முதலிரவுக்கு ரெடியாக கார்த்திக்.. விவாகரத்து கேட்ட மீனாட்சி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கம்பெனியின் மாணிக்கம் கார்த்திக்கிடம் இன்னைக்கு ஒரு புது மிஷின் வருது, அதை இன்ஸ்டால் பண்ண போறாங்க, எப்படி பண்றாங்கனு பார்த்து கத்துக்க என்று சொல்கிறார். மிஷினை இன்ஸ்டால் செய்யும் போது கார்த்திக் இதை இப்படி பண்ண கூடாது, அப்படி பண்ணா மிஷின் பத்திக்கிட்டு எரியும் என்று சொல்ல எல்லோரும் ஷாக்காக ரம்யா கீழே இறங்கி வருகிறாள்.

வீட்டில் அபிராமி ஜோசியரை வரவேற்று உட்கார வைக்கிறாள். அதன் பிறகு கார்த்திக்கிற்கும் தீபாவுக்கும் கல்யாணமாகி ரொம்ப நாள் ஆகுது, ஆனால் இன்னும் நடக்க வேண்டியது எதுவும் நடக்கல என்று சொல்லி சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறித்து தர சொல்கிறாள். அதன் பிறகு ஜோசியர் நாள் குறித்து தர மீனாட்சி இன்னைக்கு ஒரு நாள் நான் வீட்டுக்குள் வரேன், தீபாவோட ரூமை நான் அலங்காரம் செய்கிறேன் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil television Karthigai Deepam serial May 8th Episode

கார்த்திகை தீபம் சீரியல்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், முதல் இரவுக்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்திறது, வீட்டில் தீபாவை கலாய்த்து கொண்டே முதலிரவு ரூமை ஏற்பாடு செய்து முடித்து வைக்கின்றனர். அதன் பிறகு தீபாவை ரெடி பண்ணி ரூமிலேயே இருக்க சொல்கின்றனர். மறுபக்கம் கார்த்திக் ரம்யா கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்க அவனை ஓவர் டியூட்டி பார்க்க சொல்கின்றனர். கார்த்திக்கும் அதே போல் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வர அவனிடம் புது துணி எல்லாம் இருக்கு, போய் ரெடியாகிட்டு வாங்க என்று மீனாட்சி சொல்ல எதுக்கு அண்ணி என்று கேட்க மேலே தீபா வெயிட் பண்ணிட்டு இருக்கா, அவ சொல்லுவா என்று கலாய்க்கின்றனர்.

ரொமான்ஸ்: இதையடுத்து கார்த்திக் மேலே வர ரூம் அலங்காரங்களை பார்த்து விட்டு இதுக்கு தான் என்னை ஓட்டிட்டு இருந்தார்களா? என்று தீபாவிடம் ரொமான்ஸாக பேசி விட்டு சரி ப்ரெஷ் ஆகிட்டு வரேன் என்று குளிக்க செல்கிறான். மறுநாள் லாயர் ஒருவர் வீட்டிற்கு வந்து விவாகரத்து கேட்டு அப்ளை பண்ணி இருந்தது யாரு என்று கேட்கிறார், எல்லோரும் புரியாமல் இருக்க மீனாட்சி நான் தான் என்று ஷாக் கொடுக்கிறாள்.

விவாகரத்து: ஆனந்த்திடம் நீங்க தான் வேற கல்யாணம் பணிக்கிடீங்கல எனக்கு விவாகரத்து கொடுத்து அறுத்து விட்டுடுங்க, நான் என் வாழ்க்கையை பார்த்துக்கறேன், வேற கல்யாணம் பண்ணிக்கறேன் என்று சொல்ல ஆனந்த் கையெழுத்து போட முடியாது என்று மறுக்கிறான், இது இருந்தால் தானே ஆடுவ என்று டாகுமெண்ட்ஸை கிழித்து போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X