சாமுண்டீஸ்வரியின் அம்மாவை கொன்றது யார்? ரேவதி மனதிற்குள் வந்த காதல்.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் வெள்ளிக்கிழமைக்கான எபிசோடில், ராஜசேதுபதி ஊரில் இல்லாத காரணத்தால் கோவில் நகைகளை பேங்கில் இருந்து எடுத்து வர கார்த்திக் கையெழுத்து போட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. கார்த்திக் இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது என்று சொல்ல சந்திரகலா சிவனான்டிக்கு இந்த விஷயம் தெரிந்து விட, கார்த்தியை மாட்டி விட திட்டம் போடுகின்றனர், ஆனால் கார்த்தி அந்த திட்டத்தை முறியடிக்கிறான்.

சிவனான்டியின் சித்தப்பா முத்துவேல் என்பவன் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வந்து நேரடியாக சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வந்து சத்தம் போடுகிறான். அப்போது, சாமுண்டீஸ்வரி நீ ஜெயிலுக்கு போகவே நான் தான் காரணம்.. உஷாரா இரு என்று எச்சரிக்கிறான். அடுத்து கார்த்தியை பார்த்த முத்துவேல், சிவனான்டியிடம் யார் அது என்று விசாரித்து ராஜசேதுபதியின் மகன் என தெரிந்து கொள்கிறான். அப்போது சிவனான்டியும் சித்தப்பா முத்துவேலும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது முத்துவேல், சாமுண்டீஸ்வரியின் அம்மாவை போட்டு தள்ளுனது நான் தான். அவங்க வீட்டுல கல்யாணம் நடக்கும் நேரத்தில் யாருக்கும் தெரியாமல் காஃபில விஷத்தை கலந்துட்டேன். அந்த நேரத்துல தான் கோவில் நகையை காணவில்லை என்று குருக்கள் சொன்னாரு. இதைக்கேட்டு அனைவரும் சாமுண்டீஸ்வரி அம்மா மீது சந்தேகப்பட, அந்த இடத்திலேயே அவ உயிரை விட்டுட்டாள். உடனே அனைவரும் அவ அதிர்ச்சியில் செத்துவிட்டதாக நினைச்சிட்டாங்க. ஆனால், அவ, நான் கொடுத்த விஷத்தினால் தான் செத்தா. இந்த விஷயம் யாருக்குமே தெரியாது அவளோட கதையை நான் தான் முடித்து வைத்தேன் என்று முத்துவேல் பெருமையாக சொல்லிக்கொண்டு இருக்கிறான்.

zee tamil Karthigai Deepam

கார்த்திக் ரேவதி காதல்: இன்றைய எபிசோடில், கார்த்திக் மற்றும் ரேவதி இருவருமே மகேசை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அப்போது கார்த்திக்கிடம் ரேவதி, மகேஷ்க்கு எந்த பிரச்சினையும் இருக்காது, அவர் சீக்கிரம் குணமாகிவிட்டால் போதும், இல்லை என்றால் என் மனசு கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கும் என்கிறாள். மேலும், எவ்வளவு பெரிய விஷயத்தை நீங்க ஈசியா வந்து சமாளிக்கிற, என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம், நான் உனக்கு கஷ்டத்துக்கு மேல கஷ்டம் கொடுக்கிறேன். ஆரம்பத்தில் உன்னை புரிந்து கொள்ளாமல் கஷ்டம் கொடுத்தேன். இப்ப நீ எனக்கு அவ்வளவு பெரிய உதவி பண்ணிட்டு இருக்க. இப்பவும் நான் உனக்கு கஷ்டம் தான் கொடுக்கிறேன் என்கிறாள். அப்போது கார்த்திக், சொந்தத்துக்கு உதவி செய்வதை சுமையாக நினைக்கக்கூடாது. இப்ப எனக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், நீ வந்து காப்பாத்த மாட்டியா... அதே மாதிரி தான் நான் நினைக்கிறேன் என்று இருவரும் பேசிக்கொண்டே மருத்துவமனைக்கு வந்து விடுகின்றனர்.

வருத்தப்படும் சாமுண்டீஸ்வரி: மறுபக்கம் சாமுண்டீஸ்வரி தனது தோழியான மல்லிகா டாக்டரை பார்ப்பதற்காக, கார்த்திக், ரேவதி செல்லும் அதே மருத்துவமனைக்கு வருகிறார். இந்த விஷயம் கார்த்திக் மற்றும் ரேவதிக்கு தெரியாது. மருத்துவமனைக்கு வரும் சாமுண்டீஸ்வரி மல்லிகா டாக்டரிடம் ரேவதியின் மனது, நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது. இதனால், அவர்களின் குடும்ப வாழ்க்கை சரியாகவே அமையவில்லை. மாயா எந்த விதமான உண்மையையும் ரேவதியிடம் சொல்லவில்லை. அதற்கு மாறாக ரேவதியை எப்படியாவது தனது வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று திட்டம் போடுகிறாள். நான் மகேசை கடத்தி வைத்து வேறொரு திட்டம் போட்டேன். கடைசியில் மகேஷ் காணாமல் போய் இவ்வளவு பெரிய பிரச்சனையாகிவிட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை என சாமுண்டீஸ்வரி மல்லிகா டாக்டரிடம் புலம்பி கொண்டு இருக்கிறாள். இதனால், நீ ரேவதியிடம் மகேஷ், மாயா குறித்த உண்மையை சொன்னால் தான், அவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்வார்கள் என்று சொல்கிறாள்.

