கார்த்திக் கொடுத்த கிப்ட்.. மிஷினில் மாட்டிய புடவை.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபா, கார்த்திக் திருமண கொண்டாட்டத்திற்காக புடவையை வாங்க போகும் போது, பூஜையறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்க ஓடி வந்து பார்க்கும் போது பூஜை அறை சீலிங் உடைந்து விழுந்தது தெரிய வருகிறது, அங்கே ஒரு கருநாகமும் இருக்க அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். ஏதோ அபசகுணமாக தெரியுது என்று ஜோசியரை வீட்டிற்கு வர சொல்கின்றனர்.
வீட்டிற்கு வந்த ஜோசியர் கொஞ்ச நாளைக்கு நீங்க யாரும் இந்த வீட்டில் இருக்க கூடாது, இந்த வீட்டில் நல்ல காரியம் எதுவும் நடக்க கூடாது எனவும் சொல்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

பாம்பை விட்ட ஐஸ்வர்யா: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், அபிராமி ஜோசியர் இப்படி சொன்னதால் கொஞ்ச நாளைக்கு இந்த வீட்டில் யாரும், இருக்க வேண்டாம், பழைய வீட்டிற்கு போகலாம், அந்த வீட்டை ரெடி பண்ண சொல்லுங்க என்று சொல்கிறாள். அதை தொடர்ந்து ஐஸ்வர்யா பாம்பை விட்டவனையும் வர வைத்து சொன்ன வேலையை கச்சிதமா முடிச்சிட்டீங்க, இந்தாங்க பணம் என்று கொடுத்து அனுப்புகிறாள்.
ஐஸ்வர்யா செய்த வேலை: மறுபக்கம் ரம்யாவுக்கு கார்த்திக் பெயரில் புடவையை கிப்டாக கொடுத்த, புடவையை அணிந்து அப்பாவிடம் காட்டி சந்தோசப்படுகிறாள். பிறகு அதே புடவையில் கம்பெனிக்கு வந்து கார்த்திக் முன்னாடி நடந்து காட்டி சந்தோசப்பட கார்த்திக் அதை கண்டு கொள்ளாமல் வேலையை செய்து கொண்டு இருக்கிறான். கார்த்திக் முன் மீண்டும் மீண்டும் ரம்யா வந்து நிற்க, அவரை கார்த்திக் எதர்ச்சையாக பார்த்துவிடுகிறான். இதைப்பார்த்து, ரம்யா சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறாள். இதையடுத்து, ரம்யா ரவுண்ட்ஸ் போகும் போது புடவை மிஷின் ஒன்றில் மாட்டி கொள்ள கார்த்திக் ரம்யாவை காப்பாற்றி அவளுக்கு தன்னுடைய சட்டையை கழட்டி கொடுக்கிறான்.
அதிகரிக்கும் காதல்: இதனால் ரம்யாவுக்கு கார்த்திக் மீது காதல் அதிகமாக அவள் அந்த சட்டையை முகர்ந்து பார்த்து சந்தோசப்படுகிறாள். பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர தீபா சட்டையை பற்றி கேட்க கார்த்திக் சொன்ன பதிலால் நீங்க எப்படி உங்க சட்டையை கழட்டி கொடுக்கலாம். ஒரு ஆம்பளையோட சட்டையை ஒன்னு தங்கச்சி போடணும், இல்லனா பொண்டாட்டி போடணும் என்று பொஸசிவ்வில் பேசி கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











