ரம்யா சொன்ன பொய்.. ஏமாந்து போன ஆனந்த்..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ரம்யா, தீபாவிற்கு விரோதியாக மாறி அவளை கொல்ல பிளான் போடுகிறாள். இந்த நேரத்தில், தீபா மார்க்கெட்டில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது ரவுடி ஒருவன் வேண்டுமென்றே மோத அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாள்.
அப்போது அந்த ரவுடியை தீபா அடித்து விட, அவன் கத்தியை எடுத்து குத்த வர, அங்கிருந்து தப்பி ஓடுகிறாள் அப்போது, தீபா கார் மீது மோதி கீழே விழுகிறாள். தீபா அடிபட்டு கிடப்பதாக கார்த்திக்கிற்கு போன் வர அவனும் பதறியடித்து ஓடி வருகிறான். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு: இதையடுத்து இன்றைய எபிசோடில், காரில் மோதியதில் தீபாவின் கை உடைந்து போக கார்த்திக் மிகவும் பதறிப்போகிறான். இதையடுத்து, வீட்டிற்கு வரும் தீபாவை பார்த்து மொத்த குடும்பமும் கவலை அடைகின்றனர். அதன் பின், தீபா கார்த்திக்கிடம் வேண்டுமென்றே ஒரு ரவுடி என்னிடம் வம்பு இழுத்து கொல்ல வந்ததாக சொல்கிறாள், தீபா சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திக், யார் தீபாவை கொல்ல நினைப்பது என்று தெரியாமல் குழம்பிப்போகிறான்.
ஆனந்த் போட்ட பிளான்: மறுபக்கம், ஆனந்த் மற்றும் அருண் ரம்யாவை சந்தித்து, நான் அனுப்புன எம்பிளாயி எப்படி வேலை செய்றான்? என்று ஆனந்த் கேட்க ரொம்ப நடிக்காத அவன் உன் தம்பி தான் என்று எனக்கு தெரியும் என்று ஷாக் கொடுக்கிறாள் ரம்யா. பிறகு அவனை எதுக்கு என்கிட்டே வேலைக்கு அனுப்பின என்று கேட்க அவன் இண்டஸ்ட்ரி பத்தி தெரிஞ்சிக்கணும் அதுக்கு உன் கம்பெனி தான் சரியா இருக்கும்னு அனுப்பியதாக சொல்கிறான்.
இதையடுத்து ஆனந்த், நீ கார்த்திக்கை காதலிக்கிறியா என்று கேட்க, இந்த விஷயத்தை உனக்கு யார் சொன்னது என்று கேட்க, ஐஸ்வர்யா பெயரை சொன்னால் பிரச்சனை ஆகிடும் என்ற காரணத்தால் ஒருத்தர் மூலமாக விஷயம் தெரிய வந்தது என்கிறான். கார்த்திக் என் கம்பெனியில் தொழிலாளி, அவனை நான் எப்படி காதலிப்பேன் என்கிறாள்.
துரோகம் செய்ய மாட்டேன்: ஆனந்த் கார்த்திக்கிற்கு கல்யாணம் ஆகிடுச்சு என்ற உண்மை தெரிந்தால் அவனை துரத்தி விடுவாள் என்று கணக்கு போட்டு உண்மையை சொல்கிறான். எல்லாத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ரம்யா, எல்லாம் எனக்கு தெரியும், தீபா என்னுடைய தோழி தான். அவளுக்கு எப்படி நான் துரோகம் செய்வேன் என்று ஷாக் கொடுக்க இவர்கள் ஏமாற்றத்துடன் வெளியே வருகின்றனர். பிறகு ரம்யாவின் மனசாட்சி எதுக்கு பொய் சொன்ன? ஆமாம்னு உண்மையை சொல்ல வேண்டியது தானே என்று கேள்வி எழுப்ப உண்மையை சொல்ல இது சரியான நேரம் இல்லை என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











