கார்த்திக், ரேவதி நிச்சயம் பிரிவார்கள்.. எச்சரித்த சாமியார்.. கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: நேற்றைய எபிசோடில், டிரைவர் ராஜா உண்மையான டிரைவர் இல்லை, இவர் உன்னை ஏமாற்றி விட்டார். அவர் உண்மையில் யார் என்பதை நான் சொல்கிறேன் வா என்று, சாமுண்டீஸ்வரியை அழைத்துக்கொண்டு சென்னை வருகிறாள். இதை தெரிந்து கொண்ட கார்த்திக், ஒரு ஐடியாவை பக்கவாக போட்டு விடுகிறார். சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரி ஆபிஸுக்குள் நுழைய அங்கு இளையராஜா பாஸாக உட்கார்த்திருக்கிறான். இதைப்பார்த்த சந்திரகலா அதிர்ச்சி அடைகிறாள். சாமுண்டீஸ்வரி சந்திரக்கலாவை திட்டியபடி வீட்டிற்கு வருகிறாள். வீட்டிற்கு வந்த சாமுண்டீஸ்வரி சந்திரக்கலாவை திட்டி விட்டு கிளம்பி செல்ல கார்த்திக், சந்திரகலாவிடம் நான் ராஜசேதுபதியோட பேரன் தான். இந்த குடும்பத்தை ஒன்னு சேர்க்க தான் இங்க வந்திருக்கேன். உங்களால் முடிந்ததை பாருங்க என்று சந்திரகலாவிடம் சவால் விடுகிறான். இந்த சமயத்தில் அபிராமி, கார்த்திற்கு ஃபோன் செய்து ரேவதியை அழைத்து கொண்டு கோவிலுக்கு வர சொல்கிறாள். இதையடுத்து, இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ரேவதியை சந்தித்த அபிராமி, சித்தரை பார்த்ததாகவும் அவர் நீங்க இரண்டு பேரும் 5 வருடம் பிரிந்து இருக்க போவதாகவும் அதை தடுக்க பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் சொன்னதாக சொல்கிறாள். இதைக்கேட்டு, ரேவதி, சாமியார் அப்படித்தான் சொல்லுவார்கள், பரிகாரம் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்கிறாள். அப்போது, அபிராமி, மாலை வாங்கி வந்து கொடுத்து, பரிகாரத்தை செய்ய சொல்கிறாள். இதையடுத்து, அபிராமி காவடி எடுக்கப்போவதாக சொல்ல, ரேவதியும், கார்த்திக்கும் கஷ்டப்படுகின்றனர். பிறகு ரேவதி கார்த்தியிடம் நீங்க தான் உங்க அம்மா கிட்ட சொன்னீங்களா என்று சத்தம் போடுகிறாள்.

கார்த்திகை தீபம்: கார்த்திக் இல்லை என்று மறுக்கிறான். அடுத்து ராஜசேதுபதி ஊரில் இல்லாத காரணத்தால் கோவில் நகைகளை பேங்கில் இருந்து எடுத்து வர கார்த்திக் கையெழுத்து போட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. கார்த்திக் இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது என்று சொல்ல சந்திரகலா சிவனாண்டி இந்த விஷயம் அறிந்து கார்த்தியை மாட்டி விட திட்டம் போடுகின்றனர், ஆனால் கார்த்தி அந்த விஷயத்தையும் முறியடிக்கிறான்.
அடுத்து வந்த பிரச்சனை: இதையடுத்து சிவணாண்டியின் சித்தப்பா முத்துவேல் என்பவன் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வர சாமுண்டீஸ்வரி நீ ஜெயிலுக்கு போகவே நான் தான் காரணம்.. உஷாரா இரு என்று எச்சரிக்கிறான். அடுத்து கார்த்தியை பார்த்த முத்துவேல், சிவணாண்டியிடம் யார் அது என்று விசாரித்து ராஜசேதுபதியின் மகன் என தெரிந்து கொள்கிறான். தொடர்ந்து முத்துவேல் சிவணாண்டியிடம் சாமுண்டேஸ்வரி அம்மா சிவகாமி சாவுக்கு ராஜசேதுபதி காரணம் இல்ல, நான் தான் விஷத்தை கொடுத்து கொன்னேன் என்று பிளாஷ்பேக் கதையை சொல்கிறான். இந்த விஷயம் சாமுண்டீஸ்வரிக்கு தெரிய கூடாது என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











