உன்னால் முடிந்ததை பார்த்துக்கோ.. சந்திரகலாவிடம் சவால் விட்ட கார்த்திக்.. கார்த்திகை தீபம்!
சென்னை: சிவனாண்டி வெளி ஊருக்கு வருகிறார். அப்போது, கார்த்திக் ஒரு வெள்ளைக்காரனுடன் கை கொடுத்து கொண்டு இருப்பது போல் ஒரு போட்டோவை பார்த்துவிட்டு, சிவனாண்டி ஷாக் ஆகி விசாரிக்க டிரைவராக இருப்பது ராஜா இல்ல கார்த்திக் என்ற விஷயம் தெரிய வருகிறது, ராஜசேதுபதியின் பேரன் என்ற விஷயத்தையும் அறிகிறாள். உடனே ஊருக்கு கிளம்புகிறான். ஊருக்கு வந்ததும் சந்திரகலாவை சந்தித்து மொத்த உண்மைகளையும் உடைக்கிறான். அதுமட்டுமின்றி சந்திரக்கலாவை வைத்து சாமுண்டீஸ்வரிக்கு உண்மைகளை தெரியப்படுத்த திட்டம் போடுகிறான். அவனது திட்டத்தின்படி வீட்டிற்கு வந்த சந்திரகலா நீ வா அக்கா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லணும் என்று சாமுண்டீஸ்வரியை கார்த்திக்கின் ஆபிஸிற்கு அழைத்து செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில், சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரி ஆபிஸுக்குள் நுழைய அங்கு இளையராஜா பாஸாக சேரில் உட்கார்த்திருக்கிறான். இதைப்பார்த்த சந்திரகலா அதிர்ச்சி அடைகிறாள். சாமுண்டீஸ்வரி சந்திரக்கலாவை திட்டியபடி வீட்டிற்கு வருகிறாள். வீட்டிற்கு வந்த சாமுண்டீஸ்வரி சந்திரக்கலாவை திட்டி விட்டு கிளம்பி செல்ல கார்த்திக், சந்திரகலாவிடம் நான் ராஜசேதுபதியோட பேரன் தான். இந்த குடும்பத்தை ஒன்னு சேர்க்க தான் இங்க வந்திருக்கேன். உங்களால் முடிந்ததை பாருங்க என்று பதிலடி கொடுக்கிறான்.

கார்த்திகை தீபம்: அடுத்து கார்த்திக் வெளிநாடு செல்லும் ரேவதிக்கு ஒரு கிப்ட் வாங்கி வந்து கொடுக்கிறான். இந்த சமயத்தில் அபிராமி ஃபோன் செய்து ரேவதியை அழைத்து கொண்டு கோவிலுக்கு வர சொல்கிறாள். சித்தர் ஒருவர் உங்க பையன் மனைவியை 5 வருஷம் பிரிந்து இருக்க வேண்டி இருக்கும் என்று சொன்னதாக சொல்லி பரிகாரம் ஒன்றை செய்ய சொல்கிறாள். இதனால் ரேவதி கார்த்திக்கிடம் நீங்க தான் உங்க அம்மா கிட்ட சொன்னீங்களா என்று சத்தம் போடுகிறாள். பிறகு கார்த்திக் இந்த கும்பாபிஷேகம் முடிந்ததும் நானே உண்மையை சொல்லி விட போகிறேன் என்று முடிவெடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











