தீபாவிற்கு துரோகம் செய்யும் ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ரம்யாவின் அப்பா மருத்துவமனையில் இருப்பது தெரிந்து, தீபாவும் கார்த்திக்கும் அவரை பார்க்க வருகின்றனர். அந்த நேரம் அங்கு ரம்யா இல்லாமல் இருக்க இவள் மேலே வந்ததும் தீபாவும் அவளுடைய கணவரும் வந்துட்டு போனாங்க என்று அப்பா சொல்ல ரம்யா வெளியே ஓடி வந்து பார்க்கிறாள். இருவரும் லிப்டில் இருந்து வெளியே வரும் போது, தீபா தவறி விழ போக கார்த்திக் அவளை தாங்கி பிடிக்கிறான். அதை பார்த்து விடும் ரம்யா, கார்த்திக் தான் தீபாவின் கணவன் என்பது தெரிந்து வேதனைப்படுகிறாள்.
வேதனையில் இருக்கும் ரம்யா எப்படியாவது கார்த்தியை அடைய வேண்டும் என்று முடிவு செய்கிறாள். பி.ஏ-வை கூப்பிட்டு அன்னைக்கு நான் கொடுத்த, லெட்டர் கார்த்திக்கிடம் கொடுத்தாயா என்று கேட்க அவன் ஆமாம் கொடுத்தேன் என்று சொல்கிறான், கார்த்திக்கும் பதிலுக்கு ஒரு லெட்டரை கொடுத்தார். அதை தான் உங்களிடம் கொடுத்ததாக சொல்ல ரம்யா அவனை அறைகிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், கார்த்திக்கை நினைத்து ரூமுக்குள் பயங்கர யோசனையிலும் கோபத்திலும் இருக்கும் ரம்யா, ராமன் சீதை சிலையை தூக்கி போட்டு உடைக்கிறாள், அதனை தொடர்ந்து மறுநாள் காலையில் ஐஸ்வர்யாவை சந்தித்து இந்த வேலையெல்லாம் செய்தது நீ தான் என்று எனக்கு தெரியும் என்று கோபப்பட ஐஸ்வர்யா நான் கார்த்திக்கோட அண்ணி தான், கார்த்திக் ஒன்னும் தீபாவை விரும்பி கல்யாணம் பண்ணிக்கல, தீபா அவனை ஏமாற்றி தான் தாலி கட்டி கிட்டா என்று தீபாவை பற்றி நெகட்டிவ்வாக சொல்லி ரம்யாவை நம்பவும் வைக்கிறாள்.

வருத்தத்தில் ரம்யா: இதையடுத்து வீட்டிற்கு வந்த ரம்யா மீண்டும் யோசனையில் இருக்க அவளது மனசாட்சி தோன்றி அவள் செய்வது தப்பு என்று ஒரு பக்கம் சொன்னாலும் இன்னொரு பக்கம் கார்த்திக்கிற்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல, கடவுள் உனக்கும் கார்த்திக்கிற்கும் ஏற்கனவே ஒரு முடிச்சு போட்டு இருக்காரு என்று பேச ரம்யா ஒரு முடிவெடுத்து உடைந்து போன சிலையில் இருந்து ராமனை மட்டும் தனியாக பிரித்து எடுத்து பார்க்கிறாள்.

துரோகியான தோழி: அடுத்த நாள் ரம்யா அபிராமி வீட்டிற்கு என்ட்ரி கொடுத்து எல்லாருக்கும் ஒரு கிப்ட் கொடுத்து அபிராமி அருணாச்சலம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள். தீபா எங்கே என்று கேட்க அவள் மார்க்கெட் போய் இருப்பதாக சொல்லி போனை போட்டு கொடுக்க தீபா என்ன சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்க, சொல்லி இருந்தா வெயிட் பண்ணி இருப்பேன்ல என்று பேச ரம்யா இந்த வழியா வந்தேன், அப்படியே பார்த்துட்டு போகலாம்னு வந்ததாக சொல்கிறாள். பிறகு மைதிலி, எங்க எல்லாருக்கும் கிப்ட் கொடுத்துட்ட.. தீபாவுக்கு எங்கே என்று கேட்க ரம்யா அவளுக்கு பெரிய கிஃப்டா ஸ்பெஷலா இருக்கு என்று சொல்லி கிளம்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











