காதலிக்காக மனைவியை மறந்த ஆனந்த்.. மீனாட்சி வாழ்க்கை என்னாகும்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், பேப்பரில் வந்த செய்தியால் தீபா கதறி அழுகிறாள். இதைப்பார்த்து டென்ஷன் ஆன கார்த்திக், இதெல்லாம் நீங்க பாட கூடாதுனு நடக்குற சதி, இதற்கெல்லாம் கவலைப்பட்டு உட்கார கூடாது. நீங்க பாடணும், உங்க பாட்டால் ஜெயித்து காட்டணும் என்று ஆறுதல் கூறுகிறான்.

இதையடுத்து, ஆனந்த் போனை ஆன் பண்ண ரியா 150 முறை போன் செய்திருக்கும் விஷயம் தெரிய வருகிறது. மேலும், ரியா சூசைட் அட்டென்ட் பண்ணி ஹாஸ்பிடலில் இருப்பதாக சொல்ல ஆனந்த் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு செல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial March 6th Episode

சத்தியம் செய்யும் ஆனந்த்: இன்றைய எபிசோடில் ஆனந்த், தற்கொலைக்கு முயன்ற ரியாவை மருத்துவமனையில் சந்திக்கிறான். அப்போது ரியா, உங்களுக்கு மீனாட்சியுடன் கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சும் உங்க வாழ்க்கைல வந்தது என்னுடைய தப்பு தான் அதனால தான் நான் என் வாழ்க்கையை முடிச்சுக்க முடிவெடுத்தேன் என்று சொல்லிவிட்டு கதறி அழுகிறாள். இதை கேட்ட ஆனந்த் இல்ல நான் உன்னை பார்க்க வந்திருக்கணும் என் மேல தான் தப்பு என்று சொல்லி நான் உன்னுடைய ஆசைப்படியே உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என சத்தியம் செய்து கொடுக்கிறான்.

தவறான செய்தி: மறுபக்கம் தீபாவை பற்றி தவறான செய்தியை போட்ட பத்திரிக்கை ஆபீஸ்க்கு வரும் கார்த்திக் எதை வச்சு இந்த செய்தியை போட்டீங்க என்று சத்தம் போட மேனேஜர் எடிட்டரை கூப்பிட்டு கேட்கும் போது போட்டோவோட செய்தி வந்திருந்தது அதனால் தான் போட்டதாக சொல்கிறார். ஒரே ஒரு போட்டோவை வச்சி தீர விசாரிக்காமல் எப்படி இப்படி நியூஸ் போடலாம் என்று மேனேஜர் சத்தம் போடுகிறார். உடனே கார்த்திக் தீபாவை பத்தி போட்ட இந்த செய்தி தப்புன்னு மன்னிப்பு கேட்டு நீங்க இன்னொரு மறுப்பு செய்தி போடணும் இல்லனா நான் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்ட பத்திரிக்கை அலுவலகத்தில் மன்னிப்பு செய்தி வெளியிட ஒப்புக் கொள்கின்றனர்.

zee tamil television Karthigai Deepam serial March 6th Episode

பெண்ணுக்கு ஆசையாக சீர்: அதை தொடர்ந்து தர்மலிங்கம் மற்றும் ஜானகி இருவரும் நகை கடைக்கு சென்று தீபாவிற்காக ஒரு தங்க நகையை வாங்கிக் கொண்டு அபிராமி வீட்டிற்கு வந்து கொடுக்க அபிராமி நாங்க யாரும் இதை எதிர்பார்க்கலையே அப்படி இருக்கும்போது எதற்கு இதை வாங்கிட்டு வந்தீங்க என்று கேட்க, தர்மலிங்கம் எனக்கும் என் பொண்ணுக்கு சீர் செய்யணும்னு ஆசை இருக்கும் இல்லையா என்று சொல்ல கார்த்திக் அதெல்லாம் எதுக்கு மாமா என்று சொல்கிறான். இருந்தாலும் தன்னுடைய ஆசைக்காக வாங்கிக்குமாறு தீபாவிடம் கொடுக்க தீபா தயங்கி நிற்க மாப்பிள்ளை நீங்க சொன்னா தான் தீபா வாங்கிப்பா என்று சொல்லி அதை தீபாவிடம் கொடுக்கிறார். ராஜேஸ்வரி உங்க பொண்ணுக்கு சீர் செய்யறதுக்கு கூட நாங்க சொல்லி தான் செய்ய வேண்டியதா இருக்கு, அப்புறம் உங்க பொண்ணுக்கு ஏதோ மியூசிக் டைரக்டரோட தொடர்பு இருக்காமே என்று அவமானப்படுத்தி பேசுகின்றனர்.

zee tamil television Karthigai Deepam serial March 6th Episode

மன்னிப்பு செய்தி வரும்: தர்மலிங்கம் அது தப்பான செய்தியா இருக்கும் என்று சொல்ல கார்த்திக் ஆமா மாமா அது தப்பான செய்தி தான். இன்னைக்கு சாயங்காலமே அதே பத்திரிக்கையில் தீபா பற்றிய செய்தி தப்புன்னு மன்னிப்பு செய்தி வெளியாகும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X