மிஷினில் கையை விட்ட கார்த்திக்.. பதறி துடித்த அபிராமி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், தீபா, ரியாவின் முன்னாள் கணவர் மதுவை வீட்டிற்கு வரவைத்து ஆனந்திடம் இவர் தான் ரியாவின் முன்னாள் கணவர் என்று அறிமுகப்படுத்தி வைக்கிறாள். மேலும், ரியா பணத்தின் மீது ஆசை கொண்டவள் என்றும், அவள் ஏற்கனவே இரண்டு முறை குழந்தையை கலைத்த விஷயத்தை ஆனந்திடம் மது சொல்லுகிறான். அதன் பிறகு தீபாவும் ஆமாம், மது சொல்றது எல்லாமே உண்மை தான் என்று சொல்ல ஆனந்தால் அதை முழுமையாக நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் அனைத்தையும் கேட்டு அதிர்ச்சி அடைகிறான்.

மற்றொரு பக்கம், ஐஸ்வர்யா ஆனந்தை அழைத்து, கார்த்திக்கை வேலையில் இருந்து அனுப்ப தன்னிடம் ஒரு வழி இருப்பதாக சொல்லி எதையோ ஒன்றை சொல்ல ஆனந்த் நீ சொன்ன மாதிரியே செஞ்சிடுறேன் என்று கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil television Karthigai Deepam serial May 1st Episode

பதறிய அபிராமி: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், ஆனந்த் மேனேஜரிடம் சொல்லி சதி செய்து கார்த்திக்கை தரையை துடைக்க வைக்கிறார். இந்த வீடியோவை ஆனந்த் அபிராமியிடம் காட்ட அதைப்பார்த்து அபிராமி மிகுந்த வருத்தம் அடைகிறாள். இதையடுத்து. அபிராமி கம்பெனிக்கு கார்த்திக்கை பார்க்க வருகிறாள். அவன் வேலை செய்வதை பார்த்து கண்கலங்கி நிற்க அந்த நேரம் பார்த்து கார்த்தி மெஷினுக்குள் கையை விட்டு காயம் ஏற்பட அபிராமி பதறி போய் ஓடி வந்து துடிக்கிறாள்.

சொதப்பிய ஆனந்தின் பிளான்: நீங்க ஏன்மா இங்கு வந்தீங்க என்று கேட்க, உன்னை பார்க்கணும் போல இருந்தது. அதான் வந்தேன் என்று சொல்லும் அபிராமி, உனக்கு இதெல்லாம் தேவையா... வேண்டாம் எல்லாத்தையும் விட்டுட்டு வந்துடு வா வீட்டுக்கு போகலாம் என்று கார்த்திக்கை வீட்டிற்கு அழைக்கிறாள். உடனே கார்த்திக், அம்மா, இந்த குடும்பம் பிரியக்கூடாதுன்னு சொல்லிட்டுதானே நான் இந்த வேலைக்கு வந்தேன். வேலை செஞ்சா அடிப்பட தான் செய்யும் அதை பத்தி எல்லாம் நீங்க கவலைப்படாதீங்க வீட்டுக்கு போங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறான். இதைப்பார்த்துக்கொண்டு இருந்த ஆனந்த் இந்த பிளானும் வொர்க் அவுட் ஆகலயே என வருத்தப்படுகிறான்.

செக்யூரிட்டியிடம் சண்டை போட்ட தீபா: வீட்டுக்கு வந்த அபிராமி அருணாச்சலத்திடம் நடந்த விஷயத்தை சொல்லி வருத்தப்படுகிறான். கார்த்திக்கின் கையில் அடிபட்டதை கேள்விபட்ட தீபா கார்த்திக்கிற்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு கம்பெனிக்கு வருகிறாள். சாதாரண புடவை கட்டிக்கொண்டு சிம்பிளாக வர செக்யூரிட்டி உள்ளே விட மறுப்பு தெரிவிக்கிறார். தீபா கார்த்திக்கின் மனைவி என்று சொல்ல கார்த்திக் சார் எங்களுடைய முதலாளி அவருடைய மனைவினு யாரை ஏமாற்ற பாக்கறீங்க? விட முடியாது என்று சொல்ல இந்த நேரம் பார்த்து அங்கு வரும் அருண், செக்யூரிட்டியை திட்டிவிட்டு தீபாவை உள்ளே அழைத்துச் செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X