தீபா, கார்த்திக் கல்யாண கொண்டாட்டத்தில் நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்திக் சட்டையை போட்டுக்கொண்டு வீட்டுக்கு வரும் ரம்யா, அந்த சட்டையை கட்டிப்பிடித்துக்கொண்டு, சட்டையை முகர்ந்து பார்த்து மனதுக்குள் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியில் ஆட்டம் போடுகிறாள்.

மறுபக்கம், கார்த்திக் தீபா திருமண நாள் கொண்டாட்டத்தை நாளைக்கே வச்சிக்கலாம் என்று முடிவெடுக்கின்றனர், அபிராமி தீபாவிடம் கார்த்திக்கிற்கு கல்யாண நாளுக்கு என்ன கிப்ட் கொடுக்க போற என்று கேட்க தீபா இன்னும் முடிவு பண்ணல அத்தை, என்ன வாங்கி தருவது என்றே தெரியவில்லை என்று சொல்கிறாள். அடுத்து கார்த்திக்கிடம், நீ தீபாவிற்கு என்ன கிப்ட் கொடுக்க போற என்று கேட்கின்றனர். அவனும் என்ன குடுக்குறதுனு இன்னும் முடிவு பண்ணல என்று சொல்கிறான், இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil television Karthigai Deepam serial May 23rd Episode full review

இன்றைய எபிசோட்: அதாவது, மீனாட்சியும் மைதிலியும் தீபாவிடம் இந்த வீடு இன்னும் பெருசா தாராளாக இருக்கு என்று பேசுகின்றனர், அடுத்து தீபாவிடம் இன்னைக்கு சாயங்காலம் நடக்க போற பங்ஷனில் கார்த்திக்கிற்கு என்ன கிப்ட் கொடுக்க போற என்று கேட்க தீபா இதுவரைக்கும் யோசிக்கல என்று சொல்கிறாள். திடீரென அவளுக்கு ஒரு யோசனை வந்து கடைக்கு கிளம்பி வருகிறாள்.

அதே போல மறுபக்கம் ரம்யா தன்னுடைய அப்பாவிடம் இன்னைக்கு ஒரு பங்ஷனுக்கு போகணும் என்று சொல்ல ரம்யாவிடம் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்து சந்தோசப்படுகிறார். பிறகு ஒரு கிப்ட் வாங்கணும் என்று சொல்லி அவளும் கிளம்பி கடைக்கு வருகிறாள். கடைசியாக தீபா, ரம்யா இருவரும் ஒரே கடைக்கு வர இரண்டு பேரும் சந்தித்து கொள்கின்றனர்.

சூப்பர் கிப்ட்: இந்த சந்திப்பை தொடர்ந்து ரம்யா, உன் ஹஸ்பண்ட்டுக்கு என்ன கிப்ட் வாங்க போற என்று கேட்கிறாள். அப்போது, தீபா, அபிராமி மற்றும் கார்த்திக்கின் சிறு வயது போட்டோக்களை ஒன்று சேர்த்து ஒரு பிரேம் போட போவதாக சொல்கிறாள். பிறகு தீபா, ரம்யாவிடம் இதே கேள்வியை கேட்க அவள் ராமன் சீதை போட்டோ ஒன்றை வாங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X