கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுத்த பூர்ணிமா பாக்யராஜ்.. கார்த்திக் யார்? ரகசியம் உடையுமா?

சென்னை: மகேஷ் மணமேடைக்கு வராததால், அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்க, ராஜராஜன், மாப்பிள்ளைய காணும், அவனை தேடிபோனவங்களையும் காணும். நல்ல நேரம் வேற முடியப்போகுது என்று சொல்லி பதற்றப்படுகிறார். அப்போது, சாமுண்டீஸ்வரி, கார்த்திகை அழைத்து, நீ மாப்பிள்ளைக்கு தோழன் தானே நீயே இந்த வேட்டியை வாங்கிக்கொ என்று சொல்ல, ராஜராஜன், பாட்டி, மயில்வாகனம் என அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். பின் தயக்கத்தோடு மேடைக்கு வரும் கார்த்திக், அந்த முகூர்த்த வேட்டியை வாங்கிக் கொள்கிறான்.

இந்த நேரம் பார்த்து மகேஷ் அந்த இடத்திற்கு வந்து நிற்க, அப்போது சாமுண்டீஸ்வரி, கல்யாண மண்டபத்தில் இல்லாமல் எங்கே போனீங்க என்று கேட்க, அவசரமாக வெளியில் சென்று இருந்தேன் என்று சொல்லி சமாளிக்கிறான் மகேஷ். அப்போது கார்த்திக் தன்னிடம் கொடுத்த அந்த வேட்டியை எடுத்து மகேஷிடம் கொடுத்துவிட்டு அந்த இடத்திலிருந்து செல்கிறான். அப்போது மாயா, என்னை ரூமில் அடைத்து வைத்தார்கள் என்று சொல்ல வேண்டியது தானே, எதுக்கு அந்த விஷயத்தை மறைத்தாய் என்று மகேஷிடம் கேட்க, அப்போது மகேஷ் எப்போ பார்த்தாலும் இதையே சொல்லிட்டு இருந்தா... சாமுண்டீஸ்வரி என்ன பத்தி என்ன நினைப்பாங்க, அதை மறைத்து விட்டேன் என்று சொல்கிறான். அப்போது, எங்கு வரும் சந்திரகலா...ஓ... உனக்கு இப்படிக்கூட ஒரு எண்ணம் இருக்கா. சாமுண்டீஸ்வரி நீ பார்ப்பதற்கு பேக்குமாதிரி இருப்பதால் தான் உன்னை இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையாக ஏத்துக்கிட்டாங்க, நீ பெரிய இவன் மாதிரி பேசாதே என்கிறாள்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்2: இதனை தொடர்ந்து சாமுண்டீஸ்வரியின் தோழியாக ராஜேஸ்வரி என்ற பெயரில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் என்ட்ரி கொடுக்கிறார். தனது குடும்பத்தையும் ரேவதியை அறிமுகம் செய்துவைத்துவிட்டு, கார்த்திக்கை அழைத்து இவர் தான் என் வீட்டு டிரைவர் எனக்கூறி கார்த்திக்கை அறிமுகம் செய்து வைக்க ராஜேஸ்வரிக்கு இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசிக்க ஒரு மீட்டிங்கில் கார்த்திக்குடன் பங்கேற்ற விஷயம் நினைவுக்கு வருகிறது. உடனே, தனது பி.ஏ-விடம், கார்த்திக்கின் போட்டோவை அனுப்பி விசாரிக்கிறாள். அப்போது கார்த்திக், ஒரு பிசினஸ் மேன் என்றும், அவரின் மனைவி தீபா இறந்த பின், அவர் எங்கே போனார் என்றே தெரியவில்லை.

தற்போது அந்த கம்பெனியை கார்த்திக் சகோதரர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மையை சொல்ல ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். ஒரு பெரிய பிஸ்னஸ் மேன், ஏன் இங்க டிரைவராக நடிக்க வேண்டும், நடிப்பதற்கு என்ன காரணம் என்னவாக இருக்கும், சாமுண்டீஸ்வரியிடம் விஷயத்தை சொல்லலாமா இல்லை வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறாள்.

பாட்டி செய்த வேலை: இதையடுத்து மகேஷ் ரேவதியுடன் சேர்ந்து நடனமாட போவதாக மாயாவிடம் சொல்ல இது பரமேஸ்வரி பாட்டிக்கு தெரிய வருகிறது. பாட்டி இதை தடுக்க, ஒரு அரிப்பு வரும் இலையை பறித்து வந்து, அதை மயில்வாகனத்திடம் கொடுத்து, இந்த இலையை மகேஷ் சட்டையில் தேய்த்துவிடும்படி சொல்ல, அவனும் மகேஷின் சட்டையில் அந்த இலையை தேய்த்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X