ஐசியூவில் தர்மலிங்கம்.. மாமனாரின் ஆசையை நிறைவேற்றுவாரா கார்த்தி..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபா குறித்து பேப்பரில் வந்த செய்தியை நினைத்து வருத்தப்படுகிறார். இதையடுத்து, கார்த்திக் நியூஸ் பேப்பரில் வந்த போட்டோ நம்ம வீட்டு வெளியே எடுத்தது தான். அப்படின்னா நம்ம வீட்டில் யாரோ தான் இந்த செய்தியை கொடுத்திருக்கணும் என்று சொல்கிறாள்.

அதை கேட்டுக்கொண்டு இருந்த ராஜேஸ்வரி என்ன கார்த்திக் வீட்ல இருக்காங்களை சந்தேகப்படுறியா என கேட்க கார்த்திக் சந்தேகம் எல்லாம் இல்லை, யார் பண்ணி இருப்பாங்கனு உறுதியாக என தெரியும் சொல்ல அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து இன்றைய கார்த்திகை தீபம் சீரியலை பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial March 7th Episode

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு: இதையடுத்து, இன்றைய எபிசோடில், தீபா பற்றி வந்த செய்தியை நினைத்து தர்மலிங்கம் அதிர்ச்சி மிகுந்த மனவேதனையில் இருக்க மைதிலி அவருக்கு ஆறுதல் சொல்ல தீபாவின் அம்மா ஜோதி பக்கத்திலிருந்து பார்த்துக் கொள்கிறார். இன்னொரு பக்கம் ரக்சன் தீபாவுக்கு போன் செய்து பாட கூப்பிட்டு இருந்த நிலையில் இங்கே தர்மலிங்கத்திற்கு உடம்பு முடியாமல் போக அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் சேர்க்க தீபாவின் அம்மா கார்த்திக்கு தகவல் கொடுக்கிறார்.

மருத்துவமனையில் தர்மலிங்கம்: கார்த்திக் தீபாவிடம் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் என்று சொல்லி ஹாஸ்பிடல் வந்து பார்க்க தர்மலிங்கம் சீரியஸ் கண்டிஷனில் இருப்பதாக டாக்டர்கள் சொல்கின்றனர். படுக்கையில் கிடைக்கும் தர்மலிங்கம் கார்த்தியை கூப்பிட்டு என் பொண்ணு எப்படியாவது பாட வச்சிடுங்க மாப்பிள என்று கெஞ்ச இந்த விஷயம் தீபாவுக்கு தெரிய வேண்டாம் என்று கார்த்திக் தர்மலிங்கம் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி வீட்டிற்கு கிளம்பி வருகிறான்.

zee tamil television Karthigai Deepam serial March 7th Episode

ஐஸ்வர்யாவிடம் கெஞ்சும் தீபா: தனது வீட்டிற்கு வந்து எல்லோரிடமும் விஷயத்தை சொல்லி தீபாவுக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்று சொல்கிறான். ஐஸ்வர்யாவிடமும் அண்ணி உங்ககிட்ட ரெக்வெஸ்ட்டா கேட்டுக்குறேன் இந்த முறையாவது எனக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X