மண்ணை கவ்விய சந்திரகலா.. நவீனை விரட்டி அடித்த சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் வெள்ளிக்கிழமை கார்த்திக், இளையராஜா இருவரும் ஒன்றாக வந்து இறங்க அப்போது, அங்கு இருக்கும் அனைவரும் கார்த்திக்கை வரவேற்க மாலையுடன் சொல்ல, அப்போது, மாலை போட்டால் யார் உண்மை என்பது தெரிந்து விடும் என்பதால், அத்தை தான் அந்த ஊரிலேயே பெரியவர்கள், அவர்களுக்குத்தான் மாலை போட வேண்டும் என்று சொல்ல, சாமுண்டீஸ்வரிக்கு மாலை போட்டு வரவேற்கின்றனர். சாமுண்டீஸ்வரி, கார்த்திக்குடன் வருவதைப்பார்த்த, பரமேஸ்வரி பாட்டி, பேரன் ஏதோ திட்டத்தோடுதான் வந்து இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு, சாமுண்டீஸ்வரியை வரவேற்கிறாள்.

அப்போது, சாமுண்டீஸ்வரி நான் ஒன்றும் உங்களை பார்க்க வரவில்லை. உங்களுடைய பேரன் ரோட்டில் நின்று கொண்டு இருந்தார் அவருக்கு லிப்ட் கொடுத்தேன் என்கிறாள். எது எப்படியோ, இங்கு ஒரு நல்ல காரியம் நடக்கப்போகிறது. நீங்களாகவே வந்து விட்டீர்கள் என்று சொல்கிறாள். அந்த நேரம் சந்திரகலா எப்படியும் நகை எடுக்க கார்த்திக் தான் கையெழுத்து போடுவான். அந்த விஷயத்தை வைத்து கார்த்தியின் முகத்திரையை கிழித்து விடலாம் என திட்டம் போடுகிறாள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: அதாவது, கார்த்திக் வேறு ஒரு திட்டத்தை போட்டு சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலாவிற்கு தெரியாமல் வெளியே சென்று, வேறு வழியாக, வங்கிற்குள் சென்று கையெழுத்து போட்டு, சாமியின் நகை வாங்கிக் கொடுத்து விடுகிறான். வெளியில், இது தெரியாமல் சந்திரகலா காத்துக்கொண்டிருக்க, கார்த்தி வேறு வழியாக வருகிறான். உடனே சந்திரகலா, எப்படியும் நீ தானே கையெழுத்துப்போட உள்ளே போவ அப்போது, உன்னை மாட்டிவிடுகிறேன் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது, பாட்டி நகை பெட்டியுடன் வந்ததைப் பார்த்து சந்திரகலா அதிர்ச்சி அடைகிறாள். இதனால், கடுப்பான சாமுண்டீஸ்வரி, இளையராஜா தான் கையெழுத்து போட்டான். உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை என்று திட்டுகிறான்.

சந்திரகலா திட்டம் திட்டம்: அதன் பிறகு நவீன் துர்காவை கலாய்த்தபடி இருக்க இதை சந்திரகலா கவனிக்கிறாள். இவனை எதாவது செய்யணும் என யோசிக்கிறாள். அந்த சமயத்தில் நவீன் தனது போனை வைத்து விட்டு சென்றுவிட, ஃபோனை எடுத்த சந்திரகலா, அவனது அப்பாவிற்கு ஃபோன் செய்து நீங்க யார்? என்ன பண்றீங்க என்று விசாரிக்க அவர் நாங்க பெரிய பணக்கார குடும்பம், பிசினஸ் பண்றோம் என்ற உண்மைகளை உடைக்கிறார். இதை கேட்ட சந்திரகலா, உங்க மகன் நவீன் கார் டிரைவராக வேலை செய்யும் விஷயத்தை சொல்லி லொகேஷனையும் அனுப்பி வைக்க அவர் சாமுண்டேஸ்வரி வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர்.

வெளியே துரத்தப்பட்ட நவீன்: அவர்கள் வரும் நேரம் நவீன் வீட்டை துடைத்துக்கொண்டு இருக்க, அவனைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும், கோடி கோடியாக சொத்து இருக்கும் போது உனக்கு எதற்கு இந்த வேலை என்று கேட்ட, நவீன், துர்காவை பிடித்திருப்பதாகவும், அவளை காதலிப்பதாகவும் சொல்ல சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள். நீ ஏமாத்தி இந்த வீட்டிற்குள் வந்திருக்க, நீ உண்மையை சொல்லி பொண்ணு கேட்டு இருந்தா கூட கொடுத்திருப்பேன், பொய் சொல்லி உள்ள வந்த உனக்கு என் பொண்ணை தர மாட்டேன் என்று நவீனை வெளியே துரத்துகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X