ஐஸ்வர்யா ஆடும் சதுரங்க ஆட்டம்.. பகடைக்காயாகும் ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில்,ரம்யாவை பைக்கில் அழைத்து சென்றது குறித்து கார்த்திக்கிடம் தீபா கேட்டு கோபப்படுகிறாள். கார்த்திக் என்னோட பாஸ் தான் கூட்டிட்டு போனேன் கார் ரிப்பேர் ஆயிடுச்சு. முக்கியமா போக வேண்டிய டெண்டர் மீட்டிங். அதனால் பைக்கில் கூட்டிட்டு போனேன் என்று சொல்கிறான்.

இதைக் கேட்ட தீபா இதெல்லாம் சரிதான் ஆனால் இனி யாரையும் நீங்க பைக்ல கூட்டிட்டு போகக்கூடாது. உங்க கூட பைக்ல உட்காரும் உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கு என்று கண்டிஷன் போட கார்த்திக்கு அதற்கு சம்மதம் தெரிவித்து பிரச்சனையை தீர்க்கிறான். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil television Karthigai Deepam serial May 17th Episode full review

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் இரவு நேரத்தில் தீபா, துணி துவைத்துக் கொண்டிருக்க அங்கு வரும் அபிராமி அந்த நேரத்துல என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்க, அவரோட துணியை துவைச்சிட்டு இருக்கேன் என்கிறாள். நான் துணியை துவைத்து தருகிறேன் கொடுங்க என்று கேட்டேன்.ஆனால், வேண்டாம் என்று சொல்லிட்டார். அதனால, அவர் தூங்குற வரைக்கும் காத்திருந்து துவைச்சிட்டு இருக்கேன் என்று சொல்கிறாள்.இதைக் கேட்ட அபிராமி நீ எவ்வளவு நல்லவளா இருக்க உன்னை புரிஞ்சுக்காம நான் ரொம்ப காயப்படுத்திட்டேன் என்று வருத்தப்படுகிறாள்.

காதல் படுத்தும்பாடு: அதன் பிறகு மறுநாள் காலையில் தீபா, ரம்யாவை கோவிலில் சந்தித்து பேச ரம்யா சரியா சாப்பிட முடியல, தூங்க முடியல, என புலம்ப இது காதல் பண்ற வேலை என்று கலாய்க்கிறாள். தீபா ரம்யாவின் காதலனுக்காக ஒரு காதல் கடிதத்தை கொடுத்து இதை உன் ஆள் கிட்ட கொடு கண்டிப்பாக உன்னை ஏத்துப்பான் என்று கொடுக்கிறாள். இதையெல்லாம் மறைந்து நின்று பார்த்த ஐஸ்வர்யா, தீபாவின் வாழ்க்கையில் விளையாட சரியான வாய்ப்பு கிடைத்திருப்பதாக நினைத்து சந்தோஷப்படுகிறாள்.

மீனாட்சிக்கு கல்யாணமா: அடுத்ததாக ஆனந்த் வீட்டுக்கு வரும்போது தீபாவும் மைதிலியும் மீனாட்சி கோவிலுக்கு போய் இருக்காங்க அநேகமா அந்த மாப்பிள்ளை பார்க்க தான் நினைக்கிறேன். மீனாட்சிஅக்கா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடுவாங்க போல என்று பேசிக் கொண்டிருக்க இதை கேட்ட ஆனந்த் பதறி அடித்து கிளம்ப, கார் ஸ்டார்ட் ஆகாமல் இருக்க ஒரு ஆட்டோவை பிடித்து கோவிலுக்கு வேக வேகமாக வருகிறான். கோவிலில் கல்யாணம் மீனாட்சிக்கு இல்லை என்று தெரிந்து அவன் நிம்மதி அடைய அங்கு வந்த மீனாட்சி என்ன பதறிட்டீங்க போல என்று கேட்க அப்படியெல்லாம் இல்ல கோவிலுக்கு தான் வந்தேன் என்று சொல்லி சமாளித்து அங்கிருந்து கிளம்பி செல்கிறான்.

ஐஸ்வர்யாவின் பிளான்: மறுபக்கம் தீபா கொடுத்த காதல் கடிதத்துடன் ஆபீஸ் வந்த ரம்யா, அதை பைலுக்குள் ஆபிஸ் பாயிடம் இதை கார்த்தியிடம் கொடுக்க சொல்லி அனுப்பிகிறாள். அந்த நேரம் அங்கு வரும் ஐஸ்வர்யா,ஆபிஸ் பாயிடம் பணத்தை கொடுத்த, அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு, அதே பைலுக்குள், வேறு ஒரு லெட்டரை எழுதி ரம்யாவிடம் கொடுக்க சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X