கலச பூஜையா? கல்யாண நாள் கொண்டாட்டமா? கார்த்திகை தீபம் சண்டே ஸ்பெஷல் எபிசோட்!
சென்னை: மாயா ரேவதியை கடத்தி வைத்து இருந்த நிலையில், கார்த்திக் மகேஷ் இருக்கும் இடம் இதுதான் என தவறான லொகேஷனை அனுப்புகிறான். அந்த இடத்திற்கு மாயா செல்லும் நேரத்தில், ரேவதி இருக்கும் இடத்தை கார்த்திக் கண்டுபிடித்து காப்பாற்றி விடுகிறான். கார்த்திக் சொன்ன இடத்திற்கு போன மாயா அங்கு மகேஷ் இல்லாததால், ஆத்திரத்தோடு கார்த்திக்கிடம் வந்து, எனக்கு என் மகேஷ் வேணும்.. பணத்துக்காக தான் ரேவதியை கல்யாணம் பண்ண பிளான் போட்டோம். எனக்கு என் மகேஷை கொடுத்து விடு, நாங்க உங்க வழிக்கே வர மாட்டோம் என்று தங்களது உறவு குறித்து பேச ரேவதி உள்ளே என்ட்ரி கொடுக்கிறாள். பணத்துக்காகவா இப்படியெல்லாம் பண்ணீங்க என்று ஆவேசப்பட்டு கண்ணத்தில் பளார் பளார் என்று அடிக்கிறாள்
மகேஷ், ரேவதி கள்ளத்தொடர்பு குறித்த விஷயங்கள் மொத்தமாக ரேவதிக்கு தெரிய வர, கார்த்திக்கை நாம் தவறாக நினைத்துவிட்டோமே என்பதை நினைத்து வருத்தப்படுகிறாள். மேலும், இப்படிப்பட்ட ஒரு நல்லவரை விட்டு விட்டு எப்படி ஊருக்கு போவது என்பதை நினைத்து வேதனைப்படும் ரேவதி, கார்த்திக்கிடம் நான் செய்தது குறித்து மன்னிப்பு கேட்கிறாள். அப்போது, கார்த்திக், எதை நினைத்தும் வருத்தப்படாத ரேவதி, எந்த ஒரு பெண்ணுக்கும், மணமேடையில் விருப்பமே இல்லாத ஒருவன் தாலி கட்டினா, இப்படித்தான் கோவம், அந்த கோவத்தில் தான், நீ என்னை திட்டிக்கிட்டு இருந்த, அந்த நேரத்தில் நான் பேசியது எல்லாமே உனக்கு பொய்யாத்தான் தெரிந்தது. இதனால், எல்லா உண்மையையும் ஆதாரத்தோடு நான் உன்னிடம் நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போது நிரூபித்து விட்டேன். இதற்காக நீ என்னை நினைத்து வருத்தப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.

கார்த்திகை தீபம்: இப்படி கார்த்திகை தீபம் சீரியலில் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில், நாளை மாவை 5 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில், இரண்டு மணி நேரம் சண்டே ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. ரேவதி சாமுண்டீஸ்வரியின் திருமண நாள் குறித்து கார்த்திக்கிடம் சொல்ல, கார்த்திக் இந்த திருமண நாளை பெரிய அளவில் திருமண மண்டபத்தில் கொண்டாட வேண்டும் என சாமுண்டீஸ்வரியிடம் சொல்ல, அவளும் நீங்க என்ன ஆசைப்படுகிறீர்களோ அப்படியே செய்துவிடுங்கள் என்கிறாள்.
சந்திரகலாவின் சதி: திருமண நாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்து கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் சந்திரகலா கார்த்தியை சிக்க வைக்க திட்டமிட்டு சிவனாண்டியுடன் சேர்ந்து ராஜசேதுபதி ஊரில் ஒரு பெண்ணை சாமியாட வைத்து சாமுண்டீஸ்வரியின் திருமண தினத்தில் கலச பூஜையை நடத்த வேண்டும், அன்னைக்கு தான் திதி நல்லா இருக்கு என்று சொல்ல வைக்கிறாள். இதனால் அதே தினத்தில் கலச பூஜை நடக்க உள்ள நிலையில் கார்த்திக் இரண்டு இடத்திலும் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. கார்த்தியும் நான் எப்படியாவது மண்டபத்தில் இருந்து வந்து கலச பூஜையில் கலந்து கொள்கிறேன் என்று பரமேஸ்வரி பாட்டிக்கு வாக்கு கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன? கார்த்திக் இரண்டு நிகழ்ச்சியிலும் பங்கேற்க போவது எப்படி? சந்திரகலாவின் திட்டம் பலிக்குமா? என்ற கோணத்தில் இந்த இரண்டு மணி நேர எபிசோட் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


Click it and Unblock the Notifications











