தீபாவை கொல்ல முடிவெடுக்கும் ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக் தீபாவின் கணவன் என்று தெரிந்து மிகுந்த கவலையில் இருக்கும் ரம்யா, ரூமுக்குள் எதையோ யோசித்துக்கொண்டு இருக்கிறாள். அங்கிருந்த ராமன் சீதை சிலையை தூக்கி போட்டு உடைத்து, தான் வாழ்க்கையில் ஏமாந்ததை நினைத்து அழுதுக்கொண்டு இருக்கிறாள்
அந்த நேரம் ஆபிசுக்கு வரும் ஐஸ்வர்யா, ரம்யாவை சந்தித்து இந்த வேலையெல்லாம் செய்தது தான் தான் என்றும், நான் கார்த்திக்கின் அண்ணி தான், கார்த்திக் ஒன்னும் தீபாவை விரும்பி கல்யாணம் பண்ணிக்கல, தீபா முதலில் அவனிடம் நட்பாக பழகி அதன் பின் அவனை ஏமாற்றி தான் தாலி கட்டி கிட்டா, அவளை கார்த்திக்கிற்கு பிடிக்காது, கார்த்திக்கிற்கு சரியான ஜோடி நீ தான் என்று சொல்ல, ரம்யா அனைத்தையும் நம்பி விடுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு: இதையடுத்து, இன்றைய எபிசோடில், ரம்யா யோசனையில் உட்கார்ந்திருக்க அப்போது திடீரென அவளுக்கு ஆபிசில் கேக் வெட்டி கார்த்திக்கிற்கு ஊட்டி விட்டு மோதிரம் மாற்றுவது போல தோன்ற அதை அப்படியே உண்மையாக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறாள், மேனேஜருக்கு போனை போட்டு எனக்கு பிறந்த நாள்னு சொல்லி கேக் வெட்ட ஏற்பாடுகளை செய் என்று சொல்கிறாள். இதையடுத்து, பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ரம்யா எல்லாரையும் அழைத்து கேக் வெட்டி, கார்த்திக்கிற்கு ஊட்டி விட போகிறாள். அப்போது,கார்த்திக், மேடம் என் கைலயே கொடுத்துடுங்க என்று சொல்லி வாங்கி கொள்கிறான், இதனால் ரம்யா பல்பு வாங்கி விடுகிறாள்.
பல்பு வாங்கிய ரம்யா: இதனால் அடுத்த பிளான் போடும் ரம்யா, நல்லா வேலை செய்யும் 5 பேருக்கு நான் மோதிரம் போட போறேன் என்று சொல்லி பெயர்களை படிக்க தொடங்குகிறாள். கார்த்திக் இந்த முறை நோ சொல்ல கூடாது என்பதற்காக ரம்யா, அங்கிருந்த அனைவருக்கும், அவள் கையாலேயே மோதிரம் போட்டு விடுகிறாள். அடுத்து ஐந்தாவது ஆளாக கார்த்திக் பெயரை சொல்லி கூப்பிட அவன் நான் வேலைக்கு சேர்ந்தே 10 நாள் தான் ஆச்சு, எனக்கு எதுக்கு மோதிரம் என்று கேட்க ரம்யா உங்களால் கம்பெனிக்கு லாபம் கிடைச்சிருக்கு, நல்லா வேலை செய்றீங்க என்று சொல்லி மோதிரத்தை போட போக இந்த முறையும் கார்த்திக் என் கையில் கொடுத்துடுங்க என்று வாங்கி கொள்ள மீண்டும் ரம்யா பல்பு வாங்குகிறாள். இதையெல்லாம் நோட் பண்ண பி.ஏ ரம்யாவிடம் உங்களையும் கார்த்திக்கையும் பார்க்கும் போது ராமன் சீதையை பார்க்குற மாதிரி இருப்பதாக சொல்ல, ரம்யா யாரை யாரோட சேர்த்து பேசுற என்று அறைகிறாள்.
விபத்தில் சிக்கிய தீபா: அடுத்து தீபா மார்க்கெட்டில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது ரவுடி ஒருவன் வேண்டுமென்றே மோத அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் தீபா, அவனை ஓங்கி அறைய அவன் கத்தியை எடுத்து குத்த வர தப்பி ஓடி வரும் தீபா கார் மீது மோதி கீழே விழுகிறாள். தீபா அடிபட்டு கிடப்பதாக கார்த்திக்கிற்கு போன் வர அவனும் பதறியடித்து ஓடி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











