ரம்யாவிற்கு தெரியவரும் உண்மை.. அடுத்து அவர் எடுக்க போகும் முடிவு என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்திக் தீபா கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு ரம்யாவை வரவிடாமல் தடுக்க வேண்டும் என்று பிளான் போடும், ஐஸ்வர்யா, ஒரு ஆளை ஏற்பாடு செய்து காரை ரிப்பேர் செய்து விட கார் ஸ்டார்ட் ஆகாமல் போகிறது. இதனையடுத்து ரம்யா கேப் புக் செய்து தீபா வீட்டிற்கு வந்து கொண்டிருக்க இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

வீட்டில் தீபா, ரம்யா வருவதாக சொன்னா அதுவரைக்கும் காத்திருக்கலாம் என்று சொல்ல அனைவரும் ரம்யாவின் வருகைக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஐஸ்வர்யாவின் முதல் பிளான் தோல்வி அடைந்ததால், ரம்யா வரும் கேப் முன்னாடி வேண்டும் என்றே காரை நிறுத்தி வம்பிழுத்து ரம்யாவின் நேரத்தை வீணடிக்கிறார் ஐஸ்வர்யா. மறுபக்கம் வீட்டில் காத்திருக்கும் தீபா, ரம்யாவிற்கு போன் செய்ய, ரம்யா போனை கவனிக்காமல் இருக்கிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil television Karthigai Deepam serial May 25th Episode full review

இன்றைய எபிசோட்: அதாவது, ஐஸ்வர்யாவின் சதியை மீறி ரம்யா ஆட்டோவில் கிளம்பி வர அப்போது, அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் என்று ஹாஸ்பிடலில் இருந்து போன் வருகிறது. ஏற்கனவே ஒருமுறை இதே போல் போன் காலில் ஏமாற்றியதால் ரம்யா அதை நம்ப மறுக்க, டாக்டரே போனை வாங்கி உண்மையை சொல்ல பதறியடித்து ஓடுகிறாள்.

ரம்யாவிற்கு தெரிந்த உண்மை: தீபாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி விட, தீபாவும் கார்த்திக்கும் ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர், ரம்யாவின் அப்பாவை பார்த்து விட்டு கிளம்பி வருகின்றனர். அந்த நேரம் அங்கு ரம்யா இல்லாமல் இருக்க இவள் மேலே வந்ததும் தீபாவும் அவளுடைய கணவரும் வந்துட்டு போனாங்க என்று சொல்ல ரம்யா வெளியே ஓடி வர இவர்கள் லிப்ட்டுக்குள் சென்று விடுகின்றனர். இதனால் ரம்யா படிக்கட்டில் இறங்கி வர லிப்டில் இருந்து வெளியே வந்த தீபா தவறி விழ போக கார்த்திக் அவளை தாங்கி பிடிக்க அதை பார்த்து விடும் ரம்யாவுக்கு கார்த்திக் தான் தீபாவின் புருஷன் என்பது தெரிய வருகிறது

Zee tamil television Karthigai Deepam serial May 25th Episode full review

வருத்தப்படும் ரம்யா: இதனையடுத்து ரம்யா அப்பாவிடம் கார்த்திக் குறித்து சொல்ல அவங்க தான் உன்னை முதலில் பொண்ணு பார்க்க வந்தாங்க, அப்போ நீ தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்ட என்று சொல்கிறார். இதனால் இரவெல்லாம் தூக்கமின்றி தவிக்கிறாள், மறுபக்கம் ரியா ஒருவனை கூப்பிட்டு மீனாட்சி அவுட் ஹவுசில் தங்கி இருக்கா, நீ அங்க போ நான் திருடன் திருடனு கத்துவேன். அப்போ நீ மீனாட்சி கூப்பிட்டு தான் வந்ததாக சொல்லி எஸ்கேப் ஆகிடு என்று சொல்கிறாள்.

Zee tamil television Karthigai Deepam serial May 25th Episode full review

நாடகமாடும் ரியா: இதனையடுத்து அதே போல் ரியா, நைட் நேரத்தில் திருடன் திருடன் என கத்த இவள் ஏற்பாடு செய்தவன் வராத நிலையில் ஆனந்த், அருண் என எல்லாரும் கூடி விடுகின்றனர். அதன் பிறகு அவன் ரியா ரூமில் இருந்து வெளியே வந்து ரியா சொல்லி தான் வந்ததாக சொல்ல ரியா அதிர்ச்சி அடைகிறாள், அதன் பிறகு இவன் மீனாட்சி அக்கா ரூமுக்குள்ள போனதை நான் பார்த்தேன், உண்மையை சொல்லு போலீசில் பிடித்து கொடுத்துவேன்னு சொன்னதும் ரியா தான் இப்படி பண்ண சொன்னதாக உண்மையை உடைக்கிறாள். இதனால் ஆனந்த் ரியாவை பிடித்து அறைந்து விடுகிறான்.

Zee tamil television Karthigai Deepam serial May 25th Episode full review

பிஏவை அடிக்கும் ரம்யா: எல்லாரும் உனக்கு எதுக்கு இந்த வேலை என்று ரியாவை மோசமாக திட்டுகின்றனர், அடுத்த நாள் காலையில் ஆபீஸ் வரும் ரம்யா எப்படியாவது கார்த்திக்கை அடைய வேண்டும் என்று முடிவெடுக்கிறாள், பி.ஏ-வை கூப்பிட்டு அன்னைக்கு ஒரு லெட்டர் குடுத்தேனே அதை கார்த்திக்கிடம் கொடுத்தாயா என்று கேட்க அவன் ஆமாம் கொடுத்தேன் என்று சொல்கிறான், கார்த்திக்கும் பதிலுக்கு ஒரு லெட்டரை கொடுத்தார். அதை தான் உங்களிடம் கொடுத்ததாக சொல்ல ரம்யா அவனை அறைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X