தேடிபோனவங்களையும் காணும். நல்ல நேரம் வேற முடியப்போகுது என்று சொல்லி பதற்றப்படுகிறாள். அப்போது, சாமுண்டீஸ்வரி, கார்த்திகை அழைத்து, நீ மாப்பிள்ளைக்கு தோழன் தானே நீயே இந்த வேட்டியை வாங்கிக்கோ என்று சொல்ல, ராஜராஜன், பாட்டி,மயில்வாகன் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். பின் தயக்கத்தோடு மேடைக்கு வரும் கார்த்தி, அந்த முகூர்த்த வேட்டியை வாங்கிக் கொள்கிறான்.
அதிர்ந்து போன மகேஷ்: மாயாவும், சந்திரகலாவும் மகேசை தேடி பல இடத்தில் அலைகின்றனர். அப்போது,பூட்டப்பட்டஅறை ஒன்றில் இருந்து மகேஷ் கத்தும் சத்தத்தை கேட்டு இருவரும் சேர்ந்து அந்த பூட்டை உடைத்து மகேசை அவசர அவசரமாக அழைத்து வருவதற்குள்,மகேஷ்க்கு பதிலாக மேடை ஏறிய கார்த்திக்துணியை வாங்கி கொள்கிறான். இதனால் மகேஷ், மாயா கடுப்பாகின்றனர். அதே நேரத்தில் தனது ஆசையின் படி கார்த்திக் துணியை வாங்கியதால் பரமேஸ்வரி பாட்டி சந்தோஷப்படுகிறார்.
பாட ஆசைப்பட்ட ஸ்வாதி: இதையடுத்து கல்யாண மண்டபத்தில் பாட்டு கச்சேரி நடக்க இதை பார்த்த சுவாதிக்கு பாட வேண்டும் என்ற ஆசை உருவாகிறது. இதை ரேவதியும் கவனிக்கிறாள். அடுத்து ஸ்வாதியிடம் நீ பாடு என்று சொல்ல அம்மா எப்படி இதுக்கு சம்மதிப்பாங்க? கண்டிப்பா ஓகே சொல்ல மாட்டாங்க என்று சொல்கிறாள். ரேவதி அதை நான் பார்த்துக்கறேன் என்று சொல்லி சாமுண்டேஸ்வரியிடம் இது குறித்து பேச அவள் மறுப்பு தெரிவிக்கிறாள். ரேவதி என் கல்யாணத்தில் சுவாதி பாடணும் என்று ஆசையை சொல்ல பிறகு சாமுண்டீஸ்வரி சம்மதம் சொல்கிறாள். இதையடுத்து ஸ்வாதி மேடை ஏறி கச்சேரியில் பாடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கார்த்திகை தீபம் சீரியல் எந்த சுவாரசியமும் இல்லாமல், கடந்த ஒரு மாசத்திற்கும் மேலாக ரேவதிக்கு கல்யாணம்... ரேவதிக்கு கல்யாணம்னு ஒரே அரைச்சமாவேயே அரைச்சிக்கிட்டு இருப்பதாக இணைவாசிகள் என இணையவாசிகள் இந்த சீரியலை ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











