போனை எடுக்காத ஆனந்த்.. தற்கொலைக்கு முயன்ற ரியா..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் தீபாவுக்கும் ரக்சனுக்கும் தொடர்பு என பேப்பரில் செய்தி வருகிறது. அபிராமி பேப்பரில் வந்த செய்தியைப்பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இதுக்குத்தான் தீபா பாடக்கூடாது என்று சொன்னேன் என்று கார்த்தியிடம் சத்தம்போடுகிறாள். உடனே கார்த்திக் இது தப்பான நியூஸ் என நடந்தவற்றை சொல்ல அபிராமி அதை ஏற்காமல் கோபத்தில் ஏதோ சொல்ல வருகிறாள். அப்போது சாமியார் சொன்ன விஷயம் நினைவுக்கு வர அமைதியாகி விடுகிறாள்.

பேப்பரில் வந்த செய்தியைப்பார்த்து தீபா கண்ணீருடன் ரூமுக்குள் சென்று அழுதுக்கொண்டு இருக்கிறாள். அப்போது அங்கு வரும் கார்த்தியிடம் பாட்டு, பெயர் புகழ் எதுவுமே வேண்டாம் என்று தீபா கதறி அழ, முதலில் அழுவதை நிறுத்திக்க என்று சொல்லி ஒரு பெண் ஜெயிக்கிறாள் என்றாள் அதற்கு நிறைய தடைகள் வரத்தான் செய்யும், இங்கு பெண்களுக்கு பெண்களே எதிரியா இருக்கிறார்கள் என்று கார்த்திக் தீபாவிற்கு ஆறுதல் சொல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial March 5th Episode

தீபா மேல தப்பு இல்ல: இதையடுத்து கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், கார்த்திக் தீபா மேல தப்பு இருக்க வாய்ப்பில்ல, அவங்க நடந்தது எல்லாத்தையும் என்கிட்டே சொன்னாங்க. ரக்சன் டிராப் பண்ண தான் வந்தாரு என்று தீபாவுக்கு ஆதரவாக கார்த்திக் அபிராமியிடம் பேசுகிறான். அப்போது, அபிராமி அமைதியாக இருப்பதை பார்த்து கடுப்பான, ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் சேர்ந்து அபிராமியை ஏற்றி விட அபிராமி இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்க வேலையை மட்டும் பாருங்க என்று திட்டி விடுகிறாள். தீபாவுக்கு எதிரா கொளுத்தி போடுறது தான் உங்க வேலையா என்று கோபப்படுகிறாள்.

ஆறுதல் கூறிய கார்த்திக்: மறுபக்கம் தீபா ரூமுக்குள் எனக்கு இந்த பாட்டும் வேணா, புகழும் வேண்டா என்றும் கண்ணீர் விட்டு அழ கார்த்திக் இதெல்லாம் நீங்க பாட கூடாதுனு நடக்குற சதி, இதற்கெல்லாம் கவலைப்பட்டு உட்கார கூடாது. நீங்க பாடணும், உங்க பாட்டால் ஜெயித்து காட்டணும் என மோட்டிவேஷனலாக பேச தீபா கடைசியாக பாடுறேன் என்று சம்மதம் சொல்கிறாள்.

zee tamil television Karthigai Deepam serial March 5th Episode

மறுபக்கம் தர்மலிங்கம் உடம்பு முடியாமல் மருத்துவமனைக்கு வர அவருக்கு மைல்டு அட்டாக் என்பது தெரிய வருகிறது, டாக்டர்கள் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்ல தர்மலிங்கம் இப்போதைக்கு பணம் இல்ல, 4 மாசம் கழிச்சி ஆபரேஷன் செய்துக்கிறேன். இப்போதைக்கு மருந்து மாத்திரை மட்டும் எழுதி கொடுக்க சொல்கிறார்.

தற்கொலைக்கு முயன்ற ரியா: அடுத்து ஆனந்த் போனை ஆன் பண்ண ரியா 150 முறை போன் செய்திருக்கும் விஷயம் தெரிய வருகிறது. மேலும் ஒரு புது நம்பரில் இருந்து போன் வர ஆனந்த் எடுத்து பேச ரியா சூசைட் அட்டென்ட் பண்ணி ஹாஸ்பிடலில் இருப்பதாக சொல்ல ஆனந்த் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X