பூஜை அறையில் கருநாகம்.. ஜோசியர் கொடுத்த அதிர்ச்சி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்திக், தீபர கல்யாண நாளை பெரிய அளவில் கொண்டாட அபிராமி முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். தீபா, ரம்யாவையும் வீட்டுக்கு அழைக்க, ரம்யா இவர்களது கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு வருகிறாள். கார்த்திக் ரூமில் ரெடியாகி கொண்டிருக்க ரம்யா அவனை பார்த்துவிட்டால், போட்ட அனைத்து பிளானும் நாசமாகிவிடும் என்று ஐஸ்வர்யா பதற்றப்படுகிறார்.
இந்த நேரத்தில், ரம்யாவுக்கு ஒருவரை வைத்து போன் செய்து அப்பாவுக்கு உடம்பு முடியல, ஹாஸ்பிடலில் சேர்த்து இருப்பதாக பேச வைக்கிறாள், இதனால் ரம்யா பதறியடித்து அங்கிருந்து கிளம்பி விடுகிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

பதறும் ரம்யா: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், ரம்யா ஹாஸ்பிடலுக்கு ஓடி வந்து அப்பா பெயரை சொல்லி விசாரிக்க ரிஷப்ஷனில் அப்படி யாரும் அட்மிட் ஆகல என்று சொல்கின்றனர், இதனால் ரம்யா, வீட்டிற்கு பதற்றத்துடன் ஓடி வர, வீட்டில் அப்பா சாதாரணமாக உட்கார்ந்திருப்பதை பார்க்கிறாள். அவர்... ஏன்ன மா ...என்னாச்சு எதுக்கு இப்படி பதற்றமாக வர என்று விசாரிக்க நடந்த விஷயத்தை சொல்கிறாள்.
பின்னாடியே வீட்டிற்கு வரும் தீபா, ரம்யாவுக்கு உங்களுக்கு ஆக்சிடென்ட்னு போன் வந்துச்சு, உங்களுக்கு ஒன்னும் இல்லையே என்று விசாரிக்கிறாள். அவர் எனக்கு எதுவும் இல்ல உங்களுக்கு அப்படி யார் போன் பண்ணி இருப்பா என்று கேட்க ரம்யா போன் வந்த நம்பருக்கு திருப்பி கூப்பிட போன் சுவிட்ச் ஆப் என வருகிறது.
திட்டம் போடும் ஐஸ்வர்யா: மறுபக்கம் ரியாவும் ஐஸ்வர்யாவும் கார்த்திக், தீபாவின் புருஷன் என்பது ரம்யாவுக்கு தெரிய கூடாது. இந்த திருமண நாள் கொண்டாட்டத்தில் கார்த்திக், ரம்யா மீட் பண்ணிக்கவே கூடாது என்று திட்டம் போடுகின்றனர். இதைத்தொடர்ந்து அபிராமி வீட்டில் ஜவுளிக்கடைக்காரர் ஒருவரிடம் புடவைகளை எடுத்து வர சொல்லி தீபாவை கூப்பிட்டு பிடித்த புடவையை எடுக்க சொல்கிறார் அபிராமி.
பூஜை அறையில் கருநாகம்: தீபா புடவையை தேர்வு செய்ய போகும் சமயத்தில் பூஜையறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்க ஓடி வந்து பார்க்கும் போது பூஜை அறை சீலிங் உடைந்து விழுந்தது தெரிய வருகிறது, அங்கே ஒரு கருநாகமும் இருக்க அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். ஏதோ அபசகுணமாக தெரியுது என்று ஜோசியரை வீட்டிற்கு வர சொல்கின்றனர்.
வீட்டிற்கு வந்த ஜோசியர் கொஞ்ச நாளைக்கு நீங்க யாரும் இந்த வீட்டில் இருக்க கூடாது, இந்த வீட்டில் நல்ல காரியம் எதுவும் நடக்க கூடாது எனவும் சொல்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











