உயிருக்கு போராடும் தர்மலிங்கம்..நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் தர்மலிங்கத்திற்கு உடம்பு முடியாமல் போக அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, தீபாவின் அம்மா கார்த்திக்கிற்கு தகவல் தருகிறார். இதையடுத்து, கார்த்திக் தீபாவிடம் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் என்று சொல்லி மருத்துவமனைக்கு வந்து பார்க்க தர்மலிங்கம் மிகவும் சீரியஸ் கண்டிஷனில் இருப்பதாக டாக்டர்கள் சொல்கின்றனர். படுக்கையில் கிடக்கும் தர்மலிங்கம் கார்த்தியை கூப்பிட்டு என் பொண்ண எப்படியாவது பாட வச்சிடுங்க மாப்ள என்று கெஞ்சுகிறார்.

இதையடுத்து வீட்டுக்கு வரும் கார்த்திக், வீட்டில் இருக்கும் அனைவரிடமும் தர்மலிங்கம் மோசமாக இருக்கும் விஷயத்தை சொல்கிறான். இந்த விஷயம் தீபாவுக்கு தெரியக்கூடாது என்றும், இந்த விஷயம் தெரிந்தால் அவள் உடைந்துவிடுவாள் என்று கார்த்திக் சொல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம்.

zee tamil television Karthigai Deepam serial March 9th Episode

இன்றைய எபிசோட்: அதாவது, கார்த்திக் தீபாவை ஸ்டுடியோவிற்கு அழைத்து வந்து விட இசையமைப்பாளர் ரக்ஷன் பாடலை கொடுத்து இது தான் நீங்க பாட வேண்டியது என்று சொல்ல தீபா அது அப்பா பாடலாக இருப்பதை பார்த்து எமோஷனலாகிறாள். உடனே அப்பா கிட்ட பேசணும் என்று சொல்ல, ஜானகிக்கு போன் செய்ய அவர் அப்பா முருகன் கோவிலுக்கு போய் இருக்கார் என்று பொய் சொல்லிவிட்டு போனை வைக்கிறார். மருத்துவமனையில் டாக்டர்கள் தர்மலிங்கத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக சொல்கின்றனர். கார்த்திக் ஹாஸ்பிடல் பார்மில் கையெழுத்து போட்டு கொடுக்கிறான்.

zee tamil television Karthigai Deepam serial March 9th Episode

சந்தோஷத்தில் தீபா: மறுபக்கம் கோகிலா தீபாவுக்கு தர்மலிங்கம் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்லி அவள் பாடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிளான் போட்டு ஸ்டூடியோவிற்கு கிளம்பி வர அவளை உள்ளே விட மறுக்கின்றனர். அடுத்து தீபா எந்தவொரு தடங்கலும் இல்லாமல் பாடி முடிக்கிறாள். ரக்சன் பாடியதற்கான பணத்தை செக்காக கொடுக்க தீபா மிகுந்த சந்தோசம் அடைகிறாள்.

zee tamil television Karthigai Deepam serial March 9th Episode

இனி நடக்கப்போவது என்ன: இதை உடனே அப்பா கிட்ட கொடுக்க வேண்டும் என்று கிளம்ப கார்த்திக் அவளை பிக்கப் செய்து அழைத்து செல்கிறான். போகும் வழியில் தீபா காரை நிறுத்த சொல்லி அப்பாவுக்கு பிடித்தவற்றை வாங்க கார்த்திக் தர்மலிங்கம் மருத்துவமனையில் இருக்கும் விஷயத்தை சொல்ல தீபா உடைந்து கதறி அழுகிறாள். கண்ணீருடன் அப்பாவை பார்க்க ஹாஸ்பிடலுக்குள் ஓடி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X