தாலி கட்டிட்டா அவன் புருஷனா.. கழட்டி வீசு ரேவதி.. கட்டாயப்படுத்திய மகேஷ்.. கார்த்திகை தீபம் சீரியல்
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் வெள்ளிக்கிழமை கோவில் திருவிழாவில் அனைவரும் கார்த்திக் மற்றும் ரேவதியை சாப்பாடு ஊட்டி விட சொல்ல இருவரும் மாறி மாறி ஊட்டிக் கொள்கின்றனர். அந்த நேரம் சாமுண்டீஸ்வரிக்கு ஒரு போன் கால் வருகிறது. சாமுண்டீஸ்வரி மகேஷ் பத்தி பேச ரேவதி இதை ஒட்டி கேட்டு விடுகிறாள். அதன்பிறகு சாமுண்டீஸ்வரிக்கு தெரியாமல் காரில் ஏறி அவளுடன் மகேஷ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறாள் ரேவதி. இத்தனை நாளாக டிரைவர் ராஜா தான், மகேசை கடத்தி வைத்து இருந்தான் என நினைத்து இருந்தோம். ஆனால், அம்மா இப்படி ஒரு வேலையை செய்து இருக்கிறார்களே என்று வருத்தப்படுகிறாள். இதையடுத்து என்ன, ஆனாது என்று பார்க்கலாம்.
சாமுண்டீஸ்வரி வீட்டில் நிறைய பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாக, வருமான வரித்துறையினர் வீட்டிற்கு சோதனை செய்ய வருகின்றனர். சந்திரகலா அக்கா மாட்டிக்கிட்டா இந்த திருவிழா நடக்காது என சந்தோஷப்படுகிறாள். வீட்டிற்குள் வரும் வருமான வரித்துறையில் வீடு முழுக்க சோதனை போட்டு
விட்டு, பணம் எதுவும் இல்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் கிளம்பிச் செல்ல சந்திரகலா ஷாக் ஆகிறாள். மற்றொரு பக்கம், ரேவதி யாருக்கும் தெரியாமல் மகேஷை அடைத்து வைத்திருக்கும் குடோனுக்கு வருகிறாள். கட்டப்பட்டு கிடக்கும் மகேஷை காப்பாற்றுகிறாள். இங்கிருந்து தப்பித்து போ என்று சொல்ல அவன் ரேவதியை வா எங்கேயாவது போய் விடலாம் என்று சொல்கிறான்.

கார்த்திகை தீபம்: ஆனால் ரேவதி தனக்கு கல்யாணம் ஆகிருச்சு.. அதெல்லாம் சரியா வராது நீ தப்பித்து போ என்று சொல்கிறாள். இந்த சமயத்தில் ரவுடிகள் அங்கு வந்து விடுகின்றனர். ரவுடிகள் மகேஷை பிடிக்க முயலும் போது அவனை கத்தியால் குத்தி விட ரேவதி அதிர்ச்சி அடைகிறாள். அடுத்து ரவுடிகள் அங்கிருந்து தப்பி செல்ல கார்த்திக், ரேவதி எங்கே போனா என்று சந்தேகப்பட்டு இங்கு வர மகேஷ் ரத்த வெள்ளத்தில் இருப்பதை கவனித்து அவனை தனக்கு தெரிந்த ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறான். சாமுண்டேஸ்வரி குடோனுக்கு வர அங்கு யாரும் இல்லாததை பார்த்து குழப்பம் அடைகிறாள். மாயா வீட்டிற்கு செல்ல அங்கு அவள் மகேஷை காணவில்லை என புலம்பியபடி இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











