கார்த்திக்கால் சந்தோஷத்தில் ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்திக் கிப்டாக கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு வந்த ரம்யா, கார்த்திக் பார்க்க வேண்டும் என்று அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருக்க, அவளை கார்த்திக் எதர்ச்சையாக பார்த்துவிடுகிறான். இதைப்பார்த்து, ரம்யா சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறாள். இதையடுத்து, ரம்யா ரவுண்ட்ஸ் போகும் போது புடவை மிஷின் ஒன்றில் மாட்டி கொள்ள கார்த்திக் ரம்யாவை காப்பாற்றி அவளுக்கு தன்னுடைய சட்டையை கழட்டி கொடுக்கிறான்.

இதனால் ரம்யாவுக்கு கார்த்திக் மீது காதல் அதிகமாக அவள் அந்த சட்டையை முகர்ந்து பார்த்து சந்தோசப்படுகிறாள். பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர தீபா சட்டையை பற்றி கேட்க கார்த்திக் சொன்ன பதிலால் நீங்க எப்படி உங்க சட்டையை கழட்டி கொடுக்கலாம். ஒரு ஆம்பளையோட சட்டையை ஒன்னு தங்கச்சி போடணும், இல்லனா பொண்டாட்டி போடணும் என்று பொஸசிவ்வில் பேசி கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil television Karthigai Deepam serial May 22th Episode full review

மகிழ்ச்சியில் ரம்யா: கார்த்திகை தீபம் இன்றை எபிசோடில், மானத்தை காப்பாற்ற கார்த்திக் சட்டையை போட்டுக்கொண்டு வீட்டுக்கு வரும் ரம்யா, அந்த சட்டையை கட்டிப்பிடித்துக்கொண்டு, சட்டையை முகர்ந்து பார்த்து மனதுக்குள் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியில் ஆட்டம் போடுகிறாள். அவள் மனது முழுக்க கார்த்திக் இருப்பதை நினைத்து நினைத்து பூரித்துபோகிறாள். ரம்யாவை இவ்வளவு மகிழ்ச்சியாக பார்க்காத ரம்யாவின் அப்பா, அவளை பார்த்து மன நிம்மதி அடைகிறார்.

வீடு மாறும் அபிராமி: மறுபக்கம் அபிராமி குடும்பத்தினர் எல்லாரும் ஜோசியர் சொன்னபடி வீடு மாறுகின்றனர். பழைய வீட்டை சுத்தம் செய்து டெக்கரேட் செய்து அடுத்த நாச்சியாராக பார்க்கப்படும் தீபாவை வைத்து பாலை காய்ச்ச வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர். அதற்கேற்றார் போல தீபாவும் பாலை காய்ச்ச அதை பார்த்து சந்தோசப்படுகின்றனர்.

திருமண நாள் கிப்ட்: இதனை தொடர்ந்து கார்த்திக் தீபா திருமண நாள் கொண்டாட்டத்தை நாளைக்கே வச்சிக்கலாம் என்று முடிவெடுக்கின்றனர், அபிராமி தீபாவிடம் கார்த்திக்கிற்கு கல்யாண நாளுக்கு என்ன கிப்ட் கொடுக்க போற என்று கேட்க தீபா இன்னும் முடிவு பண்ணல அத்தை, என்ன வாங்கி தருவது என்றே தெரியவில்லை என்று சொல்கிறாள். அடுத்து கார்த்திக்கிடம், நீ தீபாவிற்கு என்ன கிப்ட் கொடுக்க போற என்று கேட்கின்றனர். அவனும் என்ன குடுக்கிறதுனு இன்னும் முடிவு பண்ணல என்று சொல்கிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X