கார்த்திக், தீபாவுக்கு சாந்தி முகூர்த்தம்.. சர்ப்ரைஸ் கொடுத்த அபிராமி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ஆபீசுக்கு கோபமாக வரும் ரம்யா, கார்த்திக் அங்கு இருந்ததை பார்த்து கடுப்பாகிறாள். என்னை தேடி தேடி வந்து பிரச்சனை செய்கிறாயா என்று கேட்க, ஆனந்த் அனுப்பினதாக கார்த்திக் சொல்ல சரி உனக்கு வேலை போட்டுத் தரேன் என்று வேலை கொடுப்பது மட்டுமல்லாமல் இங்க வேலை செய்வதற்கு சில கண்டிஷன்கள் இருக்கு என்று கார்த்திக்கை கேவலமாக பேசுகிறாள்.

இதையடுத்து, வீட்டில், அபிராமி தீபாவை கூப்பிட்டு எல்லாருக்கும் உன்னுடைய பாட்டை கேக்கணும்னு ஆசையா இருக்கு பாடு என்று சொல்ல தீபா இதுக்காக தான் இவ்வளவு நாள் போராடிக்கிட்டு இருந்தேன் என்று பாடல் ஒன்றைப் பாட அனைவரும் அதைக் கேட்டு ரசிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil television Karthigai Deepam serial May 7th Episode

கார்த்திகை தீபம் சீரியல்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், தீபா ஒரு பாடலை பாடி முடிக்க அபிராமி அதை கேட்டு ரசித்து பாராட்டுகிறாள், பிறகு உனக்காக ஒரு விஷயம் பண்ண போறேன் என்று சொல்லி கொண்டிருக்க வீட்டிற்குள் ஜோசியர் என்ட்ரி கொடுக்கிறார். அபிராமி ஜோசியரை வரவேற்று உட்கார வைக்கிறாள். அதன் பிறகு கார்த்திக்கிற்கும் தீபாவுக்கும் கல்யாணமாகி ரொம்ப நாள் ஆகுது, ஆனால் இன்னும் நடக்க வேண்டியது எதுவும் நடக்கல என்று சொல்லி சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறித்து தர சொல்ல அதை கேட்டு தீபா எமோஷனாகிறாள்.

மீனாட்சியும் மைதிலியும் முருங்கைக்காயாக சமைத்து நினைத்ததை சாதிச்சிட்ட போல என்று கலாய்க்கின்றனர். தீபா நான் இதையெல்லாம் நினைச்சு சமைக்கல என்று சொல்லியும் அவளை கலாய்த்து எடுக்கின்றனர். அதன் பிறகு ஜோசியர் நாள் குறித்து தர மீனாட்சி இன்னைக்கு ஒரு நாள் நான் வீட்டுக்குள் வரேன், தீபாவோட ரூமை நான் அலங்காரம் செய்கிறேன் என்று சொல்கிறாள்.

Zee tamil television Karthigai Deepam serial May 7th Episode

ஷாக்கான ரம்யா: மறுபக்கம் ரம்யாவும் கம்பெனியின் மாணிக்கமும் கார்த்திக்கிடம் இன்னைக்கு ஒரு புது மிஷின் வருது, அதை இன்ஸ்டால் பண்ண போறாங்க, எப்படி பண்றாங்கனு பார்த்து கத்துக்க என்று சொல்கிறார். மிஷினை இன்ஸ்டால் செய்யும் போது கார்த்திக் இதை இப்படி பண்ண கூடாது, அப்படி பண்ணா மிஷின் பத்திக்கிட்டு எரியும் என்று சொல்ல எல்லாரும் ஷாக்காக ரம்யா கீழே இறங்கி வருகிறாள், நீ உன்னுடைய வேலையை மட்டும் பாரு. இத்தனை வருஷமா இவங்க எல்லாம் வேலை செய்றாங்க என்று சொல்லி கோபப்பட கார்த்திக் அமைதியாகி விடுகிறான்.

அடுத்து நடப்பது என்ன: கொஞ்ச நேரத்தில் அவன் சொன்னபடியே மிஷின் தீ பிடித்து எரிகிறது. இதனால் ரம்யா கோபமாகி கேபினுக்கு சென்று விடுகிறாள், கார்த்திக்கை கூப்பிட்டு இந்த முறை நீ சொன்ன மாதிரி நடந்து விட்டது என்பதற்காக மத்த விஷயத்தில் எல்லாம் மூக்கை நுழைக்கிற வேலையை வச்சுக்காமல் உன்னுடைய வேலையை ஒழுங்கா பாரு என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கிறாள். வீட்டில் மீனாட்சியும் மைதிலியும் தீபாவை கலாய்த்தபடியே ரூமை தயார் செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X