இவனா பேரன்? கார்த்தியின் ஏற்பாட்டால் குழப்பமடையும் சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம் சீரியல்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில், விபத்தில் ரோகிணி சிக்கிய நிலையில், பரமேஸ்வரி பாட்டி ரத்தம் கொடுக்க வர சாமுண்டீஸ்வரி அவரை, தடுத்து அனுப்பி விடுகிறாள். இதையடுத்து வேறு ஐடியா போட்ட கார்த்திக், முஸ்லிம் பெண் அணிந்து வரும் பர்தாவை பாட்டிக்கு போட்டு அவரை அழைத்து வருகிறான். அந்த பெண்னை பார்த்து சந்தேகம் அடைந்த சாமுண்டீஸ்வரி நீங்க யாரு என்று விசாரிக்கிறாள். இதைப்பார்த்த அனைவரும் கடுப்பாகி, ரோகிணி உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கும் போது, ரத்தம் கொடுக்க வருபவர்களை இப்படி செய்யக்கூடாது என்று அனைவரும் திட்டுகின்றனர்.

இதைப்பார்த்து, வருத்தப்பட்ட மயில்வாகனம், என் பொண்டாட்டியோட ரத்தம் கிடைக்கல. பாட்டி ரத்தம் கொடுக்க வந்த பாட்டியை, நீங்க வேண்டாம் என்று சொல்லி அனுப்பிட்டீங்க, இப்போ, இவங்களையும் அனுப்பிவிட்டால், என் ரோகினியை காப்பாத்தவே முடியாது. தயவு செய்து, இவங்களை ரத்தம் கொடுக்க விடுங்க என்று, மயில்வாகனம், சாமுண்டீஸ்வரியின் காலில் விழுந்து கெஞ்சுகிறான். இதையடுத்து, பரமேஸ்வரி பாட்டி, ரோகிணிக்கு ரத்தம் கொடுத்து அவளின் உயிரை காப்பாற்றுகிறாள். பின் பர்தாவில் இருப்பது பரமேஸ்வரி என்று தெரியாமல், சாமுண்டீஸ்வரி அவருக்கு நன்றி சொல்கிறாள். இதனால் ரோகிணி உடல்நிலை தேறி இயல்பு நிலைக்கு வருகிறாள்.

zee tamil Karthigai Deepam

அடுத்ததாக ரோகிணியை வீட்டுக்கு அழைத்து வந்ததும் கோவில் பூஜைக்கு செல்வது குறித்து பேச சந்திரகலா கண்டிப்பாக இந்த கோவில் பூஜைக்கு போகணுமா என்று கேள்வி எழுப்புகிறாள். சாமுண்டீஸ்வரி கொடுத்த வாக்கை காப்பாற்றணும். அதனால் நிச்சயமாக போகணும் என்று சொல்கிறாள். இதையடுத்து ராஜராஜன் கார்த்தியை தனியாக அழைத்துச் சென்று ஊர்ல உங்களை எல்லாருக்கும் தெரியும் அப்படி இருக்கும்போது உண்மை தெரிந்து விடாதா என கேள்வி கேட்கிறார். கார்த்திக் என் நண்பன் இளையராஜா எல்லா ஏற்பாட்டையும் பண்ணி வைத்திருக்கான். எதுவும் வெளியே தெரியாது என திட்டத்தை சொல்கிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

இவன் தான் பேரனா: இன்றைய எபிசோடில்,பெண்கன் அனைவரும் ஒரு காரில் கார்த்திக், ராஜராஜன் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் இன்னொரு காரில் என ஊரை நோக்கி வருகின்றனர். ஊருக்குள் நுழைந்ததும் ராஜராஜன் கீழே இறங்கி தனது சொந்த மண்ணை தொட்டு வணங்கி, என் சொந்த மண்ணில் கால் வெச்சு25 வருஷம் ஆச்சு என்று சந்தோசப்படுகிறார். இதைப்பார்த்த சாமுண்டீஸ்வரி, என்ன, சொந்த மண்ணுல கால்வெச்சதும், மனசு சந்தோஷமா இருக்கா, வந்தோமோ திருவிழா பார்த்தோமானு கிளம்பனும், அம்மா, அப்பானு யாரையாவது சொந்தம் கொண்டாடுனீங்க அவ்வளவு தான் என்று கண்டிஷன் போடுகிறாள்.

