மாத்திரையால் சிக்க போகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக் தீபாவிற்கும் முதல் இரவுக்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. வேலையை முடித்து விட்டு வரும் கார்த்திக்கிடம், புது துணி எல்லாம் இருக்கு, போய் ரெடியாகிட்டு வாங்க என்று மீனாட்சி சொல்ல எதுக்கு அண்ணி என்று கேட்க மேலே தீபா வெயிட் பண்ணிட்டு இருக்கா, அவ சொல்லுவா என்று கலாய்க்கின்றனர். இதையடுத்து கார்த்திக் மேலே வர ரூம் அலங்காரங்களை பார்த்து விட்டு இதுக்கு தான் என்னை ஓட்டிட்டு இருந்தார்களா? என்று தீபாவிடம் ரொமான்ஸாக பேசி விட்டு சரி ப்ரெஷ் ஆகிட்டு வரேன் என்று குளிக்க செல்கிறான்.
மறுநாள் லாயர் ஒருவர் வீட்டிற்கு வந்து விவாகரத்து கேட்டு அப்ளை பண்ணி இருந்தது யாரு என்று கேட்கிறார், எல்லாரும் புரியாமல் இருக்க மீனாட்சி நான் தான் என்று ஷாக் கொடுக்கிறாள். ஆனந்திடம் நீங்க தான் வேற கல்யாணம் பண்ணிக்கிடீங்கல எனக்கு விவாகரத்து கொடுத்து அறுத்து விட்டுடுங்க, நான் என் வாழ்க்கையை பார்த்துக்கறேன், வேற கல்யாணம் பண்ணிக்கறேன் என்று சொல்ல ஆனந்த் கையெழுத்து போட முடியாது என்று மறுக்கிறான், இது இருந்தால் தானே ஆடுவ என்று டாகுமெண்ட்ஸை கிழித்து போடுகிறான். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக் ஆபிசில் எல்லாரும் வேலை செய்து கொண்டிருக்க ரம்யா ரவுண்ட்ஸ் வரும் போது ஒருவன் கையில் வைத்திருந்த பொருளை கீழே தவற விட அதை பார்த்த ரம்யா நீ எல்லாம் வேலை செய்ய தகுதியே இல்லாதவன் என்று கண்டபடி திட்டுவது மட்டுமின்றி அவனை அறைய போகும் சமயத்தில் கார்த்திக் அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்துகிறான்.
தப்பு பண்ணா திட்டுற உரிமை உங்களுக்கு இருக்கு ஆனால் ஒரு தொழிலாளியை கை நீட்டி அடிக்க உங்களுக்கு உரிமை கிடையாது என்று சொல்லி ரம்யாவை அடக்க அவள் கோபமாக கேபினுக்கு செல்கிறாள். மாணிக்கம் அவ்வளவு தான் இன்னைக்கு உன்னை வேலையை விட்டு அனுப்ப போறாங்க என்று சொல்கிறார்.

உன் வேலையை மட்டும் பாரு: அதே போல் ரம்யா மேனேஜரை கூப்பிட்டு அந்த கார்த்திக்கை வர சொல்லுங்க இன்னைக்கே அவனை வேலையில் இருந்து துரத்துறேன் என்று சொல்ல மேனேஜர் ரம்யாவை அடக்க, கார்த்திக் வேண்டாம் என்பதால் அவனை இப்போ அனுப்பிட்டா நீங்க தோற்று போன மாதிரி ஆகிரும் என்று சொல்லி அவளது மனதை மாற்ற கார்த்திக்கை கூப்பிட்டு நீ உன்னுடைய வேலையை மட்டும் பாரு, ஹீரோயிசம் காட்டுற வேலையெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறாள்.

வசமாக சிக்கிய ஐஸ்வர்யா: அடுத்து அபிராமி வீட்டில் ஐஸ்வர்யா யாருக்கும் தெரியாமல் ஏதோ மாத்திரை போட்டு அந்த அட்டையை வெளியே தூக்கி போடுகிறாள். தீபா இதை கவனித்து அந்த அட்டையை எடுத்து சென்று மீனாட்சியிடம் கொடுத்து என்ன மாத்திரை என்று விசாரிக்க பீரியட் தள்ளி போவதற்கான மாத்திரை என்று தெரிய வருகிறது. இதனால் ஏதோ தப்பா இருக்கே என்று ஐஸ்வர்யா மீது சந்தேகம் வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











