என் பொண்டாட்டியை காப்பாத்துங்க... காலில் விழுந்து கெஞ்சிய மருமகன்.. கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: ரோகிணிக்கு அடிபட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு அவளுக்கு O நெகட்டிவ் ரத்தம் தேவைப்படுவதாக டாக்டர் சொல்கிறார். வீட்டில் யாருக்கும் O நெகட்டிவ் ரத்தம் இல்லை என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் தடுமாறுகின்றனர். ஒரு கட்டத்தில் மயில் வாகனத்திற்கு பாட்டிக்கு O நெகட்டிவ் ரத்தம் தான் என்பது தெரியவருகிறது. இதையடுத்து, பரமேஸ்வரி பாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து வருகிறான். பரமேஸ்வரியை பார்த்த சாமுண்டீஸ்வரி இங்க எதுக்கு வந்த என்று ஆவேசப்படுகிறாள்.
உடனே பரமேஸ்வரி பாட்டி, என் பேத்தியை பார்க்க வந்து இருக்கேன். அவள் உயிரை காப்பாத்த வந்து இருக்கிறேன் என்று சொல்ல, என் பொண்ணு செத்தாலும் பரவாயில்லை அவளுக்கு நீ ரத்தம் கொடுக்க கூடாது என்று கோபப்படுகிறாள். உடனே பரமேஸ்வரி பாட்டி, உன் பொண்ணு உயிரைவிட, உன்னோட, வீம்பு பெரிசா போச்சா, உண்மையிலேயே நீ அவளை பெத்தியா என்கிற சந்தேகம் வருது. ரோகினி இந்த மாதிரி நிலையில் இருக்கும் நேரத்துல நீ தான் என்கிட்ட வந்து கெஞ்சி இருக்கனும் என்று சொல்லி பரமேஸ்வரி பாட்டி, ஆதங்கத்துடன் கத்திக்கொண்டு இருக்க, கடுப்பான சாமுண்டீஸ்வரி என் மகளை எப்படி காப்பாத்துவது என்று எனக்கு தெரியும் என்று சொல்ல, வேறு வழியே இல்லாமல் பரமேஸ்வரி பாட்டி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துவிடுகிறாள்.

உயிருக்கு போராடும் ரோகிணி: தொடர்ந்து சாமுண்டீஸ்வரி, மாப்பிள்ளை இவங்க ரத்தம் கொடுத்துத்தான் என் மகளை காப்பாத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வேறு யாராவது கிடைக்கிறார்களா... என்று பாருங்கள் என்று சொல்ல, கார்த்திக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் சரி என்கிறான். இதனால், பரமேஸ்வரி பாட்டி, ரத்தம் கொடுக்க முடியாமல் வெளியில் காத்திருக்கிறாள். இதையடுத்து, கார்த்திக் எனக்கு ஒரு ஐடியா கிடைத்து இருக்கு என்ற சொல்லி, பாட்டிக்கு முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை கொடுத்து அணிந்து வந்து, பெயரை மாற்றி சாமுண்டீஸ்வரிக்கு தெரியாமல் ரோகிணிக்கு ரத்தம் கொடுக்க வைக்க திட்டம் போடுகிறான். அப்போது, சாமுண்டீஸ்வரி, பாட்டியை பார்த்து நீங்க யார்.. எங்கே இருந்து வரீங்க என்று கேட்க, வீட்டில் இருந்த அனைவரும் கோபப்படுகின்றனர்.
ரோகிணிக்கு என்னாச்சு: உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க, ரோகிணி இங்கே உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கா, நீங்க இங்கே ரத்தம் கொடுக்க வருபவர்களிடம், விசாரணை நடத்திக்கிட்டு இருக்கீங்களா... அவர் உயிரோட வர வேண்டும் என்கிற எண்ணமே இல்லையா என்ற கேட்டு, ரேவதி சத்தம் போடுகிறாள். உடனே மயில்வாகனம், ரோகிணிக்கு இருப்பது அரிதான ரத்தம், இதனாலத்தான் ரத்தம் கிடைக்கல. பாட்டி ரத்தம் கொடுக்க வந்தாங்க, நீங்க வேண்டாம் என்று சொல்லி அனுப்பிட்டீங்க, இப்போ, இவங்களையும் அனுப்பிவிட்டால், என் பொண்டாட்டி மனைவி ரோகிணியை காப்பாத்தவே முடியாது. தயவு செய்து, இவங்களை ரத்தம் கொடுக்க விடுங்க என்று, மயில்வாகனம், சாமுண்டீஸ்வரியின் காலில் விழுந்து கெஞ்சுகிறான். இதையடுத்து, பரமேஸ்வரி பாட்டி, ரோகிணிக்கு ரத்தம் கொடுத்து அவளின் உயிரை காப்பாற்றுகிறாள். இதனால் ரோகிணி உடல்நிலை தேறி இயல்பு நிலைக்கு வருகிறாள். பிறகு அவளை பரிசோதனை செய்த டாக்டர் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று சொல்கிறார்.

அடுத்ததாக ரோகிணியை வீட்டுக்கு அழைத்து வந்ததும் கோவில் பூஜைக்கு செல்ல வேண்டும் என்பது குறித்து பேச சந்திரகலா கண்டிப்பாக இந்த கோவில் பூஜைக்கு போகணுமா என்று கேள்வி எழுப்புகிறாள். சாமுண்டீஸ்வரி கொடுத்த வாக்கை காப்பாற்றணும். அதனால் நிச்சயமாக போகணும் என்று சொல்கிறாள். இதையடுத்து ராஜராஜன் கார்த்தியை தனியாக அழைத்துச் சென்று ஊர்ல உங்களை எல்லாருக்கும் தெரியும் அப்படி இருக்கும்போது உண்மை தெரிந்து விடாதா என கேள்வி கேட்கிறார். கார்த்திக் என் நண்பன் இளையராஜா எல்லா ஏற்பாட்டையும் பண்ணி வைத்திருக்கான்.. எதுவும் வெளியே தெரியாது என திட்டத்தை சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