சாமுண்டீஸ்வரி வருவதை பார்த்து, என் மருமகள் ஊருக்குள்ள வந்து இருக்கா, என் பேரன் அவளை கூட்டிக்கொண்டு வந்துவிட்டான் என்று சந்தோஷத்தோடு, பரமேஸ்வரி பாட்டி சாமுண்டீஸ்வரியை வரவேற்க வருகிறாள். உடனே, சாமுண்டீஸ்வரி நாங்க ஒன்னும் சொந்தம் கொண்டாடிக்கொண்டு இங்க வரல, கொடுத்த வாக்கை காப்பாற்ற வந்தேன் என்கிறாள். மறுபக்கம், விருமன் எப்படியாவது இந்த கோவில் திருவிழாவை நிறுத்த வேண்டும் என்று திட்டம் போடுகிறான். இந்த சமயத்தில் அங்கு வரும் சிவனாண்டியும் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் விருமனுடன் கூட்டணி சேர்கிறான். விருமனின் உறவினர் இன்ஸ்பெக்டர் ஒருவரை அழைத்து இந்த திருவிழாவை நிறுத்த சொல்லி உதவி கேட்கிறான்.

பணக்கார மாப்பிள்ளை: திருவிழாக்கு வரும் ரேவதி பாட்டியிடம் நான் உங்க பேரனை கல்யாணம் பண்ணி இருந்தா, இந்த குடும்பம் ஒன்றாக இருந்து இருக்கும். ஆனால், அது எதுவுமே நடக்காதபடி, இந்த டிரைவர் சதி செய்துவிட்டான் என்று சொல்லி வருத்தப்படுகிறாள். இதைக்கேட்ட சாமுண்டீஸ்வரி, ரேவதி, இவங்க பேரனை விட நல்லவனைத்தான் நான் உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சி இருக்கேன் என்கிறார். அப்போது, பாட்டி, என் பேரன் கார்த்திக், ரொம்ப திறமையானவன், அவன் எவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேன் தெரியுமா, அவன் கால் வைக்காத ஊரே இல்லை. அவ்வளவு திறமையானவன் என்று சொல்லிக்கொண்டு இருக்க, இருபது விலை உயர்ந்த கார் அடுத்தடுத்து வந்து நிற்பதைபார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.

இதைப்பார்த்து வாயைப்பிளந்த சந்திரகலா, அக்கா, இவங்க நம்பளை விட பெரிய பணக்காரங்க போல, இது தெரிந்து இருந்தால், ரேவதியை இவனுக்கே கட்டி கொடுத்து இருக்கலாம். இந்த சொந்து முழுக்க நம்ப பெயருக்கு வந்து இருக்கும் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு, ஆத்திரத்தோடு முறைத்த சாமுண்டீஸ்வரி, பணம் என்ன பணம், இந்த வீட்டு பணம் என்னென்ன செய்யும்னு எனக்கு நல்லத்தெரியும், ஆனால், என் டிரைவர் மாப்பிள்ளை மனசு போல யாருக்கும் மனசு வராது என்று சொல்லி வாயை அடைக்கிறாள்.

இதையடுத்து, கார்த்தின் நண்பன் இளையராஜா காரில் மாஸா, வந்து இறங்குகிறார். அவனை பார்த்து இவன் பாட்டியின் பேரனா என அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். பின் பாட்டி இவர் தான் என் பேரன் என்று சொன்னதும் ரேவதியின் முகமும், சாமுண்டீஸ்வரியின் முகமும் அப்படியே மாறுகிறது. சாமுண்டீஸ்வரி மனதிற்குள் நல்ல வேலையாக இவனை என் மகளுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்று நினைத்துக் கொள்கிறாள். அப்போது இளையராஜா அனைவரிடம் வணக்கம் சொல்லிவிட்டு, நீதான் ரேவதியா உன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பாட்டி என்னிடம் போனில் பலமுறை சொன்னார்கள். ஆனால், அதற்குள் நீ டிரைவரை திருமணம் செய்து கொண்டதாக பாட்டி சொன்னார்கள்.

ஏன் உனக்கு வேற மாப்பிள்ளை கிடைக்கவில்லையா.. படித்த பெண் தானே நீ எதற்கு டிரைவரை திருமணம் செய்து கொண்டாய் என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்கிறான். இளையராஜாவின் பேச்சால் கடுப்பான ராஜராஜன் கொஞ்சம் அடக்கி வாசி என்று சொன்னதும், இளையராஜா, நான் மாப்பிள்ளையிடம் சில விஷயம் பற்றி பேச வேண்டும், என்று சொல்லிவிட்டு கார்த்திகை தனியாக அழைத்து சென்று சாரி, மாப்பிள்ளை கொஞ்சம் ஓவரா போய் விட்டேன் என்னை மன்னித்துவிடு என்று சொல்கிறான். பின் மயில்வாகன், இளையராஜா நல்லத்தான் நடிக்கிறான், ஆனால், இப்படியே ஓவராக ஆக்டிங் போட்டால், அத்தை சாமுண்டீஸ்வரி கிட்ட நல்லா மாட்டிக்கொள்வான், கொஞ்ச ஜாக்கிரதையா இரு என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X