கார்த்திக் தீபாவின் கல்யாண கொண்டாட்டம்.. காதலன் உண்மை தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபா கொடுத்த காதல் கடிதத்துடன் ஆபீஸ் வந்த ரம்யா, அதை பைலுக்குள் வைத்து ஆபிஸ் பாயிடம் இதை கார்த்திக்கிடம் கொடுக்க சொல்லி அனுப்புகிறாள். அந்த நேரம் அங்கு வரும் ஐஸ்வர்யா, ஆபிஸ் பாயிடம் பணத்தை கொடுத்து அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு, அதே பைலுக்குள், வேறு ஒரு லெட்டரை எழுதி ரம்யாவிடம் கொடுக்க சொல்கிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
கார்த்திதை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில், அந்த லெட்டரில் ஐ லவ் யூ டூ எனவும் ஆனால் இப்போதைக்கு நம்முடைய காதல் வெளியில் தெரிய வேண்டாம், எனக்கு சில குடும்ப பிரச்சனைகள் இருப்பதால் அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும் என்பது போலவும் எழுதி இருக்கிறது. காரத்திக் காதலை ஏற்று கொண்ட சந்தோஷத்தில் ரம்யா இருக்கிறாள்.

இன்றைய எபிசோடு: மறுபக்கம் அபிராமி கார்த்திக், தீபா கல்யாணத்தில் நான் எதுவுமே பண்ணல, அவங்களுடைய கல்யாண நாளையாவது சிறப்பாக கொண்டாடணும்னு நினைப்பதாக சொல்ல அருணாச்சலம் இந்த வீட்டோட அடுத்த நாச்சியார் தீபா தான். நீ கல்யாணமாகி வந்த புதுசுல எப்படி இருந்தாயோ அதே மாதிரி தான் அவளும் இருக்கா என்று சொல்கிறார்.
திருமண நாள் கொண்டாட்டம்: இதையடுத்து ரம்யா தீபாவை கோவிலில் சந்தித்து அவர் என்னுடைய காதலுக்கு ஓகே சொல்லி விட்டதாக சொல்ல வாழ்த்து சொல்லும் தீபா அப்பா கிட்ட சொல்ல வேண்டியது தானே என்று சொல்ல அவர் கிட்ட சொன்னா உடனே கல்யாணம்னு சொல்லுவார். ஆனால் அது இப்போ முடியாது என்று சொல்கிறாள். இங்கே நடப்பது அனைத்தையும் ஒட்டு கேட்கும் ஐஸ்வர்யா ரியாவுடன் கூட்டு சேர்ந்து ரம்யாவை வைத்து கேம் விளையாட பிளான் போடுகிறாள்.
ஐஸ்வர்யா போட்ட திட்டம்: இதையடுத்து ரம்யாவின் அப்பாவிடம் தீபா ரம்யாவின் காதல் குறித்து சொல்ல அவர் எம்பிளாயியா என்று முதலில் ஷாக் ஆனாலும் ரம்யா எல்லாத்தையும் யோசித்து சரியா தான் முடிவு எடுத்திருப்பா என்று சம்மதம் சொல்கிறார். மறுபக்கம் அபிராமி கார்த்திக் தீபா கல்யாண நாளை பெருசா கொண்டாட போறதா வீட்டில் உள்ளவர்களிடம் சொல்கிறாள்.
அடுத்த நாள் அதற்கான ஏற்பாடுகள் நடக்க ரம்யா இவர்களது கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு வருகை தருகிறாள். கார்த்திக் ரூமில் ரெடியாகி கொண்டிருக்க ரம்யா அவனை பார்த்து விடுவாளா என்ற பில்டப் எகிற கார்த்திக் கீழே இறங்கி வரும் சமயத்தில் ஐஸ்வர்யா, ரம்யாவுக்கு ஒருவரை வைத்து போன் செய்து அப்பாவுக்கு உடம்பு முடியல, ஹாஸ்பிடலில் இருப்பதாக பேச வைக்கிறாள், இதனால் ரம்யா பதறியடித்து அங்கிருந்து கிளம்பி விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











