கார்த்திக்கிற்கு முடிவு கட்ட நினைக்கும் சந்திரகலா.. நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம்!

சென்னை: ஸ்வாதி பாடிய கல்லூரிக்கு சாமுண்டீஸ்வரி என்ட்ரி கொடுக்க கார்த்திக், ரேவதி, ஸ்வாதி என மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இருப்பினும் ஸ்வாதியிடம் நீ போய் பரிசை வாங்கு இந்த இடத்தில் அத்தை எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று, ஸ்வாதி சென்று பரிசை வாங்குகிறார். இதையடுத்து, இந்த மேடையில் பாடியது என் மகள் ஸ்வாதி தான்,என் மகள் இவ்வளவு நல்ல பாடுவாள் என்று எனக்கே தெரியாது, என் பாடுவதை பேட்டு பெருமையா இருக்கு என்று பேசுகிறாள். இதையடுத்து, வீட்டுக்கு வந்த பிறகு யாரை கேட்டு நீ பாடுன என்று சத்தம் போடுகிறாள். இதுக்கு நீயும் உடந்தையா என்று ரேவதி மீதும் கோபப்படுகிறாள்.

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், கோவில் கும்பாபிஷேகத்திற்கு பேங்கில் இருக்கும் நகையை எடுக்க கார்த்திக் கையெழுத்து போட வேண்டும் என்பதால், அதற்கு எப்படி போவது என்று கார்த்திக் யோசித்துக்கொண்டு இருக்கிறான். அப்போது, இளையராஜாவிற்கு ஃபோன் செய்து, ஒரு திட்டத்தை சொல்ல அவனுக்கு, கார்த்திக் சொன்னது போல, சாமுண்டீஸ்வரி கார் வரும் இடத்தில், நின்று கொண்டு இருக்கிறான். அப்போது, சாமுண்டீஸ்வரி, அவனைப்பார்த்துவிட்டு, வண்டியை நிறுத்த சொல்கிறாள். கார்த்திக் கெட்டப்பில் இருக்கும் இளையராஜா, நான் முக்கியமான ஒரு இடத்திற்கு போக வேண்டும், என் கார் பஞ்சராகி விட்டது, எனக்கு லிஃப்ட் தர முடியுமா என்று கேட்க, சாமுண்டீஸ்வரியும் சரி என்று சொல்கிறாள். வண்டியில் ஏறிய இளையராஜா, நான் இந்த மாதிரி காரில் போனதே இல்லை, என்னுடைய நேரம் இன்று இந்த காரில் வரும்படி ஆகிவிட்டது என்று ஓவராக பில்டப் கொடுத்துக்கொண்டு இருக்கிறான்.

zee tamil Karthigai Deepam

இன்றைய எபிசோடு: இதையடுத்து, கார்த்திக், இளையராஜா இருவரும் ஒன்றாக வந்து இறங்க அப்போது, அங்கு இருக்கும் அனைவரும் கார்த்திக்கை வரவேற்க மாலையுடன் சொல்ல, அப்போது, மாலை போட்டால் யார் உண்மை என்பது தெரிந்து விடும் என்பதால், எங்ககூட அத்தை வந்த இருக்கும் போது, அவங்க தான் பெரியவர்கள் என்பதால், அவங்களுக்குத் தான் மாலை போட வேண்டும் என்று சொல்ல, இளைராஜாவும், அவர் சொல்வதுதான் சரி எனக்கு இந்த மாலை மரியாதை எல்லாம் பிடிக்காது என்கிறான். இதையடுத்து, அனைவரும் சாமுண்டீஸ்வரிக்கு மாலை போட்டு வரவேற்கின்றனர்.

சந்திரகலாவின் பிளான்: சாமுண்டீஸ்வரி கார்த்திகேயன் வருவதைப்பார்த்த, பரமேஸ்வரி பாட்டி, பேரன் ஏதோ திட்டத்தோடுதான் வந்து இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு, சாமுண்டீஸ்வரியை வரவேற்கிறாள். அப்போது, சாமுண்டீஸ்வரி நான் ஒன்றும் உங்களை பார்க்க வரவில்லை. உங்களுடைய பேரன் ரோட்டில் நின்று கொண்டு இருந்தால் அவருக்கு லிப்ட் கொடுத்தேன் என்கிறாள். எது எப்படி இருந்தால் என்ன, இங்கு ஒரு நல்ல காரியம் நடக்கப்போகிறது. நீங்களாகவே வந்து விட்டீர்கள் என்று சொல்கிறார். அந்த நேரம் சந்திரகலா எப்படியும் நகை எடுக்க கார்த்திக் தான் கையெழுத்து போடுவான். அந்த விஷயத்தை வைத்து கார்த்தியின் முகத்திரையை கிழித்து விடலாம் என சந்திரகலா திட்டம் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X