zee tamil Karthigai Deepam

யாருக்கும் தெரியக்கூடாது: மருத்துவமனைக்கு வரும் கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் மகேசை பார்ப்பதற்காக உள்ளே செல்கின்றனர். அப்போது அங்கு இருக்கும் நர்ஷ், மகேஷுக்கு இன்னும் சுய நினைவு திரும்பவில்லை. அவர் அதே மயக்கத்தில் தான் இருக்கிறார். நீங்கள் இப்போது அவரை பார்க்க முடியாது. அவர் கண் திறந்த பிறகு, உங்களுக்கு நான் தகவல் சொல்கிறேன் என்று சொல்லிவிட, இருவரும் சோகத்துடன் வெளியே வருகின்றனர். அப்போது சாமுண்டீஸ்வரி மல்லிகா டாக்டரிடம் பேசிக் கொண்டு இருப்பதை கார்த்திக் பார்த்து விடுகிறான். மகேஷ் மருத்துவமனையில் இருப்பது சாமுண்டீஸ்வரிக்கு தெரிந்து விட்டால். அனைத்தும் வீணாகிவிடும் என்று யோசிக்கும் கார்த்தி தனது தோழியான மருத்துவரிடம், மகேஷ் இங்கே இருக்கும் விஷயம் மல்லிகா டாக்டருக்கும் சாமுண்டீஸ்வரிக்கும் தெரியக்கூடாது என்கிறான்.

வருத்தப்படும் துர்கா: துர்கா ரவுடிகளை ஏற்பாடு செய்து நவீனை அடிக்க பணம் கொடுத்து அனுப்புகிறாள். ரவுடிகள் நவீனை அடிக்கும் நேரத்துல, துர்கா பணம் கொடுத்து தானே என்னை அடிக்க அனுப்பிளாள், நான் அதைவிட அதிகமாக பணம் கொடுகிறேன். நீங்க துர்கா கிட்ட, நவீனை அடிச்சிட்டோம். அவர் இப்ப ஹாஸ்பிடல் இருக்காருனு சொல்லுங்க என்று பணத்தை கொடுக்கிறான். இதையடுத்து, ரௌடிகள் நவீன் சொன்னதைப் போல, துர்காவிடம், நாங்க நவீனை அடிச்சிட்டோம், அவரு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடல் இருக்காரு என்று சொல்கின்றனர். இதைக்கேட்டு, துர்கா வருத்தப்படுகிறாள்.

வாய்ப்பு ஒருமுறை தான் வரும்: ரேவதியின் தோழி யமுனா, ஃபோன் செய்து, பாட்டு போட்டி ஒன்று நடக்குது, உன்னுடைய தங்கை சுவாதி ரொம்ப நல்லா பாடுற, இந்த போட்டியில் மட்டும் அவ கலந்து கொண்டால், நிச்சயமா அவ வெற்றி பெருவாள். என்று சொல்கிறாள் இதை கேட்டு ரேவதி. சுவாதி நீ பாட்டு போட்டியில் கலந்து கொள் என்கிறாள். ஆனால், ஸ்வாதி எனக்கு பாட்டுப்பாடுவது பிடிக்கம் ஆனால், அம்மாவிற்கு பிடிக்காது நான் கலந்து கொள்ள மாட்டேன் என்கிறாள். அப்போது ரேவதி, திறமை என்பது ஒரு சிலருக்கு மட்டும் தான் இருக்கும். உன்னோட வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்குன்னு பலரு பாராட்டி இருக்காங்க. அப்படி இருக்கும்போது நீ ஏன் இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறக் கூடாது. வாய்ப்பு என்பது ஒருமுறைதான் வரும். உனக்கு இப்போ வந்திருக்கு அதனால நீ எதை பத்தியும் யோசிக்காமல், இந்த போட்டியில் கலந்து கொள் என்கிறாள். உடனே சுவாதி அம்மாவுக்கு நான் மேடையில் பாடுவது பிடிக்காது என்று சொல்ல. உடனே கார்த்திக் உன்னுடைய அக்கா சொல்வதை கேள், நான் அம்மாவிடம் பேசிக் கொள்கிறேன் என்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X