ரேவதி கழுத்தில் விழுந்த செயின்.. அத்தையை கடுப்பாக்கிய கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: கோவில் திருவிழா நடக்க வேண்டும் என்றால், ராஜசேதுபதியின் மகன் வரவேண்டும் என்கிற நிலை இருப்பதால் கார்த்திக், அத்தை, மாமாவை இந்த வீட்டுக்கு நிச்சயம் கூட்டிக்கொண்டுவருவேன் என்று சொல்லிவிட்டு, அத்தையின் ஊருக்கு போகிறான். ஊரில் ஒருவனுக்கு உதவி செய்ய அவன் நண்பனாகிவிட, கார்த்திக் இந்த ஊரில் வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்க, அந்த நண்பனும் வீடு வாடகைக்கு பிடித்து கொடுக்கிறான்.

இதையடுத்து, இருவரும் அந்த ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு செல்கின்றனர். அப்போது சாமுண்டீஸ்வரிக்கு அனைவரும் மரியாதை கொடுப்பதைப் பார்த்துவிட்டு, கார்த்திக் எதுவுமே தெரியாதது போல, சாமுண்டீஸ்வரி பற்றி விசாரிக்க, அந்த நண்பன் இவங்க தான் இந்த ஊரிலேயே பெரிய ஆள், இவங்களுக்கு நான்கு பெண்கள், இவங்களுக்கு ஆம்பளைங்களே பிடிக்காது என்று சொல்கிறான். சாமுண்டேஸ்வரி தரப்பில் சிலம்பாட்டம் ஆட இருந்த நபர் வராமல் போன நிலையில் இன்று நடக்க போவது இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam serial

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சாமுண்டேஸ்வரி தரப்பில் போட்டியில் பங்கேற்க யாரும் இல்லை என்பதால் தனக்கு ஆதரவாக போட்டியில் பங்கேற்று ஜெயித்தால் 15 பவுன் செயினை பரிசாக கொடுப்பதாக அறிவிக்கிறான். ஆனால், யாரும் போட்டியிட வராததால், இந்த ஊரில் ஆம்பளைங்கள் யாருமே இல்லையா என்று கேட்க, அந்த நேரத்தில் மாஸாக என்ட்ரி கொடுக்கிறார் கார்த்திக். அப்போது அருணும் ஆனந்தும் உடன் இருக்க, என் தம்பி சிலம்பம் சுத்துனா காத்தே ஒரு நிமிஷம் நிற்கும் என்று பில்டப் மேல் பில்டப் கொடுக்கின்றனர்.

சிலம்பாட்டம்: கார்த்திக் போட்டியாளராக களத்தில் இறங்கி சிவனாண்டிக்கு வாய்ப்பே கொடுக்காமல் ஓடவிடுவதை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். சாமுண்டீஸ்வரிக்கு யார் இந்த பையன் எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே என்று தோன்றுகிறது. மேலும், அவரின் நான்கு பெண்களும் யாருடா இவன் என்று வாயை பிளந்து பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.இதையடுத்து, கார்த்திக் சிவனாண்டியை ஜெயித்துவிடுகிறார். இதைப்பார்த்த ஊர் மக்கள் அனைவரும்,ஊர் மானத்தை காப்பாற்றி விட்டான் என்று கொண்டாடுகின்றனர்.

zee tamil karthigai deepam serial

கார்த்தி செய்த தரமான சம்பவம்: இதையடுத்து சாமுண்டேஸ்வரி, புவனேஸ்வரியை கூப்பிட்டு பரிசை கொடுக்கும் முன்பு, புவனேஸ்வரி இந்த முறை செயினை தூக்கிபோடாமல் கையில் கொடுங்க என்று சொல்ல, கடுப்பான சமுண்டீஸ்வரி யாராக இருந்தாலும் தூக்கித்தான் போடுவேன் என்று சொல்லி செயினை தூக்கி வீச, கார்த்திக் சிலம்பம் குச்சியில் செயினை வாங்கி அதை அப்படியே தூக்கி வீச, அது ரேவதி கழுத்தில் விழுகிறது. நான் இந்த போட்டியில் பரிசுக்காக கலந்துக்கல, நீங்க யாரும் ஆம்பளையே இல்லையா என கேட்டதால் தான் கலந்துக்கிட்டேன். எனக்கு இந்த பரிசு வேண்டாம் என்று சொல்கிறார் கார்த்திக்.

zee tamil karthigai deepam serial

கழுத்தில் விழுந்த செயின்: அந்த செயின் மகள் கழுத்தில் விழுந்ததால் சாமுண்டீஸ்வரி ஆத்திரம் அடைகிறாள். இதைப்பார்த்த ஊர் மக்கள் யார் டா இவன், சாமுண்டீஸ்வரிக்கிட்ட பேசவே யாரும் பயப்படுவாங்க இவன், செயினையே தூக்கி போட்டுவிட்டானே என்று பெருமையாக பேசுகின்றனர். இதை கவனிக்காத கார்த்திக் மீசையை முறுக்கி விட்டபடி கிளம்பி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X