ஸ்கெட்ச் போட்ட கார்த்திக்.. ரேவதி திருமணத்தில் நடக்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

சென்னை: ரேவதியின் திருமணத்திற்கு வரும் சாமுண்டீஸ்வரியின் தோழிக்கு கார்த்திக் யார் என்பது தெரிந்து விட, ராஜேஸ்வரி கார்த்தியை தனியாக அழைத்து, நீ கார்த்திக் தானே பிசினஸ் மேன் தானே உன் கையெழுத்துக்காக அனைவரும் காத்துக்கிட்டு இருக்க நீ எங்கே டிரைவராக வேலை செய்துக்கிட்டு இருக்க, அதற்கு காரணம் என்ன என்று விசாரிக்கிறாள். அப்போது, கார்த்திக்,,நீங்க ராஜேஸ்வரி தானே.. உங்களை எனக்கு தெரியும் என்று சொல்கிறான். மேலும்,சாமுண்டீஸ்வரி என் அத்தை தான், எங்க குடும்பத்திற்கும் அவங்களுக்கும் ஒரு பிரச்சனையாகி குடும்பம் பிரிந்து விட்டது. இரண்டு குடும்பத்தையும் ஒன்னா சேர்ப்பதற்காகத்தான் நான் இங்க வந்திருக்கேன் என்பதையும் சொல்றேன். இதைக்கேட்ட ராஜேஸ்வரி, நீ ஒரு நல்ல விஷயத்திற்காக இங்கே வந்து இருக்க என்று சொல்கிறாள்.

இன்றைய எபிசோடி: கார்த்திக். மல்லிகா டாக்டரை அழைத்து வந்து காத்திருக்க சொல்லி விட்டு மகேஷ், மாயா ஆகியோரை அழைத்து சென்று இவங்கள பத்தி சொல்லுங்க என்று சொன்னதும் மகேஷ், மாயா அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் டாக்டர் இவர் தான் மாப்பிள்ளையா? நல்லா அழகாகா தான் இருக்காரு என்று மாற்றி சொல்ல அதை கேட்டு கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான்.

zee tamil Karthigai Deepam

நடந்தது என்ன: பிறகு மல்லிகா டாக்டர் சாமுண்டீஸ்வரியை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்லி கார்த்திக்கிற்கு எப்படி, மாயா மகேஷ் விஷயம் தெரியும். அவர் கார்த்திக், ரொம்ப நல்லவனா இருக்காரு, ரேவதியோட வாழ்க்கை நல்லா இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான் என்று சொல்ல, சாமுண்டீஸ்வரி உண்மையை சொல்லல தானே என்று கேட்க, நான் சொல்லவில்லை. ஆனால், மகேஷ் எப்படி பட்டவன் என்பது தெரிந்தும் ஏன் அவனை கல்யாணம் செய்து கொடுக்குற என்று கேட்க, அமைதியா இரு மல்லிகா, என் மகள் ரேவதிக்கு மகேஷ் கூட கல்யாணம் நிச்சயம் நடக்காது. நான் பார்த்து வைத்த மாப்பிள்ளையோடத்தான் திருமணம் நடக்கும் என்று சொல்கிறாள். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை,,மாயா இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். சாமுண்டீஸ்வரிக்கு எல்லா உண்மையும் தெரியுமா... பிறகு ஏன் கல்யாணத்தை வேண்டும் என்று நினைத்து சந்தேகப்படுகிறாள்.,

கார்த்தி தான் இந்த வீட்டு மாப்பிள்ளை: இதையடுத்து, கார்த்திக், மல்லிகா டாக்டரை அழைத்து உங்களுக்கு தான் அவங்களை பத்தி உண்மை தெரியுமே, அப்படி இருக்கும் போது, உண்மையை சொல்லி கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாமே, எதுக்கு உண்மையை சொல்லி,, ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெட்டு போகட்டும்னு இருக்கலாமா என்று கேட்கிறான். உடனே மல்லிகா டாக்டர் நிலமை கை மீறிப்போய்விட்டது. இப்போ கல்யாணத்தை நிறுத்தி என்ன செய்வது என்று சொல்லிவிட்டு செல்கிறாள். இவர்கள் இருவரும் பேசுவதை கேட்ட சாமுண்டீஸ்வரி, டிரைவர் எவ்வளவு நல்லவனாக இருக்கான், கண்டிப்பா இவன் தான் ரேவதி கழுத்தில் தாலி கட்ட வேண்டும், இவனை விட என் மகளுக்கு வேற நல்ல பையன் கிடைக்க மாட்டான் என்று மனதிற்குள் நினைக்கிறாள் சாமுண்டீஸ்வரி. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X