ரம்யாவின் காதலன் யார்? உண்மையை தெரிந்து கொள்ளும் ஐஸ்வர்யா..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கோவிலுக்கு செல்லும் தீபா, எதேர்ச்சையாக ரம்யாவை சந்திக்கிறார். இதையடுத்து, தீபாவை வீட்டுக்கு அழைத்து சென்று தனது அப்பாவிற்கு, என்னுடைய ஸ்கூல் ஃப்ரெண்ட் தீபா என்று அறிமுகம் செய்து வைக்கிறாள்.

இதையடுத்து மறுநாள் தீபாவும் ரம்யாவும் கோவிலில் சந்தித்து பேச, கல்யாண பேச்சை எடுக்க ரம்யா அமைதியாகவே நிற்கிறாள், இதனால் தீபா நீ யாரையாவது லவ் பண்றியா என்று கேட்க, ரம்யா நான் என் கம்பெனியில் வேலை செய்யும் எம்பிளாயி ஒருத்தரை லவ் பண்றேன் என்று சொல்லி கார்த்திக்கை அறிமுகம் செய்து வைக்க அழைத்து செல்கிறாள். இதையெல்லாம் கேட்ட ஐஸ்வர்யா ஒருவேளை அந்த நபர் கார்த்திக்காக இருக்குமோ என்று சந்தேகம் கொள்கிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil television Karthigai Deepam serial May 15th Episode full review

இன்றைய எபிசோட்: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், ரம்யா தனது கேபினில் இருந்து தீபாவை கூப்பிட்டு அவன் தான் தன்னுடைய காதலன் என்று கார்த்திக்கை கை காட்ட தீபா பார்க்கும்போது கார்த்திக் அங்கே இல்லாமல் இருக்க, அங்க யாரையும் காணோமே என்று சொல்ல, இப்போ தானே இருந்தாரு. எங்கையாவது வெளியில் போய் இருப்பார் என்று சொல்ல, தீபா சரி விடு ரம்யா இன்னொரு நாள் பார்க்கலாம் என்று சொல்லி விடுகிறாள்.

புதிய பிளான்: இதே நேரத்தில் செக்யூரிட்டிக்கு காசு கொடுத்து உள்ளே வந்திருந்த ஐஸ்வர்யா இங்கு நடப்பதை பார்த்து ரம்யா காதலிப்பது கார்த்திக்கை தான் என்பதை புரிந்து கொள்கிறாள். உடனே ஆனந்த்திற்கு ரம்யாவின் போட்டோவை அனுப்பி இவதான் ரம்யா என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறாள். ஓ கதை இப்படி போகுதா, என்னையா வீட்டை விட்டு அனுப்புன, உன்னையும் இந்த ரம்யாவை வச்சே வீட்டை விட்டு அனுப்புறேன் பாரு என்று சவால் விட்டுவிட்டு ரியாவை சந்தித்து விஷயத்தை சொல்கிறாள் ஐஸ்வர்யா.

பைக்கில் செல்லும் கார்த்திக்: அடுத்ததாக ரம்யா ஒரு டெண்டர்காக பிஏவை கூப்பிட்டு ஒரு தொகையை சொல்லி அதை வைத்து கொட்டேஷன் ரெடி பண்ண சொல்கிறாள். அந்த பிஏ ஆனந்துக்கு போன் போட்டு இவ்வளவு அமௌன்டுக்கு கொட்டேஷன் கொடுத்து இருக்காங்க நீங்க அதுக்கு ஏத்த மாதிரி பார்த்து பண்ணுங்க எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துடுங்க என்று சொல்கிறான்.

அதைத்தொடர்ந்து ரம்யா அவசர அவசரமாக கார்த்திக்கை கூப்பிட்டுக் கொண்டு டென்டருக்கு கிளம்ப கார் ஸ்டார்ட் ஆகாத நிலையில் கார்த்திக் பைக்ல போலாமா என்று கேட்டு இருவரும் பைக்கில் கிளம்பி செல்கின்றனர். இதைப் பார்த்த பெண் ஒருவர் தீபாவுக்கு போன் போட்டு கார்த்திக் ஒரு பெண்ணோட செல்வதாக சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X