லேடி ஹிட்லர் ரம்யா.. வில்லியின் கோட்டையில் கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், ஐஸ்வர்யா, ஆனந்த் மற்றும் ரியா ஆகியோர் கூட்டு சேர்ந்து கார்த்திக்கை இதே கம்பெனியில் வச்சிருந்தா வேலை வாங்க முடியாது இங்கு அவனுக்கு முதலாளி என்பதால் ராஜமரியாதை தான் கிடைக்கும் என்று சொல்கிறார் ஐஸ்வர்யா.
ஆனந்த் அப்படின்னா என்ன செய்வது என்று யோசிக்க ரியா வேற ஒரு கம்பெனிக்கு அனுப்பலாம் என்று ஐடியா கொடுக்கிறாள். மேலும் எனக்குத் தெரிந்த ஒரு கம்பெனி இருக்கு. அந்த கம்பெனியோட சிஇஓ என் பிரண்டு ரம்யா தான். அவ ஒரு லேடி ஹிட்லர் அவகிட்ட கார்த்திக் மாட்டுனா ரொம்ப கஷ்டப்படுவான் என்று சொல்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ஹிட்லர் ரம்யா: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், ரம்யாவுக்கு போன் போட்டு எனக்கு தெரிஞ்ச ஒருத்தனை அனுப்பி வைக்கிறேன். அவனுக்கு உன் கம்பெனில வேலையை கொடு என்று சொல்கிறான். ரம்யா நீயே கம்பெனி வச்சிட்டு தானே இருக்க அங்கேயே வேலை கொடுக்கலாமே என்று கேட்க இப்போதைக்கு இந்த ஆள் தேவைப்படவில்லை என்று சொல்கிறான். மேலும் அவன் தப்பு பண்ணா நான் ரெகமெண்ட் பண்ண ஆளு என்றெல்லாம் பார்க்க வேண்டாம் வேலையை விட்டு அனுப்பிடு என்று சொல்லி ஃபோனை வைக்கிறான்.
முருங்கைக்காய் சமையல்: மறுபக்கம் வீட்டில், மார்க்கெட் சென்று வந்த தீபா முருங்கைக்காய், முருங்கைப்பூ என அனைத்தும் முருங்கை ஐட்டமாக வாங்கிட்டு வர மீனாட்சி, மைதிலி அவளை கலாய்க்கின்றனர். அபிராமி வந்து என்ன சமையல் என்று கேட்க, முருங்கைக்காய் சமையல் என்று சொல்ல, அபிராமி உடம்புக்கு நல்லது, கல்யாணமான புதுசுல நானும் இப்படி தான் சமைச்சு கொடுத்தேன் என்று சொல்ல அபிராமியையும் சேர்த்து கலாய்க்கின்றனர்.
அடுத்து நடப்பது என்ன: அதன் பிறகு கார்த்திக் ஆபீஸ்க்கு கிளம்ப ஆனந்த் அவனை கூப்பிட்டு நீ நம்ப ஆபீஸ்க்கு வர வேண்டாம், வேற ஒரு ஆபீஸோட அட்ரஸ் கொடுக்கிறேன் அங்கே போ என்று சொல்ல, என்னை தினமும் இடத்தை மாத்திக்கிட்டே இருக்கிறதே வேலையா போச்சு என்று சொல்லி சரி கொடுங்க என்று ரம்யா கம்பெனிக்கு கிளம்பி செல்கிறான். மறுபக்கம் தண்ணீர் பிடித்த ஒரு பெண் தவறுதலாக வந்து ரம்யா மீது மோதிவிட அந்த ரம்யா அந்தப் பெண்ணிடம் சண்டை போடுகிறார். அந்தப் பெண்ணோ உங்கமேல தப்பு என்று சொல்கிறார். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











