போடி வெளியே.. பரமேஸ்வரி பாட்டியை அவமானப்படுத்திய சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்!
சென்னை: துர்கா ரவுடிகளை ஏற்பாடு செய்து நவீனை அடிக்க பணம் கொடுத்து அனுப்புகிறாள். ரவுடிகள் நவீனை அடிக்கும் நேரத்துல, துர்கா பணம் கொடுத்து தானே என்னை அடிக்க அனுப்பிளாள், நான் அதைவிட அதிகமாக பணம் கொடுகிறேன். நீங்க துர்கா கிட்ட, நவீனை அடிச்சிட்டோம். அவர் இப்ப ஹாஸ்பிடல் இருக்காருனு சொல்லுங்க என்று பணத்தை கொடுக்கிறான். இதையடுத்து, ரௌடிகள் நவீன் சொன்னதைப் போல, துர்காவிடம், நாங்க நவீனை அடிச்சிட்டோம், அவரு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடல் இருக்காரு என்று சொல்கின்றனர். இதைக்கேட்டு, துர்கா வருத்தப்படுகிறாள்.
சுவாதிக்கு பாட்டுப்போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு வருகிறது. ஆனால், சுவாதி அம்மாவிற்கு நான் பாட்டுப்பாடுவது பிடிக்காது. இதனால், நான் கலந்து கொள்ள மாட்டேன் என்கிறாள். அப்போது ரேவதி, திறமை என்பது ஒரு சிலருக்கு மட்டும் தான் இருக்கும். உன்னோட வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்குன்னு பலரு பாராட்டி இருக்காங்க. அப்படி இருக்கும்போது நீ ஏன் இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறக் கூடாது. வாய்ப்பு என்பது ஒருமுறைதான் வரும். உனக்கு இப்போ வந்திருக்கு அதனால நீ எதை பத்தியும் யோசிக்காமல், இந்த போட்டியில் கலந்து கொள் என்கிறாள். உடனே கார்த்திக் உன்னுடைய அக்கா சொல்வதை கேள், நான் அம்மாவிடம் பேசிக் கொள்கிறேன் என்கிறான்.

நவீன்,துர்கா காதல்: இதையடுத்து இன்றைய எபிசோடில், துர்கா, நவீனை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்து, என்னை மன்னித்துவிடுங்கள் என்னால் தான் உங்களுக்கு இவ்வளவு பிரச்சனை என்று சொல்லி வருத்தப்படுகிறாள். பின் துர்கா வீட்டுக்கு கிளம்பிவிட, நவீன் ஹாஸ்பிடலில் கட்டை கவிழ்த்து விட்டு மயில்வாகனத்திடம் பேசிக்கொண்டு இருக்கிறான். அந்த நேரம் பார்த்து, துர்கா, நவீனிடம் பேசிக்கொண்டு இருந்த போது, ஃபோனை அந்த இடத்திலேயே மறந்து வைத்துவிட, அதை எடுப்பதற்காக வருகிறாள். இதைப்பார்த்துவிட்ட, மயில் வாகனம், டேய் நவீன் நீ நல்லா மாட்டுனாடா... துர்கா திரும்ப வரால் என்று சொன்னதும், நவீன் பதறிப்போய் மீண்டும் கட்டுகளை போட்டு துர்காவை ஏமாற்றுகிறான். அப்போது, துர்கா, ஃபோனை மறந்துவிட்டேன் அதை எடுப்பதற்காக திரும்ப வந்தேன் என்று சொல்கிறாள்.
அவமானப்பட்ட பாட்டி: அடுத்து சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் எல்லாரும் வீட்டில் இருக்க அப்போது பரமேஸ்வரி பாட்டி கோவில் கும்பசாதத்துடன் வீட்டிற்குள் நுழைகிறாள். இது கோவில் திருவிழாவில் பங்கேற்றவங்க எல்லாரும் சாப்பிட வேண்டியது என்று சொல்ல சாமுண்டீஸ்வரி இப்படி ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிட்டு இந்த வீட்டிற்கு வந்துகிட்டே இருப்பியா, உனக்கு வெட்கமாகவே இல்லையா என்று அவமானப்படுத்தி வெளியே துரத்துகிறாள். வெளியே வந்த பரமேஸ்வரி பாட்டி கோவிலுக்கு சென்று முருகனிடம் புலம்ப அங்கு கார்த்திக் வருகிறான். சாப்பாட்டை கொடுங்க நான் பார்த்து கொள்கிறேன் என்று வாங்கி கொண்டு வீட்டிற்கு வருகிறான். எல்லாரும் சாப்பிட உட்காரும் சமயத்தில் கார்த்திக் திட்டத்தின் படி மயில்வாகனம் கரண்ட் கட் செய்து விடுகிறான்.
இதனால் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து நிலா சோறு சாப்பிட கார்த்திக் கும்ப சாதத்தையும் சேர்த்து கொடுக்கிறான். குடும்பமாக சந்தோசமாக இருக்க சுவாதியை பாட சொல்லி சந்தோசமாக இருக்கின்றனர். இதையடுத்து மயில் வாகனம் மீண்டும் பவர் ஆன் செய்து விடுகிறான். சந்திரகலாவிற்கு பக்கத்தில் வீட்டில் எல்லாம் கரண்ட் இருக்க நம்ம வீட்டில் மட்டும் எப்படி கரண்ட் கட் ஆனது என்ற சந்தேகம் எழுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











