மீனாட்சிக்கு வீடு தேடி வந்த வரன்.. அதிர்ச்சியில் ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் ஐஸ்வர்யா கர்ப்பம் இல்லை என்ற விஷயம் அபிராமிக்கு தெரியவர, ஐஸ்வர்யாவை கன்னத்தில் அறைந்து, இவ்வளவு நாளா கர்ப்பம் என்று சொல்லி எல்லாரையும் ஏமாத்திட்டு இருந்து இருக்கா என்ற உண்மையை உடைக்க அருணும் அவளை அறைகிறான். இனிமே இந்த வீட்ல உனக்கு உனக்கு இடமில்லை என்று வெளியில் துரத்துகிறான்.

ஐஸ்வர்யா வெளியே போனதை நினைத்து சந்தோஷப்படும் ரியா, இனிமே மூத்த மருமகளா நம்ம ராஜ்யம் என்று நினைத்து சந்தோசப்படுகிறாள், அடுத்து ஐஸ்வர்யா ஒரு பார்க்கிற்கு ரியாவை வர வைத்து அந்த தீபாவை சும்மா விட கூடாது, அங்க நடக்கிற எல்லா விஷயத்தையும் எனக்கு தெரியப்படுத்து என்று சொல்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil television Karthigai Deepam serial May 13th Episode

காதலில் விழுந்த ரம்யா: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், பேக்டரிக்கு வந்திருக்கும் வெளிநாட்டு பிசினஸ் மேன்களிடம் ஆங்கிலத்தில் பேசி மிஷின் குறித்து விளக்கம் கொடுக்கிறான் கார்த்திக். ஏற்கனவே கார்த்தி மீது காதலில் இருக்கும் ரம்யாவிற்கு இதைப் பார்த்து மேலும் காதல் அதிகமாகிறது. அதைத்தொடர்ந்து அபிராமி வீட்டில் ஆனந்த் மற்றும் ரியா உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் மீனாட்சி தேடி வீட்டுக்கு வருகிறார்.

கடுப்பான ஆனந்த்: மீனாட்சி இருக்காங்களா என்றும், அவங்கள பாக்கணும் என்று கேட்க ஆனந்த் முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க என்று கேட்க மேட்ரிமோனியில் மாப்பிள்ளை வேணும்னு விளம்பரம்கொடுத்து இருந்தாங்க அதை பார்த்து தான் வந்துவிட்டேன் என்று சொல்ல கடுப்பாகும் ஆனந்த் மீனாட்சினு யாருமில்லை என்று சொல்லி அவனை துரத்துகிறான். இந்த நேரம் பார்த்து வெளியே வரும் தீபா, ஒரு நிமிஷம் மீனாட்சி இந்த வீட்டு பொண்ணு தான் என்று கூப்பிட்டு உட்காரவைத்து அவங்க வெளியே போயிருக்காங்க நான் போன் போட்டு வர சொல்றேன் என்று சொல்லி மீனாட்சி வீட்டுக்கு வர வைக்கிறாள்.

கல்யாணத்துக்கு ரெடியான மீனாட்சி: மீனாட்சி பார்த்ததும் அந்த நபர் அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்க எப்ப கல்யாணம் வச்சுக்கலாம் என்று கேட்க ஆனந்த் எனது கல்யாணமா என்று அதிர்ச்சி அடைகிறான். நீ எதுக்கு இப்ப கல்யாணம் பண்ண போற என்று மீனாட்சியிடம் சண்டை போட அவள் நீங்க உங்களுக்கு புடிச்ச ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தீங்க நான் ஒரு கல்யாணம் பண்ணிக்க கூடாதா… என்று கேள்வி கேட்கிறாள்.

மீனாட்சிக்கு வந்த வரன்: அதன் பிறகு ஆனந்த் வந்தவனிடம் அவள் என் பொண்டாட்டி இன்னும் விவாகரத்து கூட ஆகல என்று சொல்ல பரவால்ல அதெல்லாம் வாங்கிக்கலாம் என்று சொல்லி கேஷுவலாக எடுத்துக் கொள்ள ஆனந்த் அவளுக்கு ரெண்டு குழந்தை இருக்கு என்று சொல்கிறான். ஓ அப்படியா ரெண்டு குழந்தை பெத்த மாதிரி தெரியலையே… நம்பவே முடியல இன்னும் ஸ்லிம்மா அழகா இருக்கீங்க என்று மீனாட்சி பார்த்து அசடு வழிய தீபா நாளைக்கு கோவில்ல வச்சு மீதியை பேசிக்கலாம் என்று அவரை அனுப்பி வைக்கிறார். அதன் பிறகு தீபா மீனாட்சியிடம் அவருக்கு உங்க மேல இன்னும் காதல் இருக்கு, ரியா தான் ஏதோ பண்ணி வைத்திருக்கிறாய் என்று சொல்ல மீனாட்சி ஆமா எனக்கும் இப்பதான் அவர் மேல கொஞ்சம் நம்பிக்கை வந்து இருக்கு என்று பேசுகிறாள்.

பணம் இருக்கு: அடுத்ததாக தீபா, ரம்யா வீட்டுக்கு வர ரம்யா அவளை வரவேற்று தன்னுடைய அப்பாவுக்கு என்னுடைய ஸ்கூல் ஃப்ரெண்ட் தீபா என்று அறிமுகம் செய்து வைக்கிறாள். ரம்யாவின் அப்பா கோடி கோடியா பணமும் சொத்தும் இருக்கு ஆனா ரம்யாவுக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு ஆசையா இருக்கு, கல்யாணத்துக்கு மட்டும் சம்மதம் சொல்ல மாட்டா அவளுடைய கல்யாணத்தை பார்க்காமலேயே போய் சேர்ந்திடுவேன் போல என்று வருத்தப்பட்டு பேச தீபா அவகிட்ட நான் பேசுறேன் என்று ஆறுதல் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X