ஜூஸில் விஷ மாத்திரையை கலந்த ரம்யா.. சைக்கோபால் மாறிய தீபா..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபா கை உடைந்த நிலையில் மருத்துவமனையில் இருக்க, தீபாவை அபிராமி பார்க்க வருகிறாள். அப்போது, தீபாவிற்கு அபிராமி சாப்பாட்டு ஊட்டிவிடுகிறாள். மாமியார் மருமகளுக்கு இடையே நல்ல பிணைப்பு ஏற்படுகிறது.

மறுபுறம் ரம்யாவின் ஆபிஸ் சுவரில் யாரோ கார்த்திக் லவ் ஸ்டோரி என்று எழுதி இருக்க இதை பார்த்து எல்லாரும் ஷாக் ஆகின்றனர், ஆபிஸ் வந்த ரம்யா இதை பார்த்து பயங்கரைமாக கோபமாகி யார் எழுதியது என்று எல்லாரையும் அதட்டி கேள்வி கேட்கிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

Television zee tamil Karthigai Deepam Serial

இதையடுத்து ரம்யா, கார்த்திக்கிடம் சாரி கார்த்திக் யாரு இப்படி தப்பா எழுதி இருக்காங்க என்று சொல்ல, பரவால விடுங்க நான் எதுவும் தப்பா எடுத்துக்கல என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான். இதையடுத்து,சுவற்றில் இப்படி எழுதியவனை கூப்பிட்டு அவனுக்கு பணத்தை கொடுத்து இந்த உன்னுடைய செட்டில்மென்ட் இனிமே உனக்கு இங்க வேலை இல்ல என்று துரத்த அவன் நீங்க சொல்லி தானே மேடம் அப்படி எழுதினேன் என்று சொல்ல, நீ எதிர்பார்த்ததை விட இதுல நிறைய பணம் இருக்கு. இனிமே நீ இங்க இருந்தா நல்லது இல்ல என்று அனுப்பி வைக்கிறாள்.

இன்றைய எபிசோடு: அதனை தொடர்ந்து கார்த்திக் தீபாவுடன் ஹாஸ்பிடல் வரும் வழியில், தீபாவை குத்த வந்த அந்த ரௌடி தீபாவின் கண்ணில்பட, இவன் தான் என்னை குத்த வந்தான் என்று சொல்ல, கார்த்திக் அந்த ரௌடியை துரத்தி செல்கிறான், தப்பி வந்த ரவுடி ரம்யாவுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்ல அவள் உஷாரா இரு, அவன்கிட்ட மாட்டிடாத என்று சொல்கிறாள். பிறகு ரம்யா, தீபாவுக்கு போனை போட்டு நலம் விசாரிக்க அவள் என் ஹஸ்பண்ட் கிட்ட பேசு என்று கார்த்திக்கிடம் போனை கொடுக்க கடுப்பாகும் ரம்யா பேசாமல் அமைதியாகவே இருக்க, கார்த்திக் லைன்ல தான் இருக்காங்க ஆனால் பேச மாட்றாங்க என்று தீபாவிடம் போனை கொடுக்கிறான்.

மோசமான மாத்திரை: பிறகு தீபா பேச, ரம்யா எனக்கு வேறொரு கால் வருது.. தீபா, நான் அப்புறம் பேசுறேன் என்று போனை வைத்து விடுகிறேன் என்று சொல்லி போனை கட் பண்ணி விட்டு, மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்யும் ஒருவரை கூப்பிட்டு ஒரு மாத்திரையை வாங்குகிறாள், மாத்திரையை கொண்டு வந்து கொடுத்தவர் பார்த்து யூஸ் பண்ணுங்க.. இது ரொம்ப மோசமான மாத்திரை என்று சொல்லி கிளம்புகிறார்.

நலம் விசாரிக்கும் ரம்யா: அடுத்து பழத்துடன் ரம்யா, தீபாவை பார்க்க வீட்டிற்கு வருகிறாள். அப்போது தீபாவும் அபிராமியும் பேசிக்கொண்டுஇருக்கின்றனர். அப்போது வரும் ரம்யா, டாக்டர் என்ன சொன்னாரு என்று தீபாவை நலம் விசாரிக்கிறாள். அப்போது,பழம்கொண்டு வந்தேன் ஜூஸ் போட்டு கொடுங்க என்று அபிராமியிடம் கொடுக்கிறாள். நீங்க போடுறீங்களா? இல்ல நானே போட்டு கொண்டு வரவா என்று சொல்ல, அபிராமி நானே போட்டு தரேன் என்று ஜூஸ் போட்டு கொண்டுவர உள்ளே செல்கிறாள்.

ஜூலில் மாத்திரைய கலந்த ரம்யா: இதையடத்து ஜூஸ் போட்டு கொண்டு வரும், அபிராமியிடம் ஜூஸ் கிளாசை வாங்கிக்கொண்டு, என் பிரண்டுக்கு நான் தான் ஜூஸ் கொடுப்பேன் என்று சொல்லி, நைசாக கிளாசை வாங்கிக் கொண்டு அதில், மாத்திரையை கலந்து விடுகிறான். அதை குடித்த தீபா கொஞ்ச நேரத்தில் எல்லாரிடமும் கோபப்பட்டு பொருட்களை தூக்கி போட்டு சைக்கோ போல் நடந்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X