தீபா விரித்த வலையில் சிக்கிய ரியா..ஆனந்த் கொடுத்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் ஆனந்த் மேனேஜரிடம் சொல்லி சதி செய்து கார்த்திக்கை தரையை துடைக்க வைக்கிறார். இந்த வீடியோவை அபிராமியிடம் காட்ட அதைப்பார்த்து அபிராமி மிகுந்த வருத்தம் அடைகிறாள். இதையடுத்து. அபிராமி கம்பெனிக்கு கார்த்திக்கை பார்க்க வரும் நேரத்தில், கார்த்திக் மெஷினுக்குள் கையை விட்டு காயம் ஏற்பட அபிராமி பதறி போய் ஓடி வந்து துடிக்கிறாள்.
நீங்க ஏன் இங்கு வந்தீங்க என்று கேட்க, உன்னை பார்க்கணும் போல இருந்தது. அதான் வந்தேன் என்று சொல்லும் அபிராமி, உனக்கு இதெல்லாம் தேவையா... வேண்டாம் எல்லாத்தையும் ட்டுட்டு வா வீட்டுக்கு போகலாம் என்று கார்த்திக்கை வீட்டிற்கு அழைக்கிறாள். உடனே கார்த்திக், அம்மா, இந்த குடும்பம் பிரியக்கூடாதுன்னு சொல்லிட்டுதானே நான் இந்த வேலைக்கு வந்தேன். வேலை செஞ்சா அடிப்பட தான் செய்யும் அதை பத்தி எல்லாம் நீங்க கவலைப்படாதீங்க வீட்டுக்கு போங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ஜோசியர் டூப்: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வரும் ஜோசியர் ஆனந்த் உயிருக்கு ஆபத்து இருக்கு, அவருடைய மனைவி ரியா தான் பரிகாரம் பண்ணனும் என்று சொல்ல ஆனந்த் அங்கிருந்து கிளம்பி சென்றதும் தீபா அபிராமியிடம் அந்த ஜோசியர் டூப் தான், நான் தான் வர சொன்னேன் என்று சொல்கிறாள். அதன் பிறகு ரியாவிடம் சென்று ஆனந்துக்காக பரிகாரம் பண்ணனும் என்று சொல்ல அவள் என்னால அதெல்லாம் பண்ண முடியாது என்று சொல்கிறாள். பிறகு ஆனந்தை கூப்பிட்டு உனக்காக பரிகாரம் பண்ண முடியாதுனு சொல்றாங்க என்று போட்டு கொடுத்து விடுகிறார்கள். மேலும் அபிராமி சரி விடுப்பா நான் மீனாட்சி கிட்ட சொல்றேன், உனக்காக அவ கண்டிப்பா பண்ணுவாள் என்று சொல்கிறாள்.
ஐடியா கொடுக்கும் ரியா: இதனை தொடர்ந்து ஆனந்த் அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல, எனக்காக ரியா பண்ணுவா என்று வாக்கு கொடுக்க வேறு வழியின்றி ரியா ஒப்பு கொள்கிறாள். அடுத்து ஐஸ்வர்யா ரியாவிடம் நீ ஒன்னும் கவலைப்படாத ஆனந்த் கோவிலுக்கு எல்லாம் வர மாட்டான், அங்க பரிகாரம் செய்ய முடியாதுனு சொல்லிடலாம் என்று ஐடியா கொடுக்கிறாள்.
அடுத்தது என்ன? அதே போல் கோவிலுக்கு வந்த ரியா கடைசி நேரத்தில் பரிகாரம் செய்ய முடியாது, உன்னால முடிந்ததை பார்த்துக்க என்று சொல்ல தீபா ஆனந்தை கூப்பிட்டு நிற்க வைத்து ஷாக் கொடுக்கிறாள். இதனால் ரியா சிக்கி கொள்ள அவளை அங்க அங்கபிரதட்சணம் செய்ய வைத்து கையில் தீ சட்டியை கொடுக்க ரியா சூடு தாங்காமல் தவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











