கார்த்திக்கிடம் சவால் விடும் ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ஆபீஸுக்கு வரும் கார்த்திக்கிடம். நீ நம்ம ஆபீஸுக்கு வர வேண்டாம், வேற ஒரு ஆபீஸோட அட்ரஸ் கொடுக்கிறேன் அங்கே போ என்று சொல்ல, என்னைய தினமும் இடத்தை மாத்திக்கிட்டே இருக்கிறதே வேலையா போச்சு என்று சொல்லி சரி கொடுங்க என்று ரம்யா கம்பெனிக்கு கிளம்பி செல்கிறான். ரம்யா சரியான ஹிட்லர் அவள் தான் கார்த்திக்கிற்கு சரியான ஆள் என்று திட்டம் போடுகின்றனர்.
மறுபக்கம், கார்த்திக் ரம்யாவின் கம்பெனிக்கு சென்று கொண்டிருக்கும் போது, தண்ணீர் பிடித்துக்கொண்டு நடந்து வந்த ஒரு பெண் மீது காரில் வந்த ரம்யா மோதிவிடுகிறாள். இதனால், அந்த பெண் கீழே விழுந்துவிட, அங்கு வரும் கார்த்திக், ரம்யாவிடம் சண்டைபோடுகிறான். அப்போது ரம்யா, நான் யாருனு தெரியாம என்கிட்ட வம்புக்கு வரியா என்று கேட்க, கார்த்திக், கார் சாவி, போனை பிடுங்கி வைத்துக்கொண்டு, தண்ணீர் பிடித்துக்கொடுத்தால் தான் தருவேன் என்று சொல்ல வேறு வழியில்லாமல் ரம்யா தண்ணீர் பிடித்து கொடுக்கிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சந்தேகப்படும் தீபா: கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில், தீபா ஐஸ்வர்யாவிடம் வாங்க அக்கா ஹாஸ்பிடலுக்கு போய் செக்கப் பண்ணிட்டு வரலாம் என்று சொல்லி கூப்பிட அவள் என் குழந்தையை எனக்கு பாத்துக்க தெரியும் செக்கப் எல்லாம் ஒன்னும் தேவை இல்ல, நான் நல்லா ஆரோக்கியமா தான் இருக்கேன் என்று சொல்லி விடுகிறாள். இந்த விஷயத்தை தீபா மீனாட்சி மற்றும் மைதிலியிடம் சொல்ல அவர்களுக்கு ஐஸ்வர்யா மீது சந்தேகம் வருகிறது.
உச்சகட்ட கோபத்தில் ரம்யா: மறுபக்கம் ஆபீசுக்கு ரம்யா கோபமாக வர கார்த்திக் இதே ஆபீசுக்கு இன்டர்வியூக்கு வருகிறான். இதை அறிந்து ரம்யா பயங்கர கடுப்பாகிறாள். என்னை தேடி தேடி வந்து பிரச்சனை செய்கிறாயா என்று கேட்க, ஆனந்த் அனுப்பினதாக கார்த்திக் சொல்ல சரி உனக்கு வேலை போட்டுத் தரேன் என்று வேலை கொடுப்பது மட்டுமல்லாமல் இங்க வேலை செய்வதற்கு சில கண்டிஷன்கள் இருக்கு சம்பளம் இவ்வளவு தான் என்று அனைத்தையும் எடுத்து சொல்கிறாள்.
பிறகு மேனேஜரை கூப்பிட்டு இவர வேலைக்கு எடுத்துக்க என்று சொல்ல அவர் மாணிக்கத்துக்கு அசிஸ்டென்டா இரு, அவர்கிட்ட வேலையை கத்துக்க என்று சொல்கிறார். கலகலப்பான மனிதரான மாணிக்கம், நான் உனக்கு வேலை கத்து கொடுத்து பெரிய ஆளாக்குவேன் என்று அழைத்துச் செல்கிறார்.
மகிழ்ச்சியில் தீபா: இதையடுத்து, வீட்டில், அபிராமி தீபாவை கூப்பிட்டு எல்லாருக்கும் உன்னுடைய பாட்டை கேக்கணும்னு ஆசையா இருக்கு பாடு என்று சொல்ல தீபா இதுக்காக தான் இவ்வளவு நாள் போராடிக்கிட்டு இருந்தேன் என்று பாடல் ஒன்றைப் பாட அனைவரும் அதைக் கேட்டு ரசிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











