திட்டமிட்டு கைது செய்யப்படும் ராஜராஜன்.. கார்த்திக் சத்தியத்தை காப்பாற்றுவாரா? கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், கார்த்திக், ராஜராஜன் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் காரில் ஊருக்கு வருகின்றனர். ஊருக்குள் நுழைந்ததும் ராஜராஜன் கீழே இறங்கி தனது சொந்த மண்ணை தொட்டு வணங்கி, இந்த ஊருக்கு வந்து 25 வருஷம் ஆச்சி என சந்தோசப்படுகிறான். இதைப்பார்த்த, சாமுண்டீஸ்வரி, என்ன சொந்த ஊருக்கு வந்தோமா திருவிழா பார்த்தோமானு கிளம்பனும் என்று கண்டிஷன் போடுகிறாள். பரமேஸ்வரி பாட்டி சாமுண்டீஸ்வரியை வரவேற்க வர, சாமுண்டீஸ்வரி நாங்க ஒன்னும் சொந்தம் கொண்டாட வரல, கொடுத்த வாக்கை காப்பாற்ற வந்ததாக சொல்கிறாள். விருமன் எப்படியாவது இந்த கோவில் திருவிழாவை நிறுத்த வேண்டும் என்று திட்டம் போடுகிறான். இந்த சமயத்தில் அங்கு வரும் சிவனாண்டியும் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் விருமனுடன் கூட்டணி சேர்கிறான். விருமனின் உறவினர் இன்ஸ்பெக்டர் ஒருவரை அழைத்து இந்த திருவிழாவை நிறுத்த சொல்லி உதவி கேட்கிறான்.
இப்படி ஒரு பக்கம் பிரச்சனை போய் கொண்டு இருக்க, கார்த்திக்கின் நண்பன் இளையராஜா ஓவர் பில்டப்புக்கு நடுவே காரில் வந்து இறங்கி, பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்குகிறான். பின் ரேவதியிடம் உன்னைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்று, பாட்டி ஆசைப்பட்டார்கள். ஆனால், நீ டிரைவரை கல்யாணம் பண்ணிக்கிட்டியா என்று சொல்லி, கிண்டலடிக்கிறான். அவனைப்பார்த்த சாமுண்டீஸ்வரி இவனா பரமேஸ்வரியின் பேரன் என குழப்பம் அடைகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

வளையல் வாங்கிய பாட்டி: இன்றைய எபிசோடில், பரமேஸ்வரி பாட்டி ரேவதிக்காக வளையல் வாங்கி தருகிறாள். அப்போது ரேவதி நீங்களே போட்டு விடுங்க என்று சொல்ல, உனக்கு வளையலை நான் போட்டு விட்டு என்ன பயன். உன் புருஷன் தானே போட்டு விடணும் என்று சொல்லி கார்த்திக்கிடம் வளையலை கொடுத்து, போட்டு விட சொல்கிறாள். பாட்டி கொடுத்ததால், கார்த்தியும் மறுக்க முடியாமல் போட்டு விடுகிறான்.
இன்னொரு பக்கம், விருமன் ஏற்பாடு செய்த அவனது சகலை இன்ஸ்பெக்டர், ராஜராஜனிடம் உன் பொண்டாட்டி நல்லா அழகா இருக்கிறதுனால தான் உன் அம்மா அப்பாவை விட்டு ஓடிட்டியா? என்று வம்புக்கு இழுக்கிறான். மேலும், பொண்டாட்டி மட்டும் இல்ல, உன் பொண்ணுங்களும் நல்லா அம்சமாகத்தான் தான் இருங்காங்க என்று பேச, ராஜராஜன் கோபப்பட்டு, என் கிட்டையே பெண்ணுங்கள பத்தி தப்பா பேசுறியா... இவ்வளவு நேரம் உன்னை விட்டு வெச்சதே ரொம்ப தப்பு என்று, இன்ஸ்பெக்டரின் சட்டையை பிடித்து அடிக்கிறான். பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இருந்த இன்ஸ்பெக்டர் என்னையே அடிக்க பாயுறியா? உன்ன சும்மா விட மாட்டேன் என்று, ராஜராஜனின் சட்டையை பிடித்து இழுத்து கைது செய்ய முயற்சி செய்கிறான்.
அப்போது, ராஜராஜன் மரியாதையா சட்டையில் இருந்து கையை எடு, தப்பு பண்ணது நீ என்று சொல்ல, இதை கேட்காத அந்த இன்ஸ்பெக்டர், ராஜராஜனை இழுத்து சென்று ஜீப்பில் ஏற்றுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்


Click it and Unblock the Notifications











