தோழியின் மனம் கவர்ந்தவன் தன் கணவனா.. தீபாவுக்கு தெரிய வருமா உண்மை? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கோவிலுக்கு செல்லும் தீபா, எதேர்ச்சையாக ரம்யாவை சந்திக்கிறார். இதையடுத்து, தீபாவை வீட்டுக்கு அழைத்து சென்று தனது அப்பாவிற்கு, என்னுடைய ஸ்கூல் ஃப்ரெண்ட் தீபா என்று அறிமுகம் செய்து வைக்கிறாள்.
ரம்யாவின் அப்பா கோடி கோடியா பணமும் சொத்தும் இருக்கு ஆனா ரம்யாவுக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு ஆசையா இருக்கு, கல்யாணத்துக்கு மட்டும் சம்மதம் சொல்லாம இருக்கா, அவளுடைய கல்யாணத்தை பார்க்காமலேயே போய் சேர்ந்திடுவேன் போல என்று வருத்தப்பட்டு பேச தீபா அவகிட்ட நான் பேசுறேன் என்று ஆறுதல் சொல்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

போட்டோவால் வரும் பிரச்சனை: இதையடுத்து இன்றைய கார்த்திகை தீபம் எபிசோடில், அபிராமி வீட்டில் ரியா பெயருக்கு ஒரு கொரியர் வர அதை பிரித்து பார்க்கும் போது ஆனந்த் ரியாவின் கல்யாண போட்டோ என்பது தெரிய வருகிறது. ரியா இதை வீட்டு ஹாலில் மாட்ட வேண்டும் என்று சொல்ல அபிராமி, அருணாச்சலம் ஆகியோர் அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் ரியா மாட்டியே ஆக வேண்டும் என்று வாக்குவாதம் செய்ய தீபா வீட்டிற்குள் நுழைகிறாள்.
சவால் விடும் ரியா: இங்கே நடப்பதை தெரிந்து கொண்ட தீபா. அதான் மாட்ட வேண்டாம்னு சொல்றாங்கல, போட்டோவை மாட்டக்கூடாது என்று சொல்ல, ரியாவோ யார் பேச்சையும் கேட்காமல், தனது முடிவில் உறுதியாக இருக்க தீபா அந்த போட்டோவை பிடிங்கி கொண்டு போய் வெளியில் போட்டு உடைக்கிறாள். இதை சற்றும் எதிர்பார்க்காத ரியா, இதை விட பெரிய போட்டோவை நான் இந்த வீட்டில் மாட்டி காட்டுறேன் என்று சவால் விடுகிறாள்.
பேச மறுக்கும் கார்த்திக்: மறுபக்கம், கார்த்திக் கம்பெனியில் இருந்து வீட்டுக்கு, தீபா தன்னுடைய ப்ரண்ட் அம்மு வீட்டிற்கு சென்றிருந்ததாக சொல்கிறாள், அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கணும் 15 ப்ரொபைல் வந்திருக்கு, இதுல ஏதாவது பேஸ்ட்டா சொல்லுங்க என்று கார்த்திக்கிடம் கேட்க அவன் மற்றவங்க வாழ்க்கைக்கு நான் எப்படி மாப்பிளை பார்க்க முடியும் என்று நோ சொல்கிறான். இந்த நேரம் பார்த்து ரம்யா போன் செய்ய தீபா போனை எடுத்து அம்மு என்று இன்னொரு பெயரை சொல்லி பேசுகிறாள். கார்த்திக்கிடம் என் ப்ரண்ட் கிட்ட பேசுங்க என்று போனை கொடுக்க கார்த்திக் வேண்டாம் என்று மறுக்க அவர் கூச்சப்படுகிறார் என்று சொல்லி விடுகிறாள் தீபா.
தீபாவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி: மறுநாள் தீபாவும் ரம்யாவும் கோவிலில் சந்திக்க தீபா கல்யாண பேச்சை எடுக்க ரம்யா அமைதியாகவே நிற்கிறாள், இதனால் தீபா நீ யாரையாவது லவ் பண்ணுறியா என்று கேட்க, ரம்யா நான் என் கம்பெனியில் வேலை செய்யும் எம்பிளாயி ஒருத்தரை லவ் பண்றேன் என்று சொல்லி கார்த்திக்கை அறிமுகம் செய்து வைக்க அழைத்து செல்கிறாள். இதையெல்லாம் கேட்ட ஐஸ்வர்யா ஒருவேளை அந்த நபர் கார்த்தியாக இருக்குமோ என்று சந்தேகம் கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